மச்சத்தால் அழகான ரம்ய ராணிகள்… மிச்சம் வைக்காமல் வர்ணிக்கும் ரசிகர்கள்!

சென்னை : மச்சம் ஒரு கவிதையின் தொடக்கப்புள்ளி, உதட்டில் மச்சம், கழுத்தில் மச்சம், கன்னத்தில் மச்சம், எத்தனை மச்சம் இருந்தாலும் அது மிச்சம் இல்லாமல் வர்ணிக்கப்படுகிறது.

காதலனுக்கு காதலியின் மச்சம் அழகு, காதலிக்கு காதலன் எச்சம் அழகு. இப்படி மச்சத்தை பற்றி எழுதிக்கொண்டே போகலாம்.

மச்சத்திற்கு அதிர்ஷ்டம் இருக்கானு தெரியாது ஆனால், பலரை கிறக்கடிக்கும் மச்சம் சிலரை ஓவியனாகவும், பலரை கவிதை எழுதவைத்துள்ளது. என்னையும் நடிகைகளின் மச்சத்தை பற்றி ஆராய வர்ணிக்கவைத்துள்ளது.

ஹைலைட் மச்சம்

ஹைலைட் மச்சம்

மச்சம் என்றதும் போசுக்கென்று நினைவுக்கு வருபவர் நயன்தாரா. இவரை பார்த்த பிறகுதான் கடவுளும் மிகுந்த ரசனைக்காரர் தான் என்று நினைக்கத் தோன்றுகிறது. அழகியை படைத்து திருஷ்டிப்பொட்டும் வைத்து அனுப்பி உள்ளார். நடு மூக்கிற்கு கீழே, மேலுதட்டின் நட்ட நடு குழியில் பசக்கென்று ஒட்டி உள்ளது அந்த ஹைலைட் மச்சம்.

ஒய்யார மச்சம்

ஒய்யார மச்சம்

அடுத்த அதிர்ஷ்ட தேவதை சிம்ரன், மச்ச சாஸ்திரம், சாமுத்திரிகா லட்சணம் என அனைத்து கனகச்சிதமாக பொருந்தி 90ஸ் கிட்ஸ்களில் கனவு கன்னியாக ஒரு ரவுண்ட் கட்டினார் சிம்ரன். மூக்கிற்கு கீழ்.. உதட்டிற்கு மேல் ஒய்யாரமாக உள்ளது அந்த கருப்பு நிலா.

ஜொலிக்கும் மச்சம்

ஜொலிக்கும் மச்சம்

மலையாள அழகி காவ்யா, ஆண்களின் மனதை மிச்சம் இல்லாத கொள்ளை கொண்ட அழகு தேவதை இவரது முகத்தில் காணப்படும் மச்சத்தை மூக்கு மறைவு மச்சம் என்று வர்ணிக்கலாம். சட்டென்று பார்த்தார் தெரியாது, இடது பக்கத்தை க்ளோஸ் அப்பில் பார்த்தால் கன்னமும் மூக்கும் கைகுலுக்கும் இடத்தில் அந்த மச்சம் ஜொலிக்கும்.

ஆச்சரிய மச்சம்

ஆச்சரிய மச்சம்

புஸ், புஸ் கன்னங்கள்... ஜில் ஜில் சிரிப்பு.... ஆண்களை வசியம் அழகு என அதிரடியாக வளைத்து போட்டுவிட்டார் கீர்த்தி சுரேஷ். அவருக்கும் ஒரு இடத்தில் மச்சமிருக்கிறது.. அது கீர்த்தியின் வலது கன்னத்திற்கு கீழே கன்னத்திலும் இல்லாமல், கழுத்திலும் இல்லாமல், ஒரு ரெண்டும் கெட்டான் இடத்தில் இருக்கிறது. கன்னத்திற்கும், கழுத்திற்கும் மாறி மாறி நகர்ந்து ஆச்சரியப்படுத்துகிறது.

அழகு மச்சம்

அழகு மச்சம்

கீர்த்தி சுரேஷ் பற்றி பேசிய விட்டு அவரது அம்மாவை பற்றி பேசலா பஞ்சாயத்து ஆயிடாதா.. கீர்த்தியின் அம்மா நடிகை மேனகாவிற்கு மூக்கருகில் ஒரு மச்சம் இருப்பது நினைவிற்கு வந்தது. கன்னத்திற்கும் மூக்கிற்கும் இடையே இருந்த அந்த அழகு மச்சம் இப்போது மருவாக மாறி இவரை மேலும் அழகாக்கி உள்ளது.

ஒளிரும் மச்சம்

ஒளிரும் மச்சம்

தனது அழகால் மட்டுமல்ல அசத்திய நடிப்பாலும் ரசிகர்களின் மனம் கவர்ந்த வாணிபோஜனை சின்னத்திரை நயன்தாரா என இவரை ரசிகர்கள் தலைக்குமேல் தூக்கி கொண்டாடி வருகின்றனர். இவருக்கு, கழுத்துக்கு பின்னால் அழகான மச்சம் ஒன்று தனது அழகை மறைத்துக்கொண்டு ஒளிந்துக்கொண்டு இருக்கிறது. மச்சமும் ஒரு அழகின் அம்சன் தான், பல்லாயிரம் பாவைகளில் பார்வைகளை சலனம் இல்லாமல் கடந்து போகத் தெரிந்த எனக்கு இந்த மச்சம் முற்றுபுள்ளி வைத்து தடுக்கிறதே மூனு புள்ளி ஒரு ஆச்சரியக்குறி.. ஒரு சின்ன கவிதை ...அவ்வளவுதான்...

More from Filmibeat

Read more about: mole மச்சம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X