வெற்றி இயக்குனர் வெற்றிமாறனுக்கு இன்று பிறந்தநாள்..இணையத்தில் வைரலாகும் வாழ்த்து செய்தி !

சென்னை : தொடர் வெற்றி படங்களை இயக்கியும் தயாரித்தும் தமிழ் சினிமாவை விருதுகளால் நனைய வைத்து இந்திய அளவில் பலரும் அண்ணாந்து பார்க்கும் வகையில் திரைப்படங்களை எடுத்து வருபவர் அசுர இயக்குனர் வெற்றிமாறன்.

Recommended Video

தனுஷ் ரொம்ப மெனக்கெடுவார்- வெற்றிமாறன் | Asuran | Vetrimaaran | Dhanush

சமீபத்தில் இவர் இயக்கிய அசுரன் திரைப்படம் பல்வேறு விருதுகளோடு மிகப் பெரிய அங்கீகாரத்தை பெற்ற நிலையில் இப்பொழுது இந்த படம் இந்தியாவை தாண்டி வேற்று மொழியில் ரீமேக் செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது.

அசுரன் திரைப்படத்தை தொடர்ந்து இப்பொழுது சூர்யா நடித்துவரும் வாடிவாசல் திரைப்படத்தை இயக்கி வரும் வெற்றிமாறன் செப்டம்பர் 4 ஆம் தேதியான இன்று தனது 45வது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி ரசிகர்கள் உட்பட திரையுலகைச் சேர்ந்த பலரும் இவருக்கு வாழ்த்துக்களை கூறி கொண்டாடி வருகின்றனர்.

சிறந்த இயக்குனர்

சிறந்த இயக்குனர்

இயக்குனர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த வெற்றிமாறன் பொல்லாதவன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றி பாதையை அமைத்து இன்று வரை தொடர் வெற்றி படங்களை இயக்கியும் தயாரித்தும் இந்திய அளவில் சிறந்த இயக்குனர் என புகழப்பட்டு வருகிறார்.

இரண்டாம் பாகம்

இரண்டாம் பாகம்

இவர் தனுஷுடன் இணைந்து தொடர்ந்து 4 திரைப்படங்களில் பணியாற்றிய நிலையில் அவை அனைத்தும் மிகப்பெரிய வெற்றி பெற்று இவர்கள் இருவரும் இணையும் ஒவ்வொரு திரைப்படத்தின் எதிர்பார்ப்பும் மேலும் கூடியுள்ளது. இதற்கிடையில் வட சென்னை படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளிவர உள்ளது என வெற்றிமாறன் தெரிவித்திருந்தார்.

ஆடுகளம்

ஆடுகளம்

வெற்றிமாறன் இயக்கிய இரண்டாவது திரைப்படமான ஆடுகளம் தேசிய அளவில் மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்று பல்வேறு பிரிவுகளில் ஆறு தேசிய விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை வென்று இந்திய அளவில் அனைவரின் கவனத்தையும் பெற்றது.

தயாரிப்பாளராகவும்

தயாரிப்பாளராகவும்

சிறந்த திரைப்படம் சிறந்த இயக்குனர் உள்ளிட்ட பல பிரிவுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆடுகளம் திரைப்படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, உதயம் NH4, நான் ராஜாவாகப் போகிறேன், லென்ஸ், காக்கா முட்டை உள்ளிட்ட பல தரமான திரைப்படங்களை தயாரித்து வெற்றிமாறன் தன்னை ஒரு சிறந்த தயாரிப்பாளராகவும் நிலை நிறுத்திக் கொண்டார்.

விசாரணை

விசாரணை

வெற்றிமாறன் இயக்கும் திரைப்படங்கள் தமிழில் மட்டுமல்லாமல் இந்திய அளவில் மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்று வரும் நிலையில் இவர் இயக்கி தயாரித்த "விசாரணை" திரைப்படம் இவருக்கு மேலும் தேசிய விருது மற்றும் விகடன் விருது உள்ளிட்ட பல விருதுகளை வாரி குவித்தது.

சாதனையை புரிந்துள்ளது

சாதனையை புரிந்துள்ளது

இவ்வாறு தான் இயக்கும் ஒவ்வொரு திரைப்படத்தின் மூலம் விருதுகளை மட்டுமல்லாமல் வசூலையும் அள்ளி வரும் வெற்றிமாறன் சமீபத்தில் இயக்கிய "அசுரன்" திரைப்படம் மேலும் ஒரு சாதனையை புரிந்துள்ளது.

அதிக வசூலை

அதிக வசூலை

வெற்றிமாறன் இதுவரை இயக்கிய திரைப்படங்கள் அனைத்தும் தரமான திரைப்படங்கள் என விருதுகளை அள்ளி வந்த நிலையில் அசுரன் இவர் இயக்கிய திரைப்படங்களிலேயே அதிக அளவு வசூலை ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

விஜய் உடன் இணைய

விஜய் உடன் இணைய

இவ்வாறு தனது ஒவ்வொரு படைப்பின் மூலமும் ரசிகர்களை மகிழ்ச்சி படுத்துவது மட்டுமல்லாமல் திரையுலகினரை ஆச்சரியப்படுத்தி வரும் வெற்றிமாறன் இப்பொழுது சூர்யா நடிப்பில் உருவாகிவரும் வாடிவாசல் திரைப்படத்தை இயக்கி வருகிறார். அதை தொடர்ந்து நெட்பிளிக்ஸ் உடன் இணைந்து ஒரு ஆன்தாலஜி திரைப்படத்தை இயக்கி வரும் வெற்றிமாறன், அடுத்த படத்தில் விஜய் உடன் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

45வது பிறந்தநாள்

45வது பிறந்தநாள்

இவ்வாறு சினிமாவில் தனது ஒவ்வொரு அடியையும் வெற்றிப் படிகளாக மாற்றி வெற்றிமாறன் என்ற பெயரில் வெற்றியைக் கூடவே வைத்திருக்கும் இவர் இப்பொழுது இந்திய அளவில் சிறந்த இயக்குனர்கள் பட்டியலில் ஒருவராக உயர்ந்து நிற்கிறார். இந்நிலையில் செப்டம்பர் 4ம் தேதியான இன்று தனது 45வது பிறந்தநாளை குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக கொண்டாடி வருவதையொட்டி ரசிகர்கள் உட்பட திரையுலகைச் சேர்ந்த பலரும் இவருக்கு வாழ்த்துக்களை கூறி கொண்டாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X