பொன்னியின் செல்வன் நந்தினி கேரக்டர்.. ஐஸ்வர்யா ராய்க்கு டப்பிங் கொடுத்த பிரபல சீரியல் நடிகை!

சென்னை : மணிரத்னம் தனது கனவு ப்ராஜெக்ட்டான பொன்னியின் செல்வன் படத்தை முன்னதாக இருமுறை முயற்சித்து தற்போது நிறைவேற்றியுள்ளார்.

இந்தப் படம் வரும் 30ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ள நிலையில் படத்தின் டீசர், இரு பாடல்கள் என முன்னதாக பிரம்மாண்டமான அளவில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு படத்தின் ட்ரெயிலர் மற்றும் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக ரஜினி மற்றும் கமல் கலந்துக் கொண்டனர்.

இயக்குநர் மணிரத்னம்

இயக்குநர் மணிரத்னம்

இயக்குநர் மணிரத்னம் சிறப்பான பல படங்களை கொடுத்து ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளைக் கொண்டவர். பல நடிகர்களின் மற்றும் ரசிகர்களின் கனவுக்கு உயிர் கொடுத்தவர் மணிரத்னம். ஆனால் அவரது கனவில் ஒரு படம் எப்போதுமே இருந்துள்ளது. பொன்னியின் செல்வன் என்ற அந்தப் படத்தை முன்னதாக இருமுறை இயக்க அவர் முயற்சித்துள்ளார்.

மணிரத்னத்தின் 3வது முயற்சி

மணிரத்னத்தின் 3வது முயற்சி

அந்த நேரத்தில் விஜய், மகேஷ்பாபு என பலரும் அவரது கற்பனையில் அந்த வரலாற்று கேரக்டர்களில் இருந்துள்ளனர். ஆனால் மூன்றாவது முயற்சியில்தான் தற்போது பொன்னியின் செல்வன் வரலாற்று காவியம் அவருக்கு சாத்தியப்பட்டுள்ளது. இதுவும் சிறப்பாகவே பார்க்கப்படுகிறது. தற்போது அவர் லைகாவுடன் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கவும் செய்துள்ளார்.

 வந்தியத்தேவன் கேரக்டர்

வந்தியத்தேவன் கேரக்டர்

இந்தப் படத்தில் ஒவ்வொரு கேரக்டர்களும் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளன. குறிப்பாக கார்த்தி நடித்துள்ள வந்தியத்தேவன் கேரக்டரில் முன்னதாக ரஜினி நடிக்கவிருந்ததாக கூறப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து அவர் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். விஜய்யும் இந்தக் கேரக்டருக்காக முன்னதாக பேசப்பட்டுள்ளார்.

 பிரம்மாண்டமான வெளியீடுகள்

பிரம்மாண்டமான வெளியீடுகள்

இந்தப் படத்தில் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா இணைந்துள்ள நிலையில், படத்தின் ஒவ்வொரு விஷயமும் மிகவும் பிரம்மாண்டமாக வெளியாகி வருகிறது. முன்னதாக டீசர், இரு பாடல்கள் சென்னை மற்றும் ஐதராபாத்தில் நடந்து முடிந்துள்ள நிலையில், இரு தினங்களுக்கு முன்பு படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீடு பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ளது.

இரண்டு ஜாம்பவான்கள்

இரண்டு ஜாம்பவான்கள்

இந்த வெளியீட்டு நிகழ்ச்சியில் தமிழ் சினிமாவின் இரண்டு ஜாம்பவான்கள் ரஜினி மற்றும் கமல் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டு பல்வேறு சுவாரஸ்யங்களை பகிர்ந்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதற்காக மும்பையில் இருந்து சென்னை வந்திருந்தார் நடிகையும் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராய்.

வலிமையான நந்தினி கேரக்டர்

வலிமையான நந்தினி கேரக்டர்

அவர் இந்தப் படத்தில் நந்தினி என்ற மிகவும் பவர்புல்லான கேரக்டரில் நடித்துள்ளார். அவரது கேரக்டரின் வலிமை ட்ரெயிலரிலும் வெளிப்பட்டது. அவர் முன்னதாக தமிழில் சில படங்களில் நடித்திருந்தாலும், மிகவும் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் அவரது கேரக்டரை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.

தீபா வெங்கட் வாய்ஸ்

தீபா வெங்கட் வாய்ஸ்

இந்நிலையில் தமிழில் அவரது கேரக்டருக்கு பிரபல சீரியல் மற்றும் சினிமா நடிகை தீபா வெங்கட் பின்னணி கொடுத்துள்ளார். இவர் பிரபல டப்பிங் கலைஞரும்கூட. பல நடிகைகளுக்கு இவர் தொடர்ந்து பின்னணி கொடுத்து வந்துள்ள நிலையில், தற்போது மெட்ராஸ் டாக்கீசுடன் மீண்டும் இணைந்துள்ளது குறித்து மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

 ஐஸ்வர்யாவிற்கு முதல்முறை வாய்ஸ்

ஐஸ்வர்யாவிற்கு முதல்முறை வாய்ஸ்

முன்னதாக மெட்ராஸ் டாக்கீசின் கன்னத்தில் முத்தமிட்டால், குரு, செலியா, செக்கச் சிவந்த வானம் உள்ளிட்ட படங்களில் அவர் இணைந்து டப்பிங் பேசியுள்ள நிலையில் தற்போது பொன்னியின் செல்வன் படத்திற்காக முதல்முறையாக ஐஸ்வர்யா ராய்க்கு வாய்ஸ் கொடுத்துள்ளது குறித்து மிகுந்த உற்சாகத்துடன் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X