Don't Miss!
- News
இது தமிழ்நாடா அல்லது வட மாநிலமா? வட மாநிலத்தவர்கள் அட்டூழியம் அதிகரிப்பு! கொதிக்கும் வேல்முருகன்!
- Finance
அடடே.. இன்று தங்கம் விலை எவ்வளவு குறைஞ்சிருக்கு தெரியுமா.. சர்ப்ரைஸ் தான்!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Lifestyle
கலோரிகள் குறைவாக உள்ள இந்த 7 உணவுகள சாப்பிட்டா... உங்க எடை டக்குனு குறைஞ்சிடுமாம்...!
- Technology
Instagram-ல் மெசேஜ் Unsend செய்தால் மீண்டும் பார்க்க முடியுமா? போட்டோ கூட ரிட்டன் வருமா?
- Sports
"தோனியோட திறமை என்கிட்டையும் இருக்கு".. இந்தியாவுக்கு எதிரான திட்டம்.. மிட்செல் சாண்ட்னர் சவால்!
- Automobiles
இன்னும் என்ன யோசனை... ரொம்ப நாளாக எதிர்பார்த்த டீசல் டொயோட்டாவிற்கான புக்கிங் மீண்டும் தொடங்கியிருக்கு!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
ஜனவரி 28ல் துவங்கும் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி.. அப்டேட் சொன்ன சீரியல் நடிகை!
சென்னை : விஜய் டிவியின் முக்கியமான மற்றும் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த நிகழ்ச்சிகளில் ஒன்றாக குக் வித் கோமாளி உள்ளது.
இந்த நிகழ்ச்சி 3 சீசன்களை கடந்து தற்பேோது 4வது சீசன் விரைவில் துவங்கவுள்ளது.
இதுகுறித்த ப்ரமோவை கடந்த சில தினங்களுக்கு முன்பு விஜய் டிவி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது.
குக்வித்
கோமாளி..
சிரிக்க
ரெடியா
பங்காளி..
அடுத்த
பிரம்மாண்டத்திற்கு
தயாராகும்
சேனல்!

குக் வித் கோமாளி நிகழ்ச்சி
விஜய் டிவியின் முக்கியமான நிகழ்ச்சிகளில் ஒன்றாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி உள்ளது. சமையல் நிகழ்ச்சியில் வித்தியாசத்தை புகுத்தி, குக்குகள் மற்றும் கோமாளிகள் சூழ இந்த நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் பிரபலங்கள் பலரும் குக்குகளாகவும் கோமாளிகளாகவும் மாறி ரசிகர்களை என்டர்டெயின் செய்து வருகின்றனர்.

விரைவில் துவங்கும் 4வது சீசன்
இதுவரை 3 சீசன்களை இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக கடந்துள்ளது. கடந்த சீசன்களில், வனிதா விஜயகுமார், ரோஷினி, தர்ஷன், அஸ்வின் உள்ளிட்ட பலர் குக்குகளாக ரசிகர்களை கவர்ந்த நிலையில், கோமாளிகளாக புகழ், சிவாங்கி, மணிமேகலை உள்ளிட்டவர்கள் மாஸ் காட்டினர்.

விஜய் டிவி வெளியிட்ட ப்ரமோ
இதனிடையே இந்த நிகழ்ச்சியின் அடுத்த சீசன் இன்னும் சில தினங்களில் துவங்கவுள்ளதாக விஜய் டிவி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ப்ரமோவை வெளியிட்டுள்ளது. இதில் இந்த நிகழ்ச்சியில் இடம்பெறும் கோமாளிகள் மற்றும் நடுவர்கள் காணப்பட்டனர். புதிதாக ஜிபி முத்துவும் இந்த நிகழ்ச்சியில் இணையவுள்ளதை ப்ரமோவில் காண முடிந்தது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இணைந்த ரவீனா
இந்நிலையில் நிகழ்ச்சியில் குக்காக பிரபல சீரியல் நடிகை இணைந்துள்ளார். மௌனராகம் 2 சீரியலில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வரும் ரவீனா தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இணையவுள்ளதாக அப்டேட் தெரிவித்துள்ளார். சக நடிகர் திரவியத்திடம் அவர் வீடியோ மூலம் இதனை தெரிவித்துள்ளார்.

வீடியோ வெளியீடு
இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ள வீடியோவில் திரவியத்திடம் பேசும் ரவீனா தான் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சிக்காக செல்வதாகவும், ஜனவரி 28ம் தேதி நிகழ்ச்சியில் சந்திக்கலாம் என்றும் கூறியுள்ளார். இதன்மூலம் அவர் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளதும் நிகழ்ச்சி ஜனவரி 28ம் தேதி துவங்கவுள்ளதும் உறுதியாகியுள்ளது.