twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடிச்சா சி.எம். தான்.. சினிமாவில் முதலமைச்சர் நாற்காலியை பிடித்த பிரபல அரசியல்வாதி!

    |

    Recommended Video

    Action Official Trailer | Vishal| Tamannaah| HipHop Tamizha | Sundar. C

    சென்னை: விஜய்யின் சர்கார் படத்தில் தமிழ்நாட்டின் சி.எம்., ஆக நடித்த பிரபல அரசியல்வாதி பழ. கருப்பையா, தற்போது விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ஆக்‌ஷன் படத்திலும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக நடித்துள்ளார்.

    சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், தமன்னா, ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் உருவாகியுள்ள ஆக்‌ஷன் திரைப்படம் வரும் நவம்பர் 15ம் தேதி ரிலீசாகிறது.

    விஷாலுக்கு இந்த படம் மிகப்பெரிய வெற்றியை தரும் என இயக்குநர் சுந்தர். சி பிரஸ் மீட்டில் பேசும் போது தெரிவித்தார்.

    சீன் முடிறதுக்குள்ள சீன் போட கூடாது.. விஸ்வாசம் டிரெண்டிங்கில் திடீர் பல்டி அடித்த ட்விட்டர்?சீன் முடிறதுக்குள்ள சீன் போட கூடாது.. விஸ்வாசம் டிரெண்டிங்கில் திடீர் பல்டி அடித்த ட்விட்டர்?

    ஆக்‌ஷன்

    ஆக்‌ஷன்

    ஆக்‌ஷன் என்ற டைட்டிலுக்கு ஏற்றவாறே விஷால், தமன்னா, ஐஸ்வர்யா லட்சுமி, கபிர் சிங் துஹான் என பலரும் சிரமமான பல ஆக்‌ஷன் காட்சிகளை இந்த படத்திற்காக போட்டுள்ளனர். விஷால், படங்களிலேயே அதிகளவு ஸ்டன்ட்டுக்காக அடிபட்டது இந்த படத்தில் தானாம். ஒரு சண்டைக் காட்சியின் போது, மரணத்தையே பார்த்துவிட்டு வந்ததாகவும் பேட்டிகளில் விஷால் கூறியிருந்தார்.

    சி.எம். நடிகர்

    சி.எம். நடிகர்

    அரசியலில் பல காலம் செலவழித்த பழ. கருப்பையா, முதன் முதலில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்தில் சி.எம். கதாபாத்திரத்தில் சென்ற ஆண்டு நடித்து அசத்தியிருந்தார். இந்நிலையில், விஷாலின் ஆக்‌ஷன் படத்திலும் மீண்டும் தமிழ் நாட்டின் முதலமைச்சராகவே பழ. கருப்பையா நடித்துள்ளார்.

    வில்லன் இல்லை

    சர்கார் படத்தில் வில்லனாக நடித்திருந்த பழ. கருப்பையா, விஷாலின் ஆக்‌ஷன் படத்தில் ஊழலுக்கு எதிரான முதலமைச்சராக கே.ஆர்.கே எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் டிரைடன்ட் ஆர்ட்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    எம்.ஜி.ஆர் ரெஃபரென்ஸா?

    எம்.ஜி.ஆர் ரெஃபரென்ஸா?

    தமிழ்நாட்டில் மூன்றெழுத்து முதல்வர் என்றால் உடனடியாக மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் தான் நினைவுக்கு வருவார். அதே போல பழ. கருப்பையாவின் கே.ஆர்.கே கதாபாத்திரம் மூன்றெழுத்தில் அமைந்துள்ளதால், இது எம்.ஜி.ஆர் ரெஃபரென்ஸ் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

    துணை முதல்வர்

    ஆக்‌ஷன் படத்தில் துணை முதல்வராக ராம்கி ஆர்.கே.எஸ் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடைய மனைவி கயல்விழியாக நடிகை சாயா சிங் நடித்துள்ளார். சர்கார் படம் போல ஆக்‌ஷன் படமும் தமிழ்நாட்டின் அரசியலை அசைத்து பார்க்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. விஜய்யை போல நடிகர் விஷாலுக்கும் அரசியலில் ஆர்வம் அதிகமாக உள்ளதால், தரமான சம்பவங்கள் படத்தில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    After Sarkar, Famous Politician Pazha Karuppaiah once again act as a CM role in Vishal’s upcoming Action movie. Also Ramki played as a deputy CM in that movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X