பாடகி ப்ரகதி-க்கு இன்று பிறந்தநாள்.. வாழ்த்தும் ரசிகர்கள்!
சென்னை : தமிழில் பல இனிமையான பாடல்களை தனது இனிமையான குரலின் மூலம் பாடி தமிழ் ரசிகர்களை மகிழ்வித்து வருபவர் இளம் பாடகி ப்ரகதி குருபிரசாத்.
வணக்கம் சென்னை, காதலும் கடந்து போகும், கண்ணே கலைமானே, ராட்சசன் உள்ளிட்ட திரைப்படங்களில் பாடலை பாடி உள்ள இவர் அதேசமயம் பல ஆங்கில பாடல்களையும் பாடியுள்ளார்.
அவ்வாறு தனது இனிமையான இளமை ததும்பும் குரலின் மூலம் பாடல்களை பாடி அசத்தி வரும் பாடகி ப்ரகதி செப்டம்பர் 14 ஆம் தேதியான இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி ரசிகர்கள் பலரும் இவருக்கு வாழ்த்துக்களை சொல்லி வருகின்றனர்.

இளம் பாடகிகளில்
பிரபலமான தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியரில் கலந்துகொண்டு அசத்திய ப்ரகதி இப்போது தமிழ் சினிமாவில் இளம் பாடகிகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

போட்டிகளில்
தனது இனிமையான குரலின் மூலம் சிறு வயதிலேயே பல பாடல்களை போட்டிகளிலும் நிகழ்ச்சிகளிலும் பாடி மக்களின் மனதைக் கவர்ந்த ப்ரகதி இப்பொழுது திரைப்படங்களிலும் பல்வேறு பாடல்களை பாடி வருகிறார்.

சமீபத்தில் வெளியான ராட்சசன்
தமிழ், ஆங்கிலம் என இருமொழிகளிலும் பாடல்களை பாடி அசத்தி வரும் இவர், இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான " பரதேசி" திரைப்படத்தில் "செங்காடே" மற்றும் "ஓர் மிருகம்" உள்ளிட்ட பாடல்களைப் பாடியதை தொடர்ந்து வணக்கம் சென்னை, காதலும் கடந்து போகும், கண்ணே கலைமானே மற்றும் சமிபத்தில் வெளியான ராட்சசன் உள்ளிட்ட திரைப்படங்களிலும் பாடல்களை பாடியுள்ளார்.

நடிக்க இருப்பதாக
இவ்வாறு தனது செல்லமான குரலின் மூலம் ரசிகர்கள் விரும்பும் பாடகியாக வலம் வந்து கொண்டிருக்கும் ப்ரகதி முதன்முதலில் இயக்குனர் பாலா இயக்கிய "தாரை தப்பட்டை" திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ செய்திகள் வெளிவந்தன.

நடிகர் யுவனுக்கு ஜோடியாக
எதிர்பாராத சில காரணங்களால் அந்த படத்தில் இருந்து இவர் விலகிய நிலையில் இயக்குனர் பாலா தனது அடுத்த படத்தில் நடிகர் யுவனுக்கு ஜோடியாக இவர் கண்டிப்பாக நடிப்பார் என கூறியதாக சில பத்திரிகைகளில் செய்தி வந்ததை அடுத்து அந்த படமும் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
Recommended Video

பிறந்த நாள்
இவ்வாறு தமிழ் சினிமாவில் இளம் பாடகியாகவும் எதிர்கால கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் பாடகி ப்ரகதி குருபிரசாத் செப்டம்பர் 14 ஆம் தேதியான இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதை யொட்டி திரைத் துறையைச் சேர்ந்த நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











