கோமாளி ஹிந்தி ரீமேக்கில் நடிக்கும் பிரபல வாரிசு நடிகர்!

மும்பை : இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படம் பெரிய வெற்றி பெற்றது.

ஜெயம் ரவி,யோகி பாபு, காஜல் அகர்வால்,கே எஸ் ரவிக்குமார், சம்யுக்தா உள்ளிட்ட பலர் இதில் நடித்திருந்தனர்.

தமிழில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இப்பொழுது இந்த படம் ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்பட பிரபல வாரிசு நடிகர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

உணர்வுபூர்வமாக

உணர்வுபூர்வமாக

வித்தியாசமான கதைகளில் தொடர்ந்து நடித்து அதில் வெற்றியும் பெற்று வரும் நடிகர் ஜெயம் ரவியின் நடிப்பில் அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் 2019 இல் வெளியான திரைப்படம் கோமாளி. கோமாவில் இருந்து நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் நினைவு திரும்பியதும் இப்போதுள்ள சூழலை பார்த்து எப்படி எல்லாம் ஹீரோ நடந்து கொள்கிறார் என்பதை மிகவும் காமெடியாகவும் உணர்வுபூர்வமாகவும் படத்தில் கூறியிருந்தார்கள்.

காமெடி கலந்த வில்லன்

காமெடி கலந்த வில்லன்

யோகி பாபு இதில் காமெடியனாக மட்டுமல்லாமல் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுகளை பெற்றிருப்பார். ஜெயம் ரவி,யோகிபாபு வரும் காட்சிகள் அனைத்தும் ரசிகர்களின் கைதட்டல்களை பெற்றிருந்தது. இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் இதில் காமெடி கலந்த வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து புதிய பரிமாணத்தை கொடுத்திருப்பார்.

பல நாட்கள் ஓடின

பல நாட்கள் ஓடின

இயக்குனர் ரங்கநாதன் முதல் படத்திலேயே ஆடியன்ஸின் பல்ஸை தெரிந்து கொண்டு பக்கா கமர்ஷியல் படத்தை இயக்கி வெற்றி இயக்குனர் என பெயர் எடுத்தார். வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் ஐசரி கே.கணேஷ் தயாரிப்பில் குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 100 கோடியை வசூல் செய்து மாபெரும் வெற்றி பெற்றது. திரையரங்குகளிலும் சக்கை போடு போட்டு பல நாட்கள் ஓடின.

போனி கபூரின் மகன்

போனி கபூரின் மகன்

தமிழில் பெரும் வரவேற்பை பெற்ற இந்தப் படம் தெலுங்கு உள்ளிட்ட சில மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட நிலையில் இப்பொழுது இந்தி ரீமேக் உரிமையை தயாரிப்பாளர் போனி கபூர் கைப்பற்றி உள்ளார். அஜித்தின் நேர்கொண்ட பார்வை வலிமை போன்ற படங்களை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கும் ஆர்டிகிள் 15 தமிழ் ரீமேக்கையும் தயாரிக்க உள்ளார். இந்த நிலையில் கோமாளி ஹிந்தி ரீமேக்கில் போனி கபூரின் மகனும் நடிகருமான அர்ஜுன் கபூர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X