Don't Miss!
- News
அதானி விவகாரத்தை தொடர்ந்து எழுப்பும் எதிர்க்கட்சிகள்.. இன்றும் முடங்கும் நாடாளுமன்றம்?
- Lifestyle
Today Rasi Palan 06 February 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் பண பரிவர்த்தனை செய்யாமல் இருந்தால் நல்லது...
- Sports
எங்கள் இனிய நாளை கெடுத்து விடாதீர்கள்.. மன வேதனையாக இருக்கு.. திருமணமான முதல் நாளே ஆப்ரிடி டிவிட்
- Automobiles
இது செம காராச்சே! இதோட விலையை திடீர்ன்னு இவ்வளவு கூட்டிட்டாங்க! காரணம் இது தான்!
- Finance
7வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..! விரைவில் குட் நியூஸ்
- Technology
பார்வை இழந்தவர்களுக்கான புது சூப்பர் Smartwatch.! இந்தியாவில் உருவான அசத்தல் கண்டுபிடிப்பு.!
- Travel
இனி திருப்பதியில் உண்டியல் பணம் கணக்கிடும் போது கண்ணாடி சுவர்கள் வழியே நீங்களும் பார்க்கலாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
எல்லாமே போச்சு..வாழ்றதா சாகுறதானே தெரியல..கதறி அழுத காமெடி நடிகை!
சென்னை : தமிழில் பல திரைப்படங்களில் வடிவேலு, சந்தானம் ஆகியோருடன் இணைந்து நடித்து பிரபலமானவர் காமெடி நடிகை பிரேம பிரியா.
2006ம் ஆண்டு தொட்டி ஜெயா என்ற படத்தில் வில்லியாக அறிமுகமான பிரேம பிரியா, வடிவேலுவுடன் பல ஹிட் காமெடி காட்சியில் நடித்து பிரபலமானார்.
தற்போது பட வாய்ப்பு இல்லாமல்,கணவரை பறிகொடுத்து வறுமையின் பிடியில் சிக்கி என்ன செய்வது என்று தெரியாமல் தத்தளித்து வருகிறார்.
Agent Kannayiram Twitter Review: சாதித்தாரா சந்தானம்? ஏஜென்ட் கண்ணாயிரம் ட்விட்டர் விமர்சனம் இதோ!

நடிகை பிரேம பிரியா
பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள பிரேம பிரியா, தொட்டி ஜெயா படத்தின் மூலம், சினிமாவில் நுழைந்தேன். என்னுடைய சினிமா பயணம் மிகவும் விளையாட்டு தனமாகவே ஆரம்பமானது. ஆனால் இன்னைக்கு எனக்கு சோறுபோடுவதே சினிமா தான்.

வருமானமே இல்லை
எங்களைப் போன்ற சிறு கலைஞர்களுக்கு ஒரு நாளைக்கு பெரிதாக எந்த சம்பளமும் கிடைத்துவிடாது. ஒரு நாளைக்கு பத்தாயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் மட்டுமே சம்பளம் வரும். அதுவும் மாதத்திற்கு மூன்று நாள் மட்டுமே படப்பிடிப்பு இருக்கும். அடுத்த இரண்டு மூன்று மாதங்களுக்கு எந்த படங்களுமே இருக்காது என்பதால், இந்த பணத்தை வைத்துக்கொண்டு குடும்பத்தை நடத்த முடியுமா.

யாரும் உதவி செய்யவில்லை
என்னுடைய கணவர் ஒரு டைரக்டர். அவர் கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால், இப்போது என் குடும்பம் மிகவும் வறுமையில் இருக்கிறது. என்னுடைய கணவரும், ஒரு இயக்குநர் நானும் நடிகையாக இருக்கிறேன். ஆனால் என் கணவர் இறந்து ஏழு மாதங்கள் ஆகிறது இதுவரைக்கும் சினிமா வட்டாரத்திலிருந்து யாரும் எங்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை.

அனாதையாக இருக்கிறேன்
நானும் எனது குழந்தையும் இப்போது யாருடைய ஆதரவும் இல்லாமல் அனாதையாக இருக்கிறோம் எனக்கு ஒரே ஒரு அக்கா இருந்தாங்க அவங்களும் கடந்த ஆண்டு கொரோனாவில் இறந்து விட்டார்கள். இப்பொழுது யாருடைய துணையும் இல்லாமல் வாழ்வதா... சாவதா என்றே தெரியாமல் மிகவும் மன வேதனையில் அனாதையாக நிற்கிறோம்.

கண்கலங்கிய பிரேம பிரியா
சினிமாவில் பட வாய்ப்புகள் இல்லாததால் வேறு ஏதாவது வேலை செய்யலாம் என்று நான் சென்றபோதும் எனக்கு சரியான வேலைகள் கிடைக்கவில்லை அப்பொழுதும் என்னை ஒரு நடிகையாக தான் பார்த்தார்கள் சமுதாயத்தில் ஒரு நடிகைக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. நடிகை என்பதால் அனைத்திற்கும் இவர்கள் சரிப்பட்டு வந்து விடுவார்கள் என்ற எண்ணம் மக்கள் இடையே இருக்கிறது என கண் கலங்கி பேசினார்.