விரைவில் விவாகரத்து..மீண்டும் நடிக்க இதுதான் காரணம்..மனம் திறந்த காமெடி நடிகை !
சென்னை : தமிழ் சினிமாவில், கவுண்டமணி, செந்தில், வடிவேலு, சந்தானம், யோகிபாபு, சூரி, சதீஷ், பாலசரவணன், லொள்ளு சபா சுவாமிநாதன் என இன்னும் ஏராளமாக காமெடி நடிகர்கள் இருக்கிறார்கள் .
ஆனால், வெள்ளித்திரையில் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்கும் பெண்களை விரல் விட்டு எண்ணலாம். அப்படி வடிவேலுவுடன் இணைந்து காமெடியில் கலக்கியவர் தான் பிரியங்கா.
திருமணத்திற்கு பின் சினிமாவிற்கு பிரேக் விட்டிருந்த பிரியங்கா தற்போது, சீரியல்களில் பிஸியாக நடித்து வருகிறார். இவர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு மனம் திறந்து பேட்டி அளித்துள்ளார்.

காமெடி நடிகை பிரியங்கா
காமெடி நடிகை பிரியங்கா என்றால் அவ்வளவாக யாருக்கும் தெரியாது ஆனால், இந்த காமெடியை சொன்னால் அனைவருக்கும் தெரியும்.. "ஏட்டைய்யா.. ஃப்ரீயா இருந்தீங்கனா அப்படியே வீட்டுப்பக்கம் வாங்க" அதாங்க ஐந்து புருஷன் காமெடி. இந்த படத்தில் மட்டுமல்ல வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்த அனைத்து காமெடி காட்சியும் எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை ஏற்படுத்தவில்லை.

பத்து வருடமாக நடிக்கவில்லை
திருமணத்திற்கு பிறகு கிட்டத்தட்ட பத்து வருஷமாக சினிமா தொடர்பே இல்லாமல் குழந்தைகளை பார்த்துக்கொண்டு இருந்தேன். பார்ப்பவர்கள் எல்லாம் மறுபடி நடிங்க என்று கேட்டார்கள், பசங்களும் நான் நடிக்கனும்னு ஆசைப்பட்டாங்க அதனால் மீண்டும் நடிக்க வந்தேன். இதனால், இந்த பத்து வருஷம் சினிமாவில் நிறைய மாற்றங்கள் வந்துவிட்டது என்றார்.

பயங்கரமான வில்லி
சினிமாவில் காமெடி நடிகராக இருந்தாலும் சின்னத்திரையில் பயங்கரமான வில்லியாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். தற்போது இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் கன்னத்தில் முத்தமிட்டால் என்ற தொடரில் படுமோசமான வில்லியாக மிரட்டி வருகிறார். இப்போதுதான் சினிமா வாய்ப்புகள் வர ஆரம்பித்து இருக்கிறது வெகுவிரைவில் சினிமாவில் நடிப்பேன் என்றார்.
Recommended Video

விரைவில் விவாகரத்து
மேலும், எனது திருமண வாழ்க்கை சரியாக இல்லை இதனால் விவாகரத்து செய்ய முடிவு செய்திருக்கிறேன். மேலும்,என் அம்மாவிற்கு புற்றுநோய்க்கான சிகிச்சை அளித்து வருகிறேன் இதற்கு அதிக அளவில் பணம் தேவைப்படுவதாக கூறினார். நகைச்சுவை நடிகையாக இருந்து அனைவரையும் சிரிக்க வைத்தாலும் சொந்த வாழ்க்கை சோகம் நிறைந்ததாக உள்ளது.


Click it and Unblock the Notifications











