விவாகரத்து சர்ச்சையில் சிக்கும் மாஸ் நடிகர்.. தெளிவாக விளக்கும் பிரபலம்..!

சென்னை: தமிழ் சினிமாவில் கடந்த சில மாதங்களில் மிகவும் பரபரப்பாக பேசப்படும் பேச்சுகளில் படத்தின் புரோமஷன்கள் குறித்த பேச்சுக்களை விடவும் நடிகர்களின் விவாகரத்து குறித்த பேச்சுகள் அதிகமாகியுள்ளது. கடந்த மாதத்தில் ஜி.வி. பிரகாஷ் - சைந்தவி விவகாரத்து குறித்து பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது ஜெயம் ரவி - ஆர்த்தி குறித்த பேச்சுகள் அதிகமாகியுள்ளது. ஜெயம் ரவியும் ஆர்த்தியும் விரைவில் விவாகரத்து செய்யவுள்ளனர் என்ற பேச்சு அடிபட்டதில் இருந்து அவர்களது சமூக வலைதளப்பக்கங்களை 24 மணி நேரமும் நோட்டமிடும் நபர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். இதுமட்டும் இல்லாமல் பயில்வான் ரங்கநாதனும் இது தொடர்பாக பேட்டி கொடுத்திருந்தார்.

ஆனால் ஜெயம் ரவி தரப்பில் இருந்தோ அல்லது ஆர்த்தி தரப்பில் இருந்தோ இதுவரை எந்தவிதமான மறுப்போ அல்லது விளக்கமோ கொடுக்கப்படவில்லை. இதனாலே சமூகவலைதளங்களில் பலரும் இவர்கள் விவாகரத்து செய்யவுள்ளனர் எனக் கூறி வருகின்றனர். இப்படியான நிலையில் ஆர்த்தி தனது சமூகவலைதளப் பக்கத்தில் இருக்கும் பயோவில் இருந்து ஜெயம் ரவியின் ஐடியை நீக்கிவிட்டார். அதேபோல், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்தும் ஜெயம் ரவியுடன் ஜோடியாக இருக்கும் புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கிவிட்டார். இது இவர்கள் விவகாரத்தில் புகைச்சலை அதிகமாக்கியது.

Jayam Ravi Dhanush GV Prakash

: இன்னொரு பக்கம், ஜெயம் ரவி ஆர்த்தியின் பிரிவிற்கு ஜெயம் ரவியின் மாமியாரும், அவரின் வளர்ப்பு மகன் ஷங்கரும் தான் காரணம் என்று சோசியல் மீடியாவில் பலர் கூறி வருகின்றனர். இந்நிலையில் பாடகி சுசித்ரா தனது யூடியூப் தளத்தில் ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து தொடர்பாக பேசியிருந்தார். அதில், இந்த விவாகரத்தில் என் ஆதரவு ஜெயம் ரவிக்கு தான். ஆர்த்தியுடன் வாழவே முடியாது, அவர் மிகவும் ஆடம்பரமான பெண். ஜெயம் ரவி இரவு பகல் பார்க்காமல் வேலை செய்து கொண்டே இருக்க வேண்டும்.

அழகு எத்தனை நாளுக்கு இருக்கும்: வேலை முடித்து வீட்டுக்கு சென்றாலும் அர்த்தி என்ன மனநிலையில் இருப்பார் என்று சொல்லவே முடியாது. ஏதோ அவர் அழகாக இருந்ததால், இத்தனை ஆண்டுகள் அவரின் முகத்தை பார்த்து ஜெயம் ரவி வாழ்ந்துவிட்டார். ஆனால் அழகு எத்தனை நாளைக்கு இருக்கும். அது மட்டுமில்லாமல் ஜெயம் ரவி குடும்பம் மற்றவர்கள் போல் இல்லாமல், சினிமாவில் ரொம்ப கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்த குடும்பம். அவர்களின் குடும்பம் எப்போதும், மற்றவர்களை மதிப்பவர்கள்" என்று பேசியிருந்தது இணையத்தில் வேகமாக பரவியது.

Jayam Ravi Dhanush GV Prakash

இரவு நேர பார்டிகள்: இந்நிலையில் திரைத்துறை குறித்தும் அரசியல் குறித்தும் பல யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுப்பவருமான டாக்டர் கந்தராஜ் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில், " நடிகர், நடிகைகளுக்கு இடையில் விவாகரத்து நடக்க முக்கிய காரணமாக என்ன வேண்டுமானாலும் இருக்கலாம். அதற்கு இரவு நேர பார்ட்டிகளை மட்டும் குறிப்பிடுவது சரியாக இருக்காது. ஒரு காலத்தில் விவாகரத்து நமது சமூகத்தில் மிகவும் ஒழுக்ககேடாக பார்க்கப்பட்டது. குறிப்பாக விவாகரத்துக்குப் பின்னர் பெண்கள் என்ன செய்வார்கள் என கேள்வி கேட்கப்பட்டது. இதனால் ஆண்கள் இரண்டு திருமணம் கூட செய்துகொண்டு வாழ்ந்தார்கள்.

Jayam Ravi Dhanush GV Prakash

மாஸ் நடிகர்: ஆனால் இன்றைக்கு மேற்கத்திய கலாச்சாரம் அதிகமாகிவிட்டதால், நானும் சம்பாதிக்கின்றேன். அவனும் சம்பாதிக்கின்றான் என்ற எண்ணம் பெண்களுக்கு வந்துவிடுவதால், விவாகரத்து குறித்து எந்தவிதமான பயமும் இல்லாமல் விவாகரத்து வாங்கிக் கொள்கின்றனர். தமிழ் சினிமா மட்டும் என்ன விதிவிலக்கா. முதலில் தனுஷ் விவாகரத்து குறித்து பேசப்பட்டது. அதன் பின்னர் ஜி.வி.பிரகாஷ் விவாகரத்து குறித்து பேசப்பட்டது. இப்போது ஜெயம் ரவி விவாகரத்து குறித்து பேசப்படுகின்றது. நாளைக்கு வேறொரு மாஸ் நடிகரின் விவாகரத்து குறித்து பேசப்படும் என பேசியுள்ளார்.

Jayam Ravi Dhanush GV Prakash

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. டாக்டர் கந்தராஜின் இந்த பேட்டியில் அடுத்து மாஸ் நடிகரின் விவாகரத்து குறித்து பேசப்படும் எனக் கூறியுள்ளதால், அது யார் என்ற கேள்வி இணையவாசிகள் மத்தியில் எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X