பிரபல காமெடி நடிகரின் தாயார் மறைவு!
தூத்துக்குடி : படங்களில் தங்களது காமெடிகள் மூலம் ரசிகர்களை சந்தோஷப்படுத்துபவர்கள் காமெடியன்கள். சமீபமாக அண்ணாச்சி என்று கூறியதும் நமக்கு ஞாபகம் வருவது காமெடி நடிகர் இமான் அண்ணாச்சி தான்.
பிரபல நகைச்சுவை நடிகரும், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளருமான இமான் அண்ணாச்சி சன் தொலைக்காட்சியில் நடத்தும் சின்ன குழந்தைகளின் ஒரு நிகழ்ச்சி மக்களிடையே மிகவும் பிரபலம்.

'காதல்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இமான் அண்ணாச்சி, 'கோலிசோடா', 'மெட்ராஸ்', 'ஜில்லா', 'பூஜை' உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் இவருடைய தாயார் கமலா இன்று காலை உயிரிழந்துள்ளார். இவரது இறுதி ஊர்வலம் நாளை அவர்களது சொந்த ஊரான தூத்துக்குடியில் நடைபெற இருக்கிறது.
Comments


Click it and Unblock the Notifications