பாட்டி வயசுல.. நயன்தாராவின் திருமணம் -குடும்பம் குறித்து டாக்டரின் ஆணவப்பதிவு.. வலுக்கும் எதிர்ப்பு!

சென்னை : நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவருக்கும் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

தற்போது நயன்தாராவிற்கு 37 வயதாகும் நிலையில் அவரது திருமணம் மற்றும் குடும்பம் குறித்து மருத்துவர் ஒருவர் ட்விட்டரில் தெரிவித்துள்ள கருத்து கண்டனத்திற்குள்ளாகியுள்ளது.

இந்த பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள சின்மயி, மருத்துவரின் இந்த கமெண்டிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

விக்னேஷ் சிவன் -நயன்தாரா திருமணம்

விக்னேஷ் சிவன் -நயன்தாரா திருமணம்

இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாராவிற்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமணம் நடந்து முடிந்துள்ளது. திரையுலக பிரபலங்கள் சூழ இந்த திருமணம் மகாபலிபுரம் ரெசார்ட்டில் நடந்து முடிந்துள்ளது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தாலி எடுத்துக் கொடுக்க இந்த திருமணம் இனிதே நடந்தது.

திரையுலக பிரபலங்கள் வாழ்த்து

திரையுலக பிரபலங்கள் வாழ்த்து

சூப்பர்ஸ்டார் மட்டுமில்லாமல், ஷாருக்கான், சூர்யா, கார்த்தி, விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் தங்களது குடும்பத்தினருடன் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர். இதேபோல இயக்குநர்கள் அட்லி, கௌதம் மேனன் மற்றும் அட்லி உள்ளிட்டவர்கள் இந்த திருமணத்தில் கலந்து கொண்டு தம்பதியை வாழ்த்தினர்.

வெட்கப்பட்ட நயன்தாரா

வெட்கப்பட்ட நயன்தாரா

ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் ஊடகத்தினருக்கும் இந்த திருமணத்தில் அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் கடந்த 11ம் தேதி மீடியாவை சந்தித்த நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன், அவர்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி தெரிவித்தனர். தங்களுக்கு திருமணம் நடந்ததை வெட்கத்துடன் நயன்தாரா கூறியது கவிதையாக இருந்தது.

கொச்சியில் தம்பதி

கொச்சியில் தம்பதி

தற்போது விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா கொச்சியில் உள்ளனர். நயன்தாரா திருமணத்திற்கு அவரது அம்மா வரமுடியாததால், அவரை சந்திக்க இந்த தம்பதி கொச்சி சென்றுள்ளது. தொடர்ந்து இவர்கள் இருவரும் ஹனிமூனுக்கு போகாமல் தங்களது வேலைகளில் கவனம் செலுத்தவுள்ளனர்.

7 ஆண்டு காதல்

7 ஆண்டு காதல்

7 ஆண்டுகள் காதலித்து நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் செய்துக் கொண்டனர். முன்னதாக இவர்களது திருமணம் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். இதனிடையே இவர்களது திருமணம் ரசிகர்களுக்கும் ஆவலை ஏற்படுத்தியுள்ளது. இந்த திருமணம் விரைவில் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

37 வயதாகும் நயன்தாரா

37 வயதாகும் நயன்தாரா

தற்போது நயன்தாராவிற்கு 37 வயதாகிறது. அவருக்கு எப்போதுமே திருமணம் குறித்து பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்துள்ளது. அவரது முந்தைய கசப்பான அனுபவங்களே இதற்கு சாட்சி. இந்நிலையில் தனக்கு விக்னேஷ் சிவன் தாலி கட்டியவுடன் அந்த தாலியை கையில் எடுத்து உணர்வு பொங்க அவர் பார்த்ததையும் திருமண தினத்தில் பார்க்க முடிந்தது.

பாட்டி வயசுல

பாட்டி வயசுல

இந்நிலையில் நயன்தாரா 40 வயதை நெருங்கும் நிலையில் அவர் தற்போது குடும்பம், குழந்தைகள் குறித்து திட்டமிட்டுள்ளது குறித்து பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளதாக அறிவன்பன் திருவள்ளுவன் என்ற மருத்துவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதற்கும் மேல் சிறப்பு பிரிவு மருத்துவராகவும் காணப்படும் அந்த மருத்துவர், பாட்டி வயசுல என்றும் நயன்தாராவை குறிப்பிட்டுள்ளார். IVF சென்டர்கள் மட்டுமே அவருக்கு உதவ முடியும் என்றம் அவர் தெரிவித்துள்ளார்.

Recommended Video

Nayanthara Vignesh Shivan Pressmeet After Marriage #Celebrity | Filmibeat Tamil
சின்மயி கண்டனம்

சின்மயி கண்டனம்

அந்த மருத்துவரின் இந்த பதிவை பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இந்த பதிவிற்கு அவரும் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இதனிடையே மருத்துவரின் இந்த பதிவிற்கு நயன்தாரா ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X