Napoleon: இதுதான் முக்கியம்.. நெப்போலியன் மகன் திருமணம் குறித்து பளிச்சுனு பேசிய டாக்டர் டெய்சி
சென்னை: இணையத்திற்குள் நுழைந்தாலே நெப்போலியன் மகன் தனுஷ்ஷின் திருமணம் தொடர்பான செய்திகள்தான் டன் கணக்கில் கொட்டிகிடக்கின்றது. ஒரு சிலர் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கின்றனர். ஒரு சிலர் நெப்போலியன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சரமாரியான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இப்படியான நிலையில் மருத்துவர் டெய்சியின் கருத்து பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.
நடிகர் நெப்போலியன் திமுகவில் முக்கிய அங்கம் வகித்தது மட்டும் இல்லாமல், முன்னாள் மத்திய அமைச்சராகவும் அங்கம் வகித்தவர். இவரது முதல் மகன் தனுஷ். தசைநார் சிதைவு நோயினால் பாதிப்படைந்தவர். தனுஷ் - அக்ஷயா திருமணம் ஜப்பானில் தமிழ் கலாச்சாரப்படி வெகு விமர்சையாக நடைபெற்றது. தமிழ் திரைப்பிரபலங்கள் பலரும் இந்தத் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டிருந்தனர்.

தசைநார் சிதைவு நோய் காரணமாக பாதிப்பட்டுள்ள தனுஷ்ஷினால், அவரது கையைக் கூட அசைக்கமுடியாது என மருத்துவர்கள் கூறுகின்றார்கள். தனது மகனின் திருமணத்தின்போது நெப்போலியன் கண் கலங்கிய காட்சிகள் இணையத்தில் தீயாகப் பரவியது. நொப்போலியனிடம் பணம் இருக்கின்றது, அதனால் அவர் ஒரு ஏழைப் பெண்ணை தனது மகனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார் எனவும், தனுஷ்க்குத் தேவை மனைவி இல்லை நர்ஸ்தான் என்றெல்லாம் பலரும் மிகவும் மோசமாக விமர்சனம் செய்தனர்.
மருத்துவர் டெய்சி: இப்படியான விமர்சனங்களுக்கு நெப்போலியன், அவரது மகன் தனுஷ், தனுஷ்ஷின் மனைவி அக்ஷயா உள்ளிட்டோர் பதிலடி கொடுத்தனர். இப்படியான நிலையில் பிரபல மருத்துவர் டெய்சியின் கருத்து வரவேற்பைப் பெற்றுள்ளது. அதாவது இது தொடர்பாக அவர் பேசியுள்ளதாவது, இங்கு பலர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளனர். ஆனால் அவர்கள் அனைவரும் ஒரு திருப்திகரமான இல்லற வாழ்க்கையில் உள்ளார்களா என்றால் கேள்விக்குறிதான். குழந்தைகளுக்காக திருமண பந்தத்தில் நீடிக்கும் தம்பதிகள் இன்றைக்கு ஏராளம்.

பரிதாபமான வாழ்க்கை: உடல் தகுதியான கணவன் கிடைத்தாலும் பரிதாபமான வாழ்க்கையை வாழும் பெண்கள் இங்கு ஏராளம். இவற்றையெல்லாம் பார்க்கும்போது அக்ஷயாவுக்கு சிறந்த துணை கிடைத்துள்ளதாகவே நான் கருதுகின்றேன். இன்றைக்கு பல தம்பதியினர் தனது துணையிடம் இருந்து கட்டிப்பிடிப்பதையோ, முத்தத்தையோ, அன்பான வார்த்தைகளையோ கொடுப்பதும் இல்லை பெறுவதும் இல்லை. இப்படியான வாழ்க்கை வாழும் தம்பதிகளுக்கு மத்தியில் அக்ஷயாவுக்கு எப்போதும் அன்பைப் பொழிகின்றன கணவர் கிடைத்துள்ளார். அந்த வகையில் அக்ஷயா கொடுத்து வைத்தவர்" எனக் கூறியுள்ளார். இவரது இந்தக் கருத்து பலரது மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











