பணப்பெட்டியுடன் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த பிரபலம்... அடுத்து என்ன நடக்கும் ?

சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 90 நாட்களை கடந்து விட்டது. இறுதிப் போட்டிக்கு இன்னும் சில நாட்களே உள்ளது. 18 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட இந்த ஷோவில் தற்போது 7 பேர் மட்டுமே உள்ளனர்.

Recommended Video

Bigg Boss வீட்டை விட்டு 3 லட்சம் பணத்துடன் வெளியேறிய Thamarai Selvi | Sarathkumar, Parampara

நேற்று ஓப்பன் நாமினேஷன் நடத்தப்பட்டு, வழக்கம் போல் அனைவரையும் நாமினேட் செய்தார் பிக்பாஸ். டிக்கெட் டு ஃபினாலேவை வென்று நேரடியாக இறுதிப் போட்டிக்கு சென்று விட்டதால் அமீர் மட்டும் நாமினேட் செய்யப்படவில்லை.

வீட்டிற்குள் வந்த பணப்பெட்டி

வீட்டிற்குள் வந்த பணப்பெட்டி

நாமினேட் செய்ய கடைசி வாரம் என்பதால் பலரும் தங்கள் மனதில் மற்றவர்களை பற்றி என்ன கருத்து உள்ளது என்பதை வெளிப்படையாக, முகத்திற்கு நேராக பேசினர். இதனால் பல வாக்குவாதங்களும் நடைபெற்றது. இந்நிலையில் இந்த வாரம், நாமினேஷன் இல்லாமல் போட்டியில் இருந்து வெளியேற்ற பணப் பெட்டி பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டுள்ளது.

பணப்பெட்டியுடன் வந்த பிரபலம்

பணப்பெட்டியுடன் வந்த பிரபலம்

இன்றைய 93 வது எபிசோடிற்கான இரண்டாவது ப்ரொமோவில் நடிகர் சரத்குமார், பிக்பாஸ் வீட்டிற்குள் வருகிறார். போட்டியாளர்கள் முன் 3 லட்சம் என எழுதப்பட்ட தகதகக்கும் பணப் பெட்டியை திறந்து வைத்து பேசுகிறார்.

இது தான் பரிசு தொகையா

இது தான் பரிசு தொகையா

கண்ணாடி கூண்டிற்குள் நின்று பேசும் சரத்குமார், ஒரு போட்டின்னு வந்தா வெற்றி தோல்வி நிச்சயம் இருக்கும். 3 லட்சம் ரூபாய். இவ்வளவு தான் இருக்கும் என நினைக்கலாம். ஆனால் இதற்கு மேலும் இருக்கலாம். எனக்கே தெரியாது. இதை எடுத்துக்கிட்டு வீட்டுக்கு போயிடலாம்ன்னு நினைக்கலாம். அது உங்களை பொருத்தது.

ஒருவருக்கு தான் வெற்றி

ஒருவருக்கு தான் வெற்றி

எல்லோரும் வெற்றி பெற முடியாது. யாரோ ஒருவர் தான் வெற்றி பெற முடியும். உங்களில் ஒருவர் தான் வெற்றி பெற போகிறீர்கள். முடிவு எடுக்குகிறது ரொம்ப ரொம்ப முக்கியம். இன்று எடுக்கும் தீர்மானங்கள் தான் நாளைய சாதனைகள் என சொல்கிறார் சரத்குமார். இதனால் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேற போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

யாரு எடுப்பாங்கன்னே தெரியலியே

யாரு எடுப்பாங்கன்னே தெரியலியே

இந்த ப்ரோமோவை பார்த்து விட்டு, ராஜு, பிரியங்கா, சிபி தவிர யாரு எடுத்தாலும் பரவாயில்லை. தாமரை அக்கா தான் இந்த பணப் பெட்டியை எடுக்க போறாங்க. மாஸ் சார்...சரத்குமார் சார் எதிர்பார்க்காத என்ட்ரி. யாரு எடுப்பாங்கன்னே தெரியலியே. இவர் நம்ம லிஸ்டலயே இல்லையே.

இவர் தான் எடுப்பாரா

இவர் தான் எடுப்பாரா

தாமரை, அமீர், பாவனி மூன்று பேரில் யாராவது தான் எடுப்பாங்க. தகுதியானவர்கள் தான் இறுதிப் போட்டிக்கு போகனும். தாமரை தான் எடுத்துட்டு வெளியே போக போறாருன்னு நினைக்கிறேன் என பலரும் கமெண்ட் செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X