சந்திரமுகி 2 படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகை.. எப்படி இந்த வாய்ப்பு கிடைச்சது?
சென்னை : ரஜினிகாந்த், நயன்தாரா, ஜோதிகா மற்றும் பிரபு நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த படம் சந்திரமுகி.
இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாகி வருகிறது. பி வாசுவே இயக்கிவரும் இந்தப் படத்தின் நாயகனாக ராகவா லாரன்ஸ் இணைந்துள்ளார்.
இந்தப் படத்தின் சூட்டிங் மைசூருவில் துவங்கி நடைபெற்று முடிந்த நிலையில் தற்போது ஐதராபாத்தில் பிரம்மாண்ட செட் போடப்பட்டு நடைபெற்று வருகிறது.

ரஜினியின் சந்திரமுகி படம்
நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா, ஜோதிகா, பிரபு, வடிவேலு என முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த படம் சந்திரமுகி. இந்தப் படத்தில் ரஜினிகாந்தின் மாஸ், நயன்தாராவின் ப்ரஷ் லுக், ஜோதிகாவின் மிரட்டலான நடிப்பு மற்றும் வடிவேலுவின் நகைச்சுவை சாம்ராஜ்யம் படத்தை சிறப்பான வெற்றியை நோக்கி கொண்டு சென்றது.

சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த சந்திரமுகி
இதையடுத்து இந்தப் படம் திரையரங்குகளில் 200 நாட்கள் வெற்றிகரமாக ஓடி சிறப்பான வசூலையும் பெற்றுத் தந்தது. இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் குறித்த ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் ஒருபுறம் இருந்த நிலையில் முதல் பாகத்தை இயக்கிய பி வாசுவின் இயக்கத்தில் தற்போது படத்தின் இரண்டாவது பாகம் உருவாகி வருகிறது. இதில் பிரபல நடிகர் ராகவா லாரன்ஸ் இணைந்துள்ளார்.

சந்திரமுகி 2 படத்தின் சூட்டிங்
படத்தின் பூஜை எளிமையாக போடப்பட்டு மைசூருவின் முதல் கட்ட சூட்டிங் நடைபெற்று முடிந்த நிலையில், தற்போது ஐதராபாத்தில் பிரம்மாண்ட அரண்மனை செட் போடப்பட்டு சூட்டிங் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் ஹீரோயின் குறித்த அறிவிப்புகள் இதுவரை வெளியாகாத நிலையில், படத்தின் பிரபல பாலிவுட் நடிகை கங்கணா ரனாவத் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

வாய்ப்பை கேட்டு பெற்ற கங்கணா
சந்திரமுகி படத்தை போலவே இந்தப் படத்திலும் பிளாஷ்பேக் காட்சிகள் சிறப்பாக அமையவுள்ளதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிளாஷ்பேக், ரசிகர்களை வெகுவாக கவரும் என்றும் கூறப்பட்டுள்ள நிலையில் இந்தக்கதை குறித்து யதேச்சையாக கேள்விப்பட்ட கங்கணா ரனாவத் இந்தக் கேரக்டரை கேட்டு வாங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கங்கணா சமீபத்திய படங்கள்
முன்னதாக தாம் தூம், தலைவி உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்துள்ள கங்கனாவிற்கு தலைவி படம் சிறப்பான விமர்சனங்களை பெற்றுத் தந்துள்ளது. ஆனாலும் அவரது சமீபத்திய படங்கள் அவருக்கு வெற்றிப்படங்களாக அமையாத நிலையில் தற்போது சந்திரமுகி 2 படத்தின் வாய்ப்பை அவர் கேட்டுப் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது படத்திற்கான எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

சந்திரமுகி படத்தின் பிளாஷ்பேக் காட்சிகள்
சந்திரமுகி படத்தில் பிளாஷ்பேக் காட்சிகளிலும் ஜோதிகாவே நடித்திருப்பார். புகைப்படத்தில் மட்டுமே சந்திரமுகி கேரக்டர் காட்டப்பட்டிருக்கும். இந்நிலையில் தற்போது சந்திரமுகி 2 படத்தில் பிளாஷ்பேக் காட்சிகளில் கங்கணா நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் சந்திரமுகி 2 படத்தில் பிளாஷ்பேக் காட்சிகள் மேலும் அழுத்தம் நிறைந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லாரன்சுடன் இணைந்த வடிவேலு
இந்தப் படத்தில் நடிகர் வடிவேலுவும் இணைந்துள்ளார். சந்திரமுகி படத்தில் ரஜினியுடன் இவர் செய்த காமெடி கலாட்டாக்கள் ரசிகர்களின் எவர்கிரீன் பேவரைட் லிஸ்ட்டில் உள்ளவை. அந்த வகையில் தற்போது லாரன்சுடன் அவர் எந்த மாதிரியான கேரக்டரில் எந்த மாதிரியான காமெடி கலாட்டாவை செய்வார் என்பதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் உள்ளது.


Click it and Unblock the Notifications











