“விஜய்க்கு நடிப்புதான் மூச்சு“.. அவரைப்போல ஒரு நடிகரை பார்க்கமுடியாது.. புகழ்ந்த தயாரிப்பாளர் !

சென்னை : நடிகர் விஜய்க்கு நடிப்பு தான் மூச்சே, சினிமா மீது அவர் அளவு கடந்த மரியாதை வைத்து இருக்கிறார் என்று பிரபல தயாரிப்பாளர் சங்கிலி முருகன் கூறியுள்ளார்.

நாளைய தீர்ப்பு திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான விஜய், பல வெற்றிகள், பல தோல்விகள், பல போராட்டங்களை சந்தித்து இன்று வெற்றி பெற்ற நடிகராக இருக்கிறார்.

அப்பாவால் வெற்றி பெற்றார்... அப்பாவால் உயர்ந்தார்... ராசி இல்லாதவர்.. முகம் சரியில்லை என பல விமர்சனங்கள் வந்தாலும், ஒவ்வொரு விமர்சனங்களையும் படிகளாக்கி, இன்று யாருமே தொட்டுவிட முடியாத இடத்தில் இருக்கிறார் விஜய்.

நடிகர் விஜய்

நடிகர் விஜய்

1992ம் ஆண்டு தன்னுடைய திரைப்பயணத்தை தொடங்கிய விஜய், நதி போல எந்த சலனமும் இல்லாமல் அமைதியாக ஓடிக்கொண்டு இருக்கிறார். இந்த வெற்றிக்கு காரணம் அவரின் மன உறுதியும், சினிமா மீது அவருக்கு இருந்த காதலும் தான் காரணம். ஜூன் 22 ந் தேதி தன்னுடைய 48 பிறந்த நாளை கொண்டாடிய விஜய், இயக்குநர் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

வாரிசு

வாரிசு

வாரிசு திரைப்படத்திலிருந்து 3போஸ்டர்கள் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இத்திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தானா, சரத்குமார், ஷாம்,ஜெயசுதா என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளனர். தமிழ்,தெலுங்கு என இருமொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இத்திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

நடிப்புதான் மூச்சு

நடிப்புதான் மூச்சு

இந்நிலையில் விஜய்யின் பிறந்த நாளுக்கு பிரபல தயாரிப்பாளர் சங்கிலி முருகன் ஊடகம் ஒன்று பேட்டி அளித்துள்ளார். அதில், விஜய்க்கு நடிப்புதான் மூச்சு, சினிமா மீது அவர் அளவு கடந்த மரியாதை வைத்து இருக்கிறார். ஒவ்வொரு காட்சியிலும் தனது நடிப்பை வெளிப்படுத்துவதில் வல்லவர். ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கும் போது அந்த கதாபாத்திரமாகவே மாறி நடிப்பது என்பது கடினம், ஆனால் விஜய் அதை சர்வ சாதாரணமாக செய்து முடிக்கக்கூடியவர் என்றார்.

அவர் அவராகவே இருக்கிறார்

அவர் அவராகவே இருக்கிறார்

சினிமாவில் நான் பல வருடங்களாக இருக்கின்றேன், எல்லா நடிகர்களையும் பற்றியும் எனக்கு தெரியும், ஆனால் விஜய் எவ்வளவு உச்சத்திற்கு சென்றாலும்.. அப்போதும் அவர் அவராகவே இருக்கிறார். விஜய்யிடம் மிகவும் பிடித்த விஷயம், சொன்ன சொன்ன நேரத்திற்கு சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து விடுவார், சினிமா மீது இவ்வளவு ஈடுபாடு உள்ளதால், மட்டுமே விஜய் இந்த நிலைக்கு வந்துள்ளார் என தயாரிப்பாளர் சங்கிலி முருகன் அந்த பேட்டியில் கூறியுள்ளார். தயாரிப்பாளர் சங்கிலி முருகன் காதலுக்கு மரியாதை, சுறா போன்ற படங்களை விஜய்யை வைத்து தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X