For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  விற்க தெரிந்தவன் தான் வாழ தெரிஞ்சவன்.. அங்காடி தெரு படத்தின் வசனம்... இன்றும் ஆச்சர்யம் !

  |

  சென்னை : பல பல முன்னனி நடிகைகளை விளம்பரங்களுக்கு பயன்படுத்தி தன் வியாபார யுக்தியை பலப்படுத்தி சென்னையில் ஒரு பிரமாண்ட கோட்டை கட்டியவர்கள் சரவணா ஸ்டோர்ஸ் குழுமத்தினர் . குறிப்பாக நடிகை சினேகா இடம் பெற்ற சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரப்பிகள் மிகவும் பிரபலம் .

  ஒரு பக்கம் வியாபாரம் , உழைப்பு என்று இருந்தாலும் இன்னொரு பக்கம் சினிமா நட்சத்திரங்களையும் நட்சத்திரங்களின் அந்தஸ்தையும் சரியாக பயன் படுத்தி பல பல கிளைகளை திறந்தனர். ட்ரெண்டிங்கான பல நடிகைகள் மற்றும் நடிகர்கள் நிறைய பேர் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரப்பிகளில் நடிப்பது உண்டு

  சினிமா வாய்ப்பு அதிகன் இல்லாத நிலையிலும் பல நடிகர்களின் முகங்கள் அடிக்கடி சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களில் தென்பட்டு டீவி வழியாக நிறைய இல்லங்களுக்கு சென்று உள்ளனர் என்பது தான் நிதர்சனமான உண்மை

  மட்டையாகும் வரை மது.. அந்த நடிகையின் ஒல்லி பெல்லி போட்டோவுக்கு பின் அப்படியொரு அச்சச்சோ கதை!மட்டையாகும் வரை மது.. அந்த நடிகையின் ஒல்லி பெல்லி போட்டோவுக்கு பின் அப்படியொரு அச்சச்சோ கதை!

  அடியெடுத்து வைக்கிறது

  அடியெடுத்து வைக்கிறது

  "நம்பிக்கையை கொண்டாடுவோம்" இந்த வரிகளை சொல்லும் பொழுது நமக்கு நினைவுக்கு வருவது சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரம் தான். நம்பிக்கையை மட்டுமே தாரக மந்திரமாக கொண்டு பல சாதனைகளை படைத்து தனது தீவிர உழைப்பால் தலை நிமிர்ந்து நிற்கும் சரவணா ஸ்டோர்ஸ் குழுமம் இன்று தனது 50 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

  நடுத்தர மக்களின்

  நடுத்தர மக்களின்

  1970-களில் சண்முகா ஸ்டோர்ஸ் என்னும் 720 சதுரடியில் துவங்கப்பட்ட சிறிய பாத்திரக்கடை இன்று சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் அளவிற்கு வளர்ந்து நின்று மக்களின் இதய மாளிகையில் குடியேறியிருக்கிறது இந்நிறுவனம். தி.நகரில் சரவணா ஸ்டோர்ஸின் கட்டைப் பை இல்லாத நபர்களை காண்பதரிது. நடுத்தர மக்களின் கஷ்டங்களை புரிந்து கொண்டு அவர்கள் வாங்கிச்செல்லும் துணிகள் மட்டுமல்லாமல், அதை எடுத்து செல்லும் பை மூலமாக அவர்களின் இல்லத்தில் ஒருவராகவே மாறிவிட்டார்கள்.

  விடா முயற்சி

  விடா முயற்சி

  90களிலிருந்து ரங்கநாதன் தெருவில் கூட்டம் அலை மோதுவதற்கு முக்கிய காரணம் இவர்களின் கடின உழைப்பு, விடா முயற்சி, நம்பிக்கை. தி.நகர் என்றாலே சரவணா ஸ்டோர்ஸ் என்ற பிம்பத்தை உருவாக்கி இருக்கிறார்கள். பல ஊர்களில் இருந்து தேனீக்கள் போல மக்கள் சோறு கட்டிக்கொண்டு திருவிழா போல் இந்த கடைக்கு வந்து செல்வது கண்கொள்ளா காட்சி.

  சாதனை படைக்கும்

  சாதனை படைக்கும்

  வியாபாரயுக்தியும், உழைப்பும் மற்றும் மக்களுக்கு தேவையானவைகள் நியாயமான விலையில் ஒரே இடத்தில் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் செயல் பட்டுக்கொண்டிருக்கும் இந்த நிறுவனம் இன்னும் பல ஆண்டுகள் தொடர்ந்து சாதனை படைக்கும் என்று சொன்னால் அது மிகையாகாது.

  வசந்தபாலன்

  வசந்தபாலன்

  சரவணா ஸ்டோர்ஸ் சுற்றி நடக்கும் விஷயங்களை மையமாக வைத்து இயக்குனர் வசந்தபாலன் அங்காடி தெரு என்ற படத்தை எடுத்து மாபெரும் வெற்றி பெற்றார். பல விதமான கருத்துக்களை இந்த படம் பெற்றது . விக்க தெரிந்தவன் தான் வாழ தெரிந்தவன் என்ற வசனம் இன்று வரை மிகவும் பிரபலம் .

  ஓவியா ஸ்ரேயா

  ஓவியா ஸ்ரேயா

  பல முன்னணி நடிகைகளில் மிகவும் அதிகமாக பார்க்க பட்ட விளம்பரங்களில் தமிழ் சினிமாவின் கதாநாயகிகள் அதிகம் பங்களித்து உள்ளனர். குறிப்பாக தமன்னா, ஹன்சிகா, ஓவியா , ஸ்ரேயா என்று இந்த பட்டில் மிக பெரியது. பல டீ வி சேனல்கள் , ரேடியோ விளம்பரங்கள் மற்றும் ஆன்லைன் ஊடங்கங்கள் தொடந்து சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்கள் வந்து கொண்டே தான் இருக்கிறது. இது விளம்பரதாரர் நிகழ்ச்சி என்று சொல்லும் பொழுது இந்த பெயர் கண்டிப்பாக இருக்கும் .

  இதய பூர்வமாக நன்றி

  இதய பூர்வமாக நன்றி

  இந்த பொன்விழா ஆண்டில் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வரும் மக்களுக்கு சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் குடும்பத்தினரான சண்முகசுந்தரம் ராஜரத்தினம், ராஜரத்தினம் சபாபதி மற்றும் குழுமத்தினர் தமிழ் மண்ணுக்கும், மக்களுக்கும் இதய பூர்வமாக நன்றியை சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். பல கிளைகள் தமிழகம் எங்கும் இருந்தாலும் ரங்கநாதன் தெரு கீளை தான் இவர்களுக்கு முதல் படி. அது ஒரு பக்கம் இருக்க இந்த லாக்டவுன் சமயத்தில் ஏற்பட்டு இருக்கும் பல மாற்றங்களை உணர்ந்து புது வியாபார சலுகைகளையும் ஏற்படுத்தி வருகிறார்கள் .

  English summary
  Famous Dialogues of the movie 'Angadi Theru'
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X