உங்களை இப்படி பார்க்கவே ஆசை..தொடர்ந்து நிர்வாண போட்டோஷூட் நடத்துங்க..ரன்வீர் சிங்கிடம் கேட்ட நடிகை

மும்பை : பிரபல பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் எப்போதுமே சர்ச்சைகளுக்கு பெயர் போனவர்.

Recommended Video

Ranveer Singh Trending Photos-ஐ குறிப்பிட்டு எழுந்த அரசியல்

இதன்மூலமே ஏராளமான ரசிகர்களை ஈர்த்துள்ளவர். படவாய்ப்புகளையும் அதிகமாக பெற்று வருபவர்.

தற்போது ரன்வீர் சிங்கின் நிர்வாண போட்டோஷுட் குறித்தும் இவர் கருத்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்

பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியான 83 படம் சிறப்பான விமர்சனங்களை அவருக்கு பெற்றுத் தந்தது. சிறந்த வசூலையும் இந்தப் படம் குவித்தது. இதையடுத்து அடுத்ததாக அந்நியன் படத்தின் ரீமேக்கில் அவர் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நிர்வாண போட்டோஷுட்

நிர்வாண போட்டோஷுட்

நடிப்பை தவிர்த்து மாடலிங்கிலும் ஈடுபட்டு வரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரபல பத்திரிகை ஒன்றிற்காக நிர்வாண போட்டோஷுட் நடத்தி அதன் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இந்தப் புகைப்படங்கள் இந்திய அளவில் மிகவும் சர்ச்சைக்குரிய விஷயமாக மாறியுள்ளது.

தீபிகா படுகோனே ஆதரவு

தீபிகா படுகோனே ஆதரவு

இந்த போட்டோஷுட்டிற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், இந்தப் புகைப்படங்களை தான் முன்னதாக பார்த்ததாகவும் இவை தனக்கு பிடித்திருந்ததாகவும் அவரது மனைவியும் பிரபல பாலிவுட் நடிகையுமான தீபிகா படுகோனே தெரிவித்திருந்தார். எப்போதும் வித்தியாசமான விஷயங்களை முயற்சித்துவரும் ரன்வீருக்கு தான் எப்போதும் துணை நிற்பேன் என்றும் கூறியிருந்தார்.

ரன்வீருக்கு எதிர்ப்பு

ரன்வீருக்கு எதிர்ப்பு

ஆனால் ரன்வீரின் இந்த போட்டோஷுட்டிற்கு மிகுந்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அவருக்கு எதிராக வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. பெண்களின் உணர்வை அவர் நசுக்கியுள்ளதாகவும் அந்த வழக்குப்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரன்வீரின் இந்த நிர்வாண போட்டோஷுட் சர்ச்சைக்கு வித்யா பாலன், ஆலியா பட் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ராக்கி சாவந்த் ஆதரவு

ராக்கி சாவந்த் ஆதரவு

இந்நிலையில் பிரபல பாலிவுட் கவர்ச்சிப்புயல் ராக்கி சாவந்தும் ரன்வீருக்கு தற்போது சப்போர்ட் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார். தான் தற்போதுதான் துபாயிலிருந்து வந்ததாகவும் வந்தவுடன் ரன்வீர் விவகாரம் குறித்து கேள்விப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். ரன்வீர் தொடர்ந்து இதுபோன்ற போட்டோஷுட்களை நடத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஹேண்ட்சம்மாக இருக்கிறார்

ஹேண்ட்சம்மாக இருக்கிறார்

அவரை இதுபோல பார்க்கவே தான் விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் அவர் இந்தப் புகைப்படங்களில் மிகவும் ஹேண்ட்சம்மாக இருப்பதாகவும், அவரை தான் உடனடியாக பார்க்க விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த போட்டோஷுட்டை வெளியிட்டதன்மூலம் ரன்வீர் பெண்களின் பேவரிட்டாக மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கண்ணில் ஏற்பட்ட அமைதி

கண்ணில் ஏற்பட்ட அமைதி

மேலும் இதுபோன்ற நிர்வாணமான ஆண்மகனின் புகைப்படங்களை பார்ப்பதன்மூலம் கண்கள் மற்றும் இதயத்தில் ஒரு அமைதி ஏற்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகையான ராக்கி சாவந்த், கன்னடம், மராத்தி, தெலுங்கு மற்றும் தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளவர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X