23 வருஷம் கழித்து வாரிசு படத்துல விஜய்யோட இணைந்த முன்னாள் கனவுக்கன்னி.. யாருன்னு பார்க்கலாமா?
சென்னை : நடிகர் விஜய்யின் 66வது படமாக உருவாகி வருகிறது வாரிசு. இந்தப் படத்தை வம்சி படிப்பள்ளி இயக்கி வருகிறார்.
இந்தப் படத்தின் சூட்டிங், ஐதராபாத்தை தொடர்ந்து தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.
படம் பொங்கல் ரிலீசாக வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப சூட்டிங் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விஜய்யின் வாரிசு படம்
நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா, பிரபு, சரத்குமார், ஷாம், ஜெயசுதா உள்ளிட்டவர்கள் நடிப்பில் தற்போது உருவாகி வருகிறது வாரிசு படம். முன்னதாக தளபதி 66 என்று தற்காலிகமாக இந்தப் படத்திற்கு பெயரிடப்பட்டிருந்த நிலையில், கடந்த 22ம் தேதி விஜய் பிறந்தநாளையொட்டி படத்தின் டைட்டில் வாரிசு என்று அறிவிக்கப்பட்டது.

விஜய் வெளியிட்ட போஸ்டர்கள்
விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த டைட்டிலை வெளியிட்டார். மேலும் படத்தின் 3 போஸ்டர்களையும் அவர் வெளியிட்டார். இந்தப் போஸ்டர்கள் தற்போது பல விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. ரஜினியின் முந்தைய படங்களின் ஸ்டைலை இந்தப் போஸ்டர் அப்படியே காப்பி அடித்ததாக விமர்சனங்கள் எழுந்தன.

சென்னையில் சூட்டிங் விறுவிறு
ஆனால் இதுகுறித்தெல்லாம் கவலை கொள்ளாமல் படத்தின் சூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முன்னதாக ஐதராபாத்தில் படத்தின் சூட்டிங் நடைபெற்ற நிலையில், பெப்சி சங்கத்தின் கோரிக்கையை ஏற்று அதன் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் தற்போது சூட்டிங் சென்னையில் நடைபெற்று வருகிறது.

நட்சத்திரப் பட்டாளம்
இந்தப் படத்தில் ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. படத்தில் முதல் முறையாக விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். புஷ்பா படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களை அதிகமாக கவர்ந்துள்ள நிலையில் பான் இந்தியா படமாக வெளியாக உள்ள இந்தப் படத்திலும் ராஷ்மிகா இணைந்துள்ளார்.

விஜய்யுடன் இணைந்த முன்னாள் கனவுக்கன்னி
இந்நிலையில் இந்தப் படத்தில் கோலிவுட்டின் முன்னாள் கனவுக்கன்னியும் இணைந்துள்ளார். அவர் வேறு யாருமில்லைங்க. நடிகை குஷ்பூதான். இந்தப் படத்தில் அவர் விஜய்யுடன் 23 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்துள்ளார். கடந்த 1999ல் வெளியான மின்சாரக் கண்ணா படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மின்சாரக் கண்ணா படம்
கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் விஜய்க்கு கலவையான விமர்சனங்களை பெற்றுத் தந்தது. இருந்தபோதிலும் இந்தப் படத்தின்மூலம் அவர் தன்னுடைய சிறப்பான காமெடி பார்முலாவை துவங்கினார். இந்தப்படத்தில் ரம்பா, குஷ்பூ உள்ளிட்ட முன்னணி நடிகைகள் அவருடன் இணைந்து நடித்திருந்தனர்.
Recommended Video

கேஎஸ் ரவிக்குமார் இயக்கம்
நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் கோலிவுட்டில் ஹீரோவாக களமிறங்கிய விஜய் தொடர்ந்து மாணவர்கள் சார்ந்த படங்களில் நடித்து வந்தார். கொத்து பரோட்டா உள்ளிட்ட பாடல்கள் அந்த காலகட்டத்தில் வெளியானதுதான். இதையடுத்தே பூவே உனக்காக உள்ளிட்ட படங்களில் அவர் நடித்து புகழ்பெற்றார். அந்த காலகட்டத்தில் வெளியான படம்தான் மின்சாரக் கண்ணா.


Click it and Unblock the Notifications











