ஆர்யாவுக்கு பாக்ஸிங் கற்றுத்தரும் பிரபல இயக்குனர்.. வைரலாகும் புகைப்படம் !
சென்னை : ஆர்யா தற்போது நடித்து வரும் சல்பேட்டா திரைப்படத்தை இயக்குனர் பா ரஞ்சித் இயக்கி வருகிறார்.
Recommended Video
பாக்ஸிங்கை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இந்த திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிக அளவில் இருந்து வரும் நிலையில் இதில் பல பிரபலமான நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர்.
இந்நிலையில் இயக்குனர் பா ரஞ்சித் ஆர்யாவிற்கு குத்துச் சண்டை கற்று கொடுக்கும் படப்பிடிப்பு தள புகைப்படங்கள் இப்பொழுது சமூக வலைதளங்களில் வைரல்லாகி வருகிறது.

சல்பேட்டா
சூர்யா நடிப்பில் வெளியான காப்பான் திரைப்படத்திற்கு பிறகு இப்பொழுது "ரெடி " என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நடிகர் ஆர்யா, பா ரஞ்சித் இயக்கும் சல்பேட்டா திரைப்படத்தில் இதுவரை நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

கடின உடற்பயிற்சி
சல்பேட்டா திரைப்படத்தில் குத்துச்சண்டை வீரராக நடித்து வரும் ஆர்யா அதற்காக வெறித்தனமாக மேற்கொள்ளும் கடின உடற்பயிற்சி வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களை வாய் பிளக்க வைத்து வந்தது.

எஞ்சியுள்ள படப்பிடிப்பு
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிந்து செப்டம்பர் மாதமே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனா பரவல் சூழல் காரணமாக படப்பிடிப்பு தள்ளிப் போய் இப்பொழுது எஞ்சியுள்ள படப்பிடிப்பு பரபரப்பாக மீண்டும் துவங்கியுள்ளது.

பழைய மெட்ராஸில்
ஒவ்வொரு திரைப்படங்களிலும் சமூக பிரச்சனைகளை கையிலெடுத்து அதை முறையான வகையில் கையாண்டு பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்று வருவதில் சிறந்தவரான இயக்குனர் பா ரஞ்சித் இப்பொழுது பழைய மெட்ராஸில் நடக்கின்ற குத்துச்சண்டை வீரரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு இந்த சல்பேட்டா திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

ஆர்யாவுடன் பாக்ஸிங்
இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு திரைப்படத்தை தொடர்ந்து ரஞ்சித் இயக்கும் ஒரு திரைப்படத்திற்கான ஆவல் அதிக அளவில் இருப்பதாக சொல்லப்பட்டு வரும் நிலையில் இப்பொழுது சூட்டிங் ஸ்பாட்டில் ஆர்யாவுடன் பாக்ஸிங் பயிற்சியில் இறங்கியுள்ள படபிடிப்பு புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இருவரும் மோதிக்கொள்ளும்
கர்லா கட்டை போல இருக்கும் கட்டுடல், பெரிய கிருதா மற்றும் மீசை என ஆர்யா பார்க்கவே வித்தியாசமாக இருக்கும் இந்த புகைப்படத்தில் பா ரஞ்சித் குத்துச் சண்டை கற்று கொடுப்பது போல இருவரும் மோதிக்கொள்ளும் இந்த புகைப்படம் இப்பொழுது சமூக வலைதளங்களில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் கூட்டியுள்ளது.


Click it and Unblock the Notifications











