சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் பிரபல இயக்குநர்.. சூப்பர் காம்போவா இருக்கும் போல இருக்கே!

சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்தடுத்து டாக்டர், டான் படங்கள் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளன.

இந்தப் படங்களை தொடர்ந்து அடுத்ததாக எஸ்கே 21 படத்தில் நடித்து முடித்துள்ளார் சிவகார்த்திகேயன். இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 30ம் தேதி ரிலீசாக உள்ளது.

தொடர்ந்து தனது எஸ்கே22, எஸ்கே 23 படங்களையும் அறிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்.\

நடிகர் சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பு மற்றும் தயாரிப்பு இரண்டையும் ஒருசேர சிறப்பாக கையாண்டு வருகிறார். அவரது டாக்டர் மற்றும் டான் படங்கள் இரண்டு இரண்டு ஜானர்களில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. டாக்டர் படத்தில் டாக்டருக்கான மேனரிசங்களை வெளிப்படுத்தி அந்த கேரக்டரை சிறப்பாக்கினார்.

கல்லூரி மாணவராக சிவகார்த்திகேயன்

கல்லூரி மாணவராக சிவகார்த்திகேயன்

இதேபோல அடுத்ததாக நடித்த டான் படத்தில் கல்லூரி மாணவராக நடித்த நிலையில், அந்தக் கேரக்டருக்கான அலப்பறைகளையும், தொடர்ந்து தன்னுடைய வாழ்க்கைக்கான தேடல் கிடைத்த நிலையில் மெச்சூர்டான நடிப்பையும் வெளிப்படுத்தியிருந்தார். இந்தப் படத்தில் நடித்த பால சரவணன், பிரியங்கா மோகன், சிவாங்கி உள்ளிட்டவர்களும் அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தனர்.

ஆகஸ்ட்டில் வெளியாகும் எஸ்கே20

ஆகஸ்ட்டில் வெளியாகும் எஸ்கே20

இந்நிலையில் அடுத்ததாக எஸ்கே20 படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தை கேவி அனுதீப் இயக்கியுள்ளார். படத்தில் சிவகார்த்திகேயனுக்கு உக்ரைன் நாட்டை சேர்ந்த நடிகை ஹீரோயினாகியுள்ளார். இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 30ம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்த படங்களை சிறப்பாக திட்டமிட்டு வருகிறார் சிவகார்த்திகேயன்.

அடுத்தடுத்த படங்கள்

அடுத்தடுத்த படங்கள்

இந்தப் படத்தை தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி மற்றும் மடோன் அஸ்வின் ஆகியோர் இயக்கங்களில் இணைகிறார். குறிப்பாக மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் இணையும் எஸ்கே 22 படத்தின் முன்தயாரிப்பு வேலைகள் இந்த மாதத்திலேயே துவங்கவுள்ளன. மடோன் அஸ்வின் முன்னதாக யோகி பாபுவை வைத்து மண்டேலா படத்தை இயக்கி வரவேற்பு பெற்றவர்.

வில்லனாகும் மிஷ்கின்

வில்லனாகும் மிஷ்கின்

இதனிடையே இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு பிரபல இயக்குநர் மிஷ்கின் வில்லனாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இவர் சமீப காலங்களில் நடிப்பிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இவரது பிசாசு 2 படம் விரைவில் ரிலீசாக உள்ளது. முன்னதாக எஸ்கே 22 படத்தில் சிவகார்த்திகேயனுக்கு பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி ஜோடியாகவுள்ளதாக கூறப்பட்டது. இந்தப் பட்டியலில் சமந்தாவின் பெயரும் அடிப்பட்டு வருகிறது.

முதலில் துவங்கும் எஸ்கே 22 படம்

முதலில் துவங்கும் எஸ்கே 22 படம்

இதனிடையே கமல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் இணையும் எஸ்கே 21 படத்தின் சூட்டிங்கும் விரைவில் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் சாய் பல்லவி அவருக்கு ஜோடியாக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால் இந்தப் படத்திற்கு முன்னதாகவே எஸ்கே 22 படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X