8 ஆண்டுகளுக்குப்பின் விஷாலுக்கு ஜோடியாக நடிக்கும் பிரபல தமிழ் நடிகை!
சென்னை : தமிழ் திரையுலகில் மிகப் பிரபலமான நண்பர்களாக இருந்து வரும் விஷால் மற்றும் ஆர்ய முதல் முறையாக எதிரியாக மாறி எனிமி படத்தில் உள்ளனர் இப்படத்தை ஆனந்த் ஷங்கர் இயக்கி உள்ளார்.
குறும்பட இயக்குனர் து. பா.சரவணன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள திரைப்படத்திற்கு "வீரமே வாகை சூடும்" என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. டைட்டில் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்நிலையில் விஷால் அடுத்ததாக அறிமுக இயக்குனரின் இயக்கத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்தில் ஜோடியாக பிரபல தமிழ் நடிகை ஒருவர் 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைகிறார்.

சுமாரான வெற்றி
தொடர் வெற்றி படங்களின் மூலம் கோலிவுட்டில் ஆக்சன் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஷால் தயாரிப்பாளராகவும் பல படங்களை தயாரித்து வருகிறார். அவ்வகையில் கடைசியாக வெளியான சக்ரா திரைப்படம் மிகப்பெரிய பொருட்செலவில் புதிய டெக்னாலஜியில் உருவானாலும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. மாறாக சுமாரான வெற்றியையே பெற்றது. சக்ரா படத்தின் தோல்வியை அடுத்து கதைகளை மிக கவனமாக தேர்ந்தெடுத்து நடித்து வரும் விஷால் அடுத்தது தனது நீண்டகால நண்பரான ஆர்யாவுடன் இணைந்து எனிமி என்ற படத்தில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் மிக நெருங்கிய நண்பர்களாக இருந்து வரும் ஆர்யா மற்றும் விஷால் முதல் முறையாக எதிரிகளாக நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் இப்படத்தை அரிமா நம்பி, இருமுகன், நோட்டோ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கியுள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி இணையதளத்தை கலக்கியது. பக்காவான ஆக்சன் த்ரில்லர் படமாக உருவாகி இருக்கும் எனிமியில் கதாநாயகியாக இளம் நடிகை மிருணாளினி நடித்துள்ளார் சென்னை மற்றும் துபாய் உள்ளிட்ட பல பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்துள்ளது. இப்படத்தின் கிளைமாக்ஸ் சண்டையின் போது விஷாலுக்கு ஏற்பட்ட பலத்த காயத்தின் காரணமாக தீவிர சிகிச்சை மேற்கொண்டு குணமாகி உள்ளார்.

வீரமே வாகை சூடும்
எனிமி படத்தின் படப்பிடிப்பை முடித்த கையோடு அடுத்த படத்தின் வேலைகளையும் விஷால் தொடங்கியிருக்க பிரபல குறும்பட இயக்குனர் து. பா.சரவணன் இயக்கத்தில் நடித்து வருகிறார் .இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் தொடங்கப்பட்டு நடைபெற்று வந்தது . விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹையாதி இதில் நடிக்கிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். விஷாலின் பிறந்த நாளை முன்னிட்டு டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையதளத்தை கலக்கியது. இப்படத்திற்கு "வீரமே வாகை சூடும்" என மாஸான டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. பக்கா ஆக்ஷன் த்ரில்லர் கதையில் உருவாகி வரும் இப்படத்தின் போஸ்டரில் விஷால் உருட்டு கட்டையுடன் ரவுடிகளை அடித்து துவம்சம் செய்து விட்டு வெறித்தனமாக பார்க்கின்றவாறு உள்ளது.

விஷாலுக்கு ஜோடியாக
வீரமே வாகை சூடும் படப்பிடிப்பு அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் சூழலில் விஷாலின் அடுத்த படத்தை பற்றிய முக்கிய அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி அடுத்ததாக விஷால் நடிக்க உள்ள படத்தை அறிமுக இயக்குனர் வினோத் என்பவர் இயக்க உள்ளார். இப்படத்தை விஷாலின் நண்பர்களான ராணா மற்றும் நந்தா இணைந்து தயாரிக்க உள்ளனர். முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் மிக விரைவிலேயே தொடங்க இருக்க இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரபல தமிழ் நடிகை நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

8 ஆண்டுகளுக்குப் பிறகு
கடந்த 2013ஆம் ஆண்டு இயக்குனர் திரு இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான சமர் திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இதில் நடிகை சுனைனா மற்றும் த்ரிஷா என இரண்டு கதாநாயகிகள் நடித்திருந்தார்கள். 8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த புதிய திரைப்படத்தின் மூலம் சுனைனா மீண்டும் விஷாலுக்கு ஜோடியாக நடிக்கிறார் . சமர் படத்தில் சுனைனா சிறப்பு படத்தில் மட்டுமே நடித்து இருந்தாலும் நிறைவான கதாபாத்திரமாக வந்து சென்றிருப்பார். சுனைனாவின் நடிப்பில் வெளியான சில்லுக்கருப்பட்டி மற்றும் ட்ரிப் ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. நல்ல நடிப்புத் திறமை வாய்ந்த நடிகையாக இருந்தாலும் நல்ல வாய்ப்புகள் அமையாததால் தமிழ் சினிமாவில் தனக்கென இடத்தை பிடிக்க முடியாமல் தவித்து வருகிறார். அதேசமயம் தெலுங்கிலும் சில படங்களில் நடித்து வரும் சுனைனாவுக்கு ராஜராஜ சோரா என்ற படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி பாக்ஸ் ஆபீசை கலக்கியது. இதனையடுத்து நடிகர் நகுல் உடன் மூன்றாவது முறையாக இணைந்து நடித்துள்ள எரியும் கண்ணாடி மிக விரைவிலேயே ரிலீசாக உள்ளது.
Recommended Video

ஜோடியாக சுனைனா
இந்நிலையில் 2013ஆம் ஆண்டு வெளியான சமர் படத்திற்கு பிறகு நீண்ட வருடங்களாக விஷாலுடன் இணைந்து நடிக்காமல் இருந்த சுனைனா இப்பொழுது அறிமுக இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ள செய்தி கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தொடர்ந்து சவாலான திரைப்படங்களில் நடித்து வெற்றிக்கு மேல் வெற்றிகளை குவித்து வரும் விஷால் 8 ஆண்டுகளுக்கு பிறகு சுனேனா உடன் மீண்டும் ஜோடியாக நடிக்க இருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. சில்லுக் கருப்பட்டியில் சுனைனாவின் நடிப்பை பலரும் பாராட்டு இருக்க அதையடுத்து இப்பொழுது விஷாலுடன் இணைந்து நடிக்கும் இந்த புதிய திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.


Click it and Unblock the Notifications