ஜி.வி.பிரகாஷ் இரண்டாம் திருமணம் செய்கிறாரா? பிரபலம் சொன்ன தகவல்!

சென்னை: இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் பாடகி சைந்தவி தம்பதிகள் சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், கடந்த வாரம் இருவரும் அதிகாரப்பூர்வமாக பிரிவதாக அறிக்கை வெளியிட்டுவிட்டு பிரிந்துள்ளனர். இந்த செய்தி இணையத்தில் வைரலாகி மிகப்பெரிய அளவில் பேசுபொருளான நிலையில், இவர்களின் விவாகரத்து குறித்து பிரபலம் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

பள்ளியில் படித்துக்கொண்டு இருக்கும் போதே, ஜிவி பிரகாஷும், சைந்தவியும் காதலித்து வந்த நிலையில், கடந்த 2013ஆம் ஆண்டு இருவரும் பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு, அன்வி எனும் 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. ஜி.வி.பிரகாஷின் இசையில் சைந்தவி பல பாடல்களை பாடி உள்ளார். தனுஷ் நடித்த மயக்கம் என்ற படத்தில் வரும் பிரைதேடும் இரவிலே உயிரே பாடல், அசுரன் படத்தில் வரும் எள்ளு வய பூக்கலையே பாடல் மிகப்பெரிய அளவில் டிரெண்டிங்கானது.

Famous film journalist Zubair Talks about Saindhavi and GV Prakash divorce

ஜிவி பிரகாஷ், சைந்தவி: கடந்த சில நாள்களாக ஜிவி பிரகாஷும் சைந்தவியும் பிரிந்த வாழ்ந்து வருவதாகவும், விரைவில் இருவரும் விவாகரத்து பெற இருப்பதாகவும் இணையத்தில் தகவல் பரவி வந்த நிலையில், கடந்த வாரம், ஜி.வி.பிரகாஷ், சைந்தவி இருவரும் தங்கள் சமூக வலைதளப் பக்கத்தில், சைந்தவியும் நானும் திருமணமாகி 11 ஆண்டுகளுக்குப் பின், நீண்ட யோசனைக்குப் பிறகு ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதையுடன் எங்கள் மன அமைதிக்காகவும் மேம்பாட்டுக்காகவும் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம். இந்தத் தருணத்தில், எங்கள் தனி மனித சுதந்திரத்தைப் புரிந்துகொண்டு மதிக்குமாறு ஊடகங்கள், நண்பர்கள் மற்றும் ரசிகர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என பதிவிட்டு இருந்தனர். இவர்களின் இந்த முடிவு ரசிகர்களை கவலை அடையச் செய்தது.

இரண்டாம் திருமணம்: இந்நிலையில், பிரபல சினிமா பத்திரிக்கையாளர் சுபைர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ளார். அதில், செய்தியாளர் ஜிவி பிரகாஷ் இரண்டாம் திருமணம் செய்கிறாரா? மீண்டும் சைந்தவியுடன் இணைய வாய்ப்பு இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அவர், ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவருக்கும் சின்ன வயசு தான் ஆகிறது. இதனால், இந்த பிரிவு தற்காலிகமானதாக இருக்கலாம். கருத்து வேறுபாடு எல்லாம் நீங்கி மீண்டும் இருவரும் சேர்ந்து வாழ கூட வாய்ப்பு இருக்கிறது.

இரண்டாம் திருமணம் என்ற விஷயம் என்பது ஜிவி பிரகாஷ் எடுக்கும் முடிவு தான், அது அவர் கையில் தான் இருக்கிறது. காலம் தான் முடிவு செய்ய வேண்டும். இப்போது இரண்டு பேருமே மன காயத்தில் இருப்பார்கள், அவர்களுக்கு தேவை கொஞ்சம் மன அமைதி தான், அந்த மன அமைதியை இருவரின் பிரிவு உணர்த்தும் என்று சுபைர் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X