For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஜோஷ் ஆப் உடன் இணைந்து மிரட்டும் ராப்பர் ADKவின் புதிய ஆல்பம் படப்பன்.. சும்மா தீயாய் இருக்கு!

  |

  இந்தியாவின் மிகப்பெரிய ஷார்ட் வீடியோ செயலியான ஜோஷ் (Josh) ஆப், தனது வித்தியாசமான கன்டென்ட்கள் மூலம் வீடியோ உலகில் புதிய உயரம் தொட்டு இருக்கிறது. கடந்த 2020ம் வருடம்தான் இந்த செயலி தொடங்கப்பட்டு இருந்தாலும் ஏற்கனவே இது டாப் ஷார்ட் வீடியோ செயலியாக உருவெடுத்துவிட்டது. அதேபோல் கலைஞர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த மேடை அமைத்து கொடுப்பதிலும் ஜோஷ் (Josh) செயலிதான் நம்பர் ஒன்.

  Famous Josh Lends Support to Yaaga The Labels Latest Song Paddapan Composed By Rapper ADK

  ஆர்யன் தினேஷ் கனகரத்தினம் என்ற ADK இலங்கையைச் சேர்ந்த தமிழ் ராப் பாடகர் ஆவார். தனியாக இசை ஆல்பம் வெளியிட்டுள்ள ADK, ஏஆர் ரஹ்மான், விஜய் ஆண்டனி, தமன், சந்தோஷ் நாராயணன் ஆகியோரின் இசையில் பாடியுள்ளார். ADK வெளியிட்ட 'Paddapan' என்ற பாடல் சமீபத்தில் ஜோஷ் ஆப்பில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

  2012ம் ஆண்டு வெளியான ஆரியன் என்ற இசை ஆல்பம் மூலம் கவனம் ஈர்த்தவர் ADK என்ற தினேஷ் கனகரத்தினம். இந்த இசை ஆல்பம் ஹிட் அடித்ததில் இருந்து ஆர்யன் தினேஷ் கனகரத்தினம் என ரசிகர்களால கொண்டாடப்படும் இவர், தற்போது ADK என்ற பெயரில் பாடி வருகிறார். உலகளவில் மிகவும் புகழ்பெற்ற தமிழ் ராப் இசைக் கலைஞரான ADK-விற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவரை இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் தமிழிலும் பாட வைத்து இன்னும் பிரபலமாக்கினார்.

  மணிரத்னம் இயக்கிய 'கடல்' படத்தில் இடம்பெற்ற 'மகுடி மகுடி' பாடல் சூப்பர் ஹிட் அடித்தது. இந்தப் பாடலில் வரும் ராப் பகுதிகளை ADK தான் பாடியிருத்தார். அதேபோல், கவுதம் மேனன் இயக்கிய அச்சம் என்பது மடமையடா படத்தில் வரும் 'ஷோக்காலி ஷோக்காலி' பாடலின் ராப் போர்ஷனையும் பாடி கலக்கியிருப்பார். அதே படத்தில் 'தள்ளிப்போகாதே' பாடலிலும் ADKவின் குரல் ரசிகர்களை மயக்கியது. தொடர்ந்து ரஹ்மான் இசையில் ஓகே கண்மணி, லிங்கா படங்களிலும் பாடல்கள் பாடி மாஸ் காட்டியவர் ADK.

  ஏஆர் ரஹ்மானால் தமிழ்த் திரையிசையில் ஒருவர் அறிமுகமாகிவிட்டால் அவரை மற்ற இசையமைப்பாளர்களும் தட்டி தூக்கிவிடுவார்கள். அப்படி, மனிதன் படத்தில் 'முன்செல்லடா' பாடலை ADKவை பாட வைத்தார் சந்தோஷ் நாரயணன். அதேபோல், தமன் இசையிலும் பாடல் பாடியுள்ளார் ADK. விஜய் ஆண்டனி இசையில் TN 07 AL 4777, வேட்டைக்காரன் ஆகிய படங்களிலும் ராப் பாடி தமிழ் ரசிகர்களை வசீகரித்தவர் ADK. சமீபத்தில் இவரது தனியிசைப் பாடல்களான Thuppuran, Lityananda ஆகியவை வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருதன.

  இந்நிலையில், ADK இசையில் Paddapan என்ற தனியிசைப் பாடல் கடந்த மாதம் ஜோஷ் ஆப்பில் வெளியானது Yaaga The Label தயாரிப்பில் வெளியான இந்தப் பாடல் இதுவரை பல மில்லியன்ஸை கடந்து செம்ம ஹிட் அடித்துள்ளது. Samal Bandara என்பவர் இயக்கியுள்ள இந்தப் பாடலுக்கு Pasan Liyanage இசையமைத்துள்ளார். மேலும், ADK, Shan Putha, Lucky Lakmina ஆகியோர் பாடி அசத்தியுள்ளனர், Kavindu Madushan கோரியோகிராபி செய்துள்ளார். துள்ளலான இசையில் ரகளையாக உருவாகியுள்ள இந்தப் பாடலுக்கு நல்ல ரெஸ்பான்ஸும் கிடைத்துள்ளது.

  ஜோஷ் ஆப்பில் இந்த பாடல் களமிறங்கியவுடன் ஏகப்பட்ட ஜோஷ் ஆப் கன்டென்ட் க்ரியேட்டர்கள் பலவிதமான ஷார்ட் வீடியோக்களை உருவாக்கி ADKவின் பாடலை மேலும், புரமோட் செய்து வருகின்றனர். இந்த பாடலுக்கு ஜோஷ் ஆப் க்ரியேட்டர்கள் பக்காவாக க்ரியேட் செய்த சில வீடியோக்களை இங்கே கண்டு ரசியுங்கள்!

  Josh Lends Support To Yaaga The Label's Latest Song Paddapan Composed By ADK

  https://share.myjosh.in/video/21820a57-fe22-4666-8128-b666d35070d1

  https://share.myjosh.in/video/d323f3ea-8bcb-48e5-8eb2-0380c45f976b

  ADK கொஞ்சம் கொஞ்சமாக நட்சத்திர அந்தஸ்த்தை நோக்கி நகர்கிறார். அவரது வளர்ச்சிக்கு மிகப்பெரிய உதவியாக ஜோஷ் ஆப் தோளோடு தோள் நின்று உதவி வருகிறது. உங்களுக்கும் இசைத் துறையில் திறமை இருக்கா உடனடியாக ஜோஷ் ஆப்பை டவுன்லோடு செய்து இணையுங்கள் பல சாதனைகளை படைக்கலாம் வாங்க!

  English summary
  Aryan Dinesh Kanakaratnam is famous for singing songs in the music of AR Rahman and Vijay Antony. He is also releasing solo songs independently. The recent release of ADK Music's album Paddapan was a huge hit. In this case, Famous Josh Lends Support to Yaaga The Label's Latest Song Paddapan Composed By Rapper ADK
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X