நடிகர் நடிகைகள் இரவு நேர பார்ட்டிகளுக்கு போவதே அதுக்காகத்தான்.. பிரபலம் போட்ட லிஸ்ட்
சென்னை: தமிழ் சினிமாவில் மிகவும் பரபரப்பாக பேசப்படும் விவாதங்களில் ஒன்றாக நடிகர் நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கையும் அடங்கிவிட்டது. ஒரு நடிகரோ நடிகையோ ஒரு படத்தில் நடிப்பதற்காக சந்தித்த சிக்கல்களுக்கும் சவால்களுக்கும் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தைப் போல் நடிகர் நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கையைத் தெரிந்து கொள்வதிலும் அதிக ஆர்வம் செலுத்துகின்றனர். இப்படியான இணையவாசிகளுக்கு விருந்து வைக்கும் விதமாக திரையுலகினர் தங்களுக்குள் ஏற்படும் மனக்கசப்பின்போது மற்றொரு திரைபிரபலத்தின் தனிப்பட்ட தகவல்களை வெளியிட்டுவிடுகின்றனர்.
குறிப்பாக சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் வெளியான தகவல்களும் தற்போது பாடகி சுசித்ரா பேசும் விஷயங்களையும் அதிகம் கேட்கும் இணையவாசிகள் உள்ளனர். பாடகி சுசுத்ரா மட்டும் இல்லாமல் பயில்வான் ரங்கநாதன் போன்ற பலரும் திரைப் பிரபலங்கள் குறித்தும் பேசி வருவதை அதிகமானோர் சமூகவலைதளங்களில் கூர்ந்து கவனித்து வருகின்றனர். இவர்கள் பேசும் தகவல்கள் பல நேரங்களில் இணையவாசிகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் அளவிற்கான தகவல்களையும் வெளிப்படுத்தியுள்ளனர். அப்படியான விஷயங்கள் மூலம் திரைப்பிரலங்கள் மீதான பார்வையும் மரியாதையும் அதிகமாகவும் காரணமாகியுள்ளது.

இப்படியான நிலையில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் பேச்சுகளில் ஒன்று ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து குறித்துதான். இந்த விவகாரம் தொடர்பாக பலரும் பலவிதமான கருத்துகளைக் கூறிவருகின்றனர். ஒரு சிலர் அவர்களது வளர்ப்பு மகன் தான் காரணம் எனக் கூறுகின்றனர். ஒரு சிலர் ஜெயம் ரவிக்கும் அவரது மாமியாருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்னைதான் காரணம் எனக் கூறிவருகின்றனர். பாயில்வான் ரங்கநாதன் வேறு ஒரு காரணத்தைக் கூறுகின்றார். இப்படியான நிலையில் பாடகி சுசித்ரா ஒரு படி மேலே சென்று விமர்சித்துள்ளார்.
சுசுத்ரா: அதில், " இந்த விவாகரத்தில் என் ஆதரவு ஜெயம் ரவிக்கு தான். ஆர்த்தியுடன் வாழவே முடியாது, அவர் மிகவும் ஆடம்பரமான பெண். ஜெயம் ரவி இரவு பகல் பார்க்காமல் வேலை செய்து கொண்டே இருக்க வேண்டும். வேலை முடித்து வீட்டுக்கு சென்றாலும் அர்த்தி என்ன மனநிலையில் இருப்பார் என்று சொல்லவே முடியாது. ஏதோ அவர் அழகாக இருந்ததால், இத்தனை ஆண்டுகள் அவரின் முகத்தை பார்த்து ஜெயம் ரவி வாழ்ந்துவிட்டார். ஆனால் அழகு எத்தனை நாளைக்கு இருக்கும். அது மட்டுமில்லாமல் ஜெயம் ரவி குடும்பம் மற்றவர்கள் போல் இல்லாமல், சினிமாவில் ரொம்ப கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்த குடும்பம். அவர்களின் குடும்பம் எப்போதும், மற்றவர்களை மதிப்பவர்கள்" என்று பேசியிருந்தது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

இரவு நேர பார்ட்டிகள்: இந்நிலையில் திரைத்துறை குறித்தும் அரசியல் குறித்தும் பல யூட்டூப் சேனல்களுக்கு பேட்டி கொடுப்பவருமான டாக்டர் காந்தராஜ் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில், " நடிகர், நடிகைகளுக்கு இடையில் விவாகரத்து நடக்க முக்கிய காரணமாக என்ன வேண்டுமானாலும் இருக்கலாம். அதற்கு இரவு நேர பார்ட்டிகளை மட்டும் குறிப்பிடுவது சரியாக இருக்காது. ஆனால் இரவு நேர பார்ட்டிகள் நடத்தப்படுவதே அதுக்காகத்தான். அது இல்லை என்றால் எதுக்காக இரவு நேர பார்ட்டிகள் நடத்தவேண்டும்" என பொடிவைத்து பேசியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக உலா வருகின்றது.


Click it and Unblock the Notifications











