Vittal - பிரபல படத்தொகுப்பாளர் மரணம்.. திரையுலகில் சோகம்

சென்னை: Vittal Passed Away (விட்டல் உயிரிழப்பு) பிரபல படத்தொகுப்பாளரான ஆர்.விட்டல் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

ரஜினிகாந்த் கமர்ஷியல் பாதையில் வந்ததன் காரணமாகவே இப்போது சூப்பர் ஸ்டாராக உயர்ந்து நிற்கிறார். அப்படி அந்த கமர்ஷியில் பாதையில் அவருக்கு துணையாக நின்றது இயக்குநர் எஸ்.பி.முத்துராமன். அவர் இயக்கிய பெரும்பாலான படங்களுக்கு படத்தொகுப்பாளராக பணியாற்றியவர் ஆர்.விட்டல். மொத்தம் எஸ்.பி.முத்துராமனுடன் 71 படங்களில் பணியாற்றியிருக்கிறார் .

எடிட்டர் விட்டல்: ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் ஆகியோர் நடித்த பல படங்களுக்கு படத்தொகுப்பாளராக பணியாற்றியவர் ஆர்.விட்டல். ஆடு புலி ஆட்டம், ஜப்பானில் கல்யாணராமன், படிக்காதவன், முரட்டுக்காளை, விக்ரம், நல்லவனுக்கு நல்லவன், பாயும் புலி, ராஜா சின்ன ரோஜா, சர்வர் சுந்தரம் உள்ளிட்ட 300 படங்களுக்கும் மேல் படத்தொகுப்பாளராக பணியாற்றியிருக்கிறார் விட்டல்.

Famous Editor R.Vittal Passed away

ஏவிஎம்முக்கு ஆஸ்தானம்: அதேபோல் தமிழ் சினிமாவின் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஏவிஎம் ஸ்டூடியோவின் ஆஸ்தான படத்தொகுப்பாளராக பணியாற்றியிருக்கிறார் விட்டல். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் எடிட்டராக பணியாற்றியுள்ளார். அதேபோல் சிவாஜி நடித்த 18 படங்களுக்கு விட்டல்தான் எடிட்டராக இருந்திருக்கிறார்.

இயக்குநராகவும் வென்ற விட்டல்: படத்தொகுப்பாளராக மட்டுமின்றி இயக்குநராகவும் சில படங்களை அவர் இயக்கியிருக்கிறார். ஜெய்சங்கர் நடித்த முடிசூடா மன்னன், தொட்டதெல்லாம் பொன்னாகும், ஏவிஎம் ராஜன் நடித்த வீட்டுக்கு வந்த மருமகள், முத்தான முத்தல்லவோ உள்ளிட்ட படங்களையும் அவர் இயக்கியிருக்கிறார். இந்தப் படங்கள் ஓரளவு டீசண்ட்டான வரவேற்பையும் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

கேன்சர்: 91 வயதாகும் விட்டலுக்கு கேன்சர் பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர் கோடம்பாக்கத்தில் தனது மகள் கவனிப்பில் வாழ்ந்துவந்தார். இந்தச் சூழலில் அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது இறப்புக்கு திரையுலகினர் அஞ்சலியும், இரங்கலும் தெரிவித்துவருகின்றனர். இதற்கிடையே விட்டலின் மனைவியும், அவரது மகனும் ஏற்கனவே உயிரிழந்தவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X