Suriya: சூர்யா 44 படத்தில் இணையும் பிரபல மலையாள நடிகர்.. 80% சூட்டிங் எங்க நடக்குது தெரியுமா?
சென்னை: நடிகர் சூர்யாவின் கங்குவா படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்நிலையில் அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜுடன் சூர்யா இணையவுள்ள சூர்யா 44 படத்தின் சூட்டிங் வரும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் துவங்க உள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் படத்தில் பிரபல மலையாள நடிகர் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இவர் முன்னதாக கார்த்திக் சுப்புராஜ் -தனுஷ் கூட்டணியில் வெளியான ஜகமே தந்திரம் படத்தில் நடித்தவர். இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜுடன் இரண்டாவது முறையாக அவர் சூர்யா 44 படத்தில் இணைய உள்ளார்.

நடிகர் சூர்யா: நடிகர் சூர்யாவின் கங்குவா படம் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இந்த படத்தை இயக்குனர் சிவா இயக்கியுள்ள சூழலில் படத்தில் திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்தப்படம் சர்வதேச அளவில் 10 மொழிகளில் ரிலீசாக உள்ளதாகவும் படத்தில் பத்திற்கும் மேற்பட்ட கெட்டப்புகளில் சூர்யா நடித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. விரைவில் படம் ரிலீசுக்கு தயாராகவுள்ள சூழலில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்த படத்தை தொடர்ந்து சுதா கொங்கராவுடன் புறநானூறு படத்தில் சூர்யா இணையவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
சூர்யா 44 படம்: ஆனால் இந்தப்படத்தின் ஷூட்டிங் தள்ளிப் போய் உள்ளது. தற்போது கார்த்திக் சுப்புராஜுடன் சூர்யா 44 படத்தில் கமிட் ஆகியுள்ளார் சூர்யா, இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் மற்றும் சூர்யா இருவரும் இணைந்து தயாரிக்கவுள்ளனர். இந்த படத்தில் இணையவுள்ள அடுத்தடுத்த நடிகர்கள் குறித்த அப்டேட்கள் தொடர்ந்து வெளியான வண்ணம் உள்ளன. இந்நிலையில் படத்தில் பிரபல மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் இணையவுள்ளதாக படக்குழு சார்பில் அப்டேட் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூர்யாவுடன் இணைந்த பிரபல நடிகர்: இவர் முன்னதாக கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் தனுஷ் நடித்திருந்த ஜகமே தந்திரம் படத்தில் இணைந்திருந்த சூழலில் தற்போது இரண்டாவது முறையாக கார்த்திக் சுப்புராஜுடன் இணையவுள்ளார். படத்தின் 80 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட ஷூட்டிங், பிரம்மாண்டமான செட்கள் போடப்பட்டு அதில் நடத்தப்பட உள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் சூட்டிங் வரும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் துவங்க உள்ளதாக படக்குழு சார்பில் அப்டேட் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்: இதனிடையே இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராக கமிட்டாகியுள்ளார். இவர் முதல் முறையாக சூர்யாவுடன் இந்தப் படம் மூலம் இணைந்துள்ளார். இதனிடையே சூர்யா -கார்த்திக் சுப்புராஜ் -சந்தோஷ் நாராயணன் கூட்டணி மேஜிக்கை நிகழ்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கார்த்திக் சுப்புராஜ் படங்களுக்கு ஆஸ்தான இசையமைப்பாளராக தொடர்ந்து இசையமைத்து வருகிறார் சந்தோஷ் நாராயணன்.


Click it and Unblock the Notifications











