விஜய்யை ஆடவைத்த ஜானி மாஸ்டர்.. அடுத்த ஆட்டத்திற்கு தயாராகும் அரபிக்குத்து நடன இயக்குநர்!

சென்னை : தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 150க்கும் மேற்பட்ட படங்களில் கொரியோகிராபராக பணியாற்றியுள்ளவர் ஜானி மாஸ்டர்.

Recommended Video

Mocobot-டை முதலில் பயன்படுத்தியது யார்? | Vikram | Interval Making Scene

இவர் சிறப்பான நடன இயக்குநராக அறியப்பட்டுள்ள நிலையில், தற்போது அடுத்தக்கட்டத்திற்கு தாவியுள்ளார்.

ஜானி மாஸ்டர் ஹீரோவாக அறிமுகமாகும் யதா ராஜா ததா பிரஜா என்ற படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது.

நடன இயக்குநர் ஜானி மாஸ்டர்

நடன இயக்குநர் ஜானி மாஸ்டர்

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்திய என இந்திய அளவில் 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார். விஜய், சூர்யா என இவர் ஆட்டுவிக்காத ஹீரோவே இல்லை என்று கூறலாம். சமீபத்தில் வெளியான விஜய்யின் பீஸ்ட் படத்திலும் சிறப்பான நடன அசைவுகளை தந்தவர் ஜானி மாஸ்டர்.

அரபிக்குத்து பாடலின் நடன இயக்குநர்

அரபிக்குத்து பாடலின் நடன இயக்குநர்

இந்தப் படத்தில் அரபிக்குத்து பாடலுக்கு சர்வதேச அளவில் அதிகமான நடனங்களை பலரும் பதிவு செய்து இணையதளங்களில் பதிவிட்டனர். தெலுங்கில் அதிகமான படங்களில் பணியாற்றி வருகிறார் ஜானி மாஸ்டர். அலா வைகுந்தபுரமுலு என்ற படத்தில் அல்லு அர்ஜுனுக்காக புட்டபொம்மா பாடலுக்கு இவர் அமைத்த நடனம் சர்வதேச அளவில் கவனத்தை பெற்றது.

சிவகார்த்திகேயன், சூர்யாவிற்கு நடனம்

சிவகார்த்திகேயன், சூர்யாவிற்கு நடனம்

அந்தப் படத்தின் வெற்றிக்கும் காரணமாக அமைந்தது. தொடர்ந்து சிவகார்த்திகேயனின் டாக்டர், சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட படங்களிலும் சிறப்பான நடனங்களை இவர் செய்துள்ளார். தொடர்ந்து சிறப்பான படங்களில் இணைந்து நடன இயக்குநராக பணிபுரிந்துவரும் ஜானி மாஸ்டர், தற்போது அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்துள்ளார்.

ஹீரோவாக களமிறங்கும் ஜானி மாஸ்டர்

ஹீரோவாக களமிறங்கும் ஜானி மாஸ்டர்

இவர் தற்போது ஹீரோவாக களமிறங்கியுள்ளார். யதா ராஜா ததா பிரஜா என்ற படத்தில் ஹீரோவாக இணைந்துள்ளார். ஓம் மூவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா மூவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் பூஜை நேற்றைய தினம் போடப்பட்டு படப்பிடிப்பும் துவங்கப்பட்டுள்ளது.

3 மொழிகளில் ரிலீஸ்

3 மொழிகளில் ரிலீஸ்

இந்தப் படத்தில் சினிமா பாண்டி படத்தில் நடித்திருந்த விகாஸ் மற்றொரு நாயகனாக நடிக்கவுள்ளார். ஸ்ரஸ்தி வர்மா நாயகியாக நடிக்கிறார். படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தை தயாரித்துள்ளார் ஸ்ரீநிவாஸ் விட்டலா. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கலகலப்பான ஜானி மாஸ்டர்

கலகலப்பான ஜானி மாஸ்டர்

எப்போதுமே செட்களில் கலகலப்பாக இருப்பவர் ஜானி மாஸ்டர். விஜய்யின் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பின்போது விஜய், பூஜா ஹெக்டே உள்ளிட்டவர்களை இவர் ஆட்டுவித்த மேக்கிங் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X