சூரரைப்போற்று படத்தில் பணியாற்றியுள்ள பிரபல இயக்குனர்கள்!

சென்னை : இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யாவின் நடிப்பில் வெறித்தனமாக உருவான சூரரைப் போற்று திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாமல் பல திரை பிரபலங்களின் பாராட்டு மழையிலும் நனைந்தது.

நெடுமாறன் மற்றும் சுந்தரி என்கிற பொம்மி கதாபாத்திரங்களுக்கு இணையாக ஊர்வசியின் கதாபாத்திரமும் அனைவராலும் கவரப்பட்ட நிலையில் இவருக்கு தேசிய விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு பல பெருமைகளுக்கு சொந்தமான சூரரைப்போற்று திரைப்படத்தில் நம் பலருக்கும் அறிந்திராத வகையில் பிரபல இயக்குனர்கள் இதில் முக்கிய பங்கு வகித்துள்ளனர்.

வசூல் சாதனை

வசூல் சாதனை

தமிழில் உருவான சில திரைப்படங்கள் இப்பொழுது ஒடிடியில் அடுத்தடுத்து வெளியாகி வரும் நிலையில், சூர்யா நடிப்பில் உருவான சூரரைப்போற்று திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு மாபெரும் வெற்றி பெற்று பெரும் வசூல் சாதனையை புரிந்து வருகிறது.

மற்றுமொரு பலமாக

மற்றுமொரு பலமாக

சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி கருணாஸ், காளி வெங்கட் உள்ளிட்ட பல பிரபலமான நடிகர்கள் இதில் நடித்திருக்க இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமாரின் வெறித்தனமாக இசை இப்படத்திற்கு மற்றுமொரு பலமாக அமைந்திருந்தது.

க.பெ.ரணசிங்கம்

க.பெ.ரணசிங்கம்

இந்த நிலையில் பலரும் அறியாத வகையில் இந்த திரைப்படத்திற்கு முக்கிய பங்காக க.பெ.ரணசிங்கம் திரைப்படத்தின் இயக்குனர் விருமாண்டி, திமிருபிடிச்சவன் பட இயக்குனர் கணேஷா மற்றும் உரியடி புகழ் நடிகரும் இயக்குனருமான விஜயகுமார் உள்ளிட்டோர் இதில் முக்கிய பணியாற்றி உள்ளனர்.

திரைக்கதை எழுத்தாளராக

திரைக்கதை எழுத்தாளராக

நம்பியார், திமிரு பிடித்தவன் படங்களை இயக்கிய இயக்குநர் கணேஷா சூரரைப்போற்று படத்தில் திரைக்கதை எழுத்தாளராக பங்கு வகித்துள்ளார்.

வசன உச்சரிப்புக்கு உதவியாக

வசன உச்சரிப்புக்கு உதவியாக

விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றியுடன் பாராட்டுக்களையும் பெற்ற க.பெ.ரணசிங்கம் படத்தை இயக்கியஇயக்குநர் விருமாண்டி சூரரைப் போற்று படத்தில் இடம் பெற்ற மதுரை வசன உச்சரிப்புக்கு உதவியாக இருந்துள்ளார்.

வசனம் எழுதியுள்ளார்

வசனம் எழுதியுள்ளார்

முழுக்க முழுக்க புதுமுகங்களின் முயற்சியில் உருவான உறியடி திரைப்படம் தமிழ் ரசிகர்கள் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த நிலையில் அதில் இயக்குனராகவும் நடிகராகவும் அறிமுகமான விஜயகுமார் சூரரைப்போற்று திரைப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். மேலும் இவரது வசனங்கள் ரசிகர்களால் வைரல் ஆக்கப்பட்டுள்ளது.

முழுமை பெறுகிறது

முழுமை பெறுகிறது

இவ்வாறு வேறு வேறு சிந்தனைகள் கொண்ட இயக்குநர்கள் ஒரு கதைக்காக ஒன்றாக இணைந்து வேலை செய்யும் போது அப்படத்தின் டைமென்ஷன் இன்னும் வலு பெற்று முழுமை பெறுகிறது என்பதற்கு இந்த ஒரு திரைப்படமே எடுத்துக்காட்டு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X