இரண்டு முறை அபார்ஷன்.. ரசிகர்களிடம் வேதனை தெரிவித்த பிரபல பாடகி!
சென்னை : பிரபல பின்னணி பாடகி சுஜாதா மோகன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 4000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார்.
சிறு வயதிலிருந்தே தன்னுடைய பாட்டு பாடும் திறமையை வளர்த்துக் கொண்ட சுஜாதாவிற்கு 18 வயதானவுடன் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இவரது கணவர் கிருஷ்ணா மோகன் ஒரு மருத்துவர். இவர்களுக்கு ஸ்வேதா மோகன் என்ற மகள் உண்டு. இவரும் பின்னணி பாடகியாக வலம் வருகிறார்.

பிரபல பின்னணி பாடகி சுஜாதா மோகன்
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என இந்திய அளவில் சிறப்பான பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்தவர் சுஜாதா மோகன். கடந்த 2000ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டுவரை சிறப்பான பல பாடல்களை புது வெள்ளை மழையாக பொழிந்தவர் இவர்.

சிறுவயதிலேயே திருமணம்
இவருடைய தந்தை சிறுவயதிலேயே உயிரிழந்ததால், சுஜாதாவிற்கு 18 வயதானவுடன் கிருஷ்ணா மோகன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவரது கணவர் ஒரு மருத்துவர். குழந்தைகள் நல நிபுணர். இவர்களுக்கு ஸ்வேதா மோகன் என்ற மகள் உள்ளார். இவரும் பிரபல பின்னணி பாடகியாக உள்ளார்.

இரண்டுமுறை அபார்ஷன்
சுஜாதாவிற்கு திருமணமானவுடன் இரண்டு முறை அபார்ஷன் ஆகிவிட்டதாம். இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு அவர் உள்ளான நிலையில், அவருக்கு மூன்றாவதாக ஸ்வேதா மோகன் பிறந்துள்ளார். இதனிடையே தான் மிகவும் பிசியான பாடகியாக பல மொழிகளில் பாடி வந்ததால், தன்னுடைய மகளின் பள்ளி, கல்லூரி நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ள முடியாமல் போனது குறித்து சமீபத்திய பேட்டியில் சுஜாதா மோகன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

பேத்தியுடன் சந்தோஷ தருணங்கள்
ஸ்வேதாவிற்கு திருமணமாகி குழந்தை உள்ள நிலையில், தன்னுடைய மகளுக்கு செய்ய முடியாமல் போனதை எல்லாம் தற்போது தன்னுடைய பேத்திக்கு சந்தோஷமாக தானும் தன்னுடைய கணவரும் செய்து வருவதாக சுஜாதா மோகன் தெரிவித்துள்ளார். ஸ்வேதா கச்சேரிகளுக்காக வெளிநாடுகளுக்கு போகும் போதெல்லாம் தன்னுடைய பேத்தியை சிறப்பாக கவனித்து வருவதாகவும் சுஜாதா தெரிவித்துள்ளார்.

நடுவராக சுஜாதா மோகன்
சுஜாதா மோகன், பிரபல பாடகியாக இருந்ததோடு மட்டுமில்லாமல் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் போட்டியின் அடுத்தடுத்த சீசன்களில் ஜட்ஜாக இருந்து ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்தவர். தன்னுடைய குழந்தைத்தனம் மாறாத சிரிப்பால் ரசிகர்களை இவர் வெகுவாக கவர்ந்ததுடன், போட்டியாளர்களின் பேவரைட்டும் இவர்தான்.

சுஜாதாவின் புன்சிரிப்பு
தன்னுடைய புன்சிரிப்பால் போட்டியாளர்களின் குறைகளைக் கூட நாசுக்காக கூறும் சிறப்பு சுஜாதாவிடம் இருந்தது. மேலும் ஜீ தமிழின் சரிகமப சாம்பியன்ஸ் போன்ற நிகழ்ச்சிகளிலும் இவர் ஜட்ஜாக இருந்து நிகழ்ச்சிகளை சிறப்பாக்கினார். தற்போது தன்னுடைய குடும்பத்தினருடன் சிறப்பான பொழுதுகளை போக்கி வருகிறார் சுஜாதா மோகன்.


Click it and Unblock the Notifications











