For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  நகைச்சுவை ஜாம்பவான்.. வைகைப்புயல் வடிவேலுக்கு இன்று பிறந்தநாள்... திக்குமுக்காடும் இணையதளம்!

  |

  சென்னை : தமிழ் திரைத்துறையில் ஈடு இணையற்ற கலைஞராக இன்றுவரை விளங்கி வரும் நடிகர் வடிவேலு இப்பொழுது இருக்கும் சந்ததியினருக்கும் மிகவும் பரிச்சயமானவர்.

  மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த வடிவேலு இப்போது தமிழ் சினிமாவில் மிகப்பெரிய உயரத்தில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கிறார்.

  சந்தோஷம் துக்கம் அழுகை என எல்லா சூழ்நிலையிலும் இவருடைய காமெடி ஆறுதலாக இருக்கும். செப்டம்பர் 12 ஆம் தேதியான இன்று வடிவேலு தனது 60வது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி திரையுலகினர் பலரும் ஒன்றுகூடியும் இவரது தீவிர ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து இணையத்தை தெறிக்க விட்டு வருகின்றனர்.

  கோலிவுட்டின் லேட்டஸ்ட் டாக்.. அடுத்த காதலில் இளம் ஹீரோ.. பெண் தயாரிப்பாளருடன் பிக்கப் ட்ராப்!

  பல கோடி ரசிகர்கள்

  பல கோடி ரசிகர்கள்

  நடிகர் வடிவேலுவை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திட முடியாது குழந்தைகள் முதல் பெரியோர் வரை வயது வித்தியாசம் இல்லாமல் இவரது காமெடியை ரசித்தவாறு வாய்விட்டு சிரித்துக் கொண்டிருக்கும் பல கோடி ரசிகர்கள் இன்றும் இருந்து வருகின்றனர்.

  காமெடி காட்சிகள்

  காமெடி காட்சிகள்

  சந்தோஷம் துக்கம் அழுகை என எல்லா சூழ்நிலையிலும் இவருடைய காமெடி ஆறுதலாக இருக்கும் அந்த அளவிற்கு இவரது படங்களில் வரும் காமெடி காட்சிகள் பலரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்து வருகிறது.

  அறிமுகத்தை கொடுத்தார்

  அறிமுகத்தை கொடுத்தார்

  இயக்குனர் கஸ்தூரி ராஜா இயக்கிய " என் ராசாவின் மனசிலே" திரைப்படத்தில் ராஜ்கிரண் கதாநாயகனாக நடிக்க, அந்த திரைப்படத்தில் ராஜ்கிரணின் உதவியோடு முதல்முறையாக ஒரு சிறிய காமெடி கதாபாத்திரத்தில் நடித்து திரைத்துறைக்கு தனது அறிமுகத்தை கொடுத்தார்.

   துணை கதாபாத்திரங்களில்

  துணை கதாபாத்திரங்களில்

  ஆரம்பத்தில் செந்தில் கவுண்டமணியுடன் இணைந்து சிறுசிறு துணை கதாபாத்திரங்களில் தோன்றி ரசிக்க வைத்த வடிவேலு பின் தனது தனித்துவமான காமெடியின் மூலம் தனி ஆளாக களத்தில் நின்று கெத்தாக வெற்றி வலம் வந்தார்.

  திருப்புமுனையாக அமைந்தது

  திருப்புமுனையாக அமைந்தது

  மெல்லிய தேகம், கருப்பு கலர், பார்த்த உடனே சிரிக்கக்கூடிய பாடி லாங்குவேஜ் திருட்டு முழி என காமெடி கதாபாத்திரத்திற்கு தேவையான அத்தனை அம்சங்களையும் கொண்டிருந்த வடிவேலுக்கு இயக்குனர் ஷங்கர் இயக்கிய காதலன் திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

  இன்றளவும் உண்டு

  இன்றளவும் உண்டு

  மேலும் நடிகர் வடிவேலு இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார் என்றாலே போதும் மக்கள் அவருக்காகவே கூட்டம் கூட்டமாக சென்ற பல வெற்றிப்படங்கள் இன்றளவும் உண்டு, அதில் வெற்றிக்கொடி கட்டு, பிரண்ட்ஸ், மருதமலை, சந்திரமுகி, கிரி, தலைநகரம், வின்னர், வெடிகுண்டு முருகேசன், லண்டன் உட்பட எக்கச்சக்கமான திரைப்படங்கள் இதில் உள்ளடங்கும்.

  இருவேறு வேடங்களில்

  இருவேறு வேடங்களில்

  தமிழ் சினிமாவில் உச்ச காமெடி நாயகனாக வலம் வந்த வடிவேலு இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில் உருவான " இம்சை அரசன் 23ஆம் புலிகேசி" திரைப்படத்தில் கதாநாயகனாக இருவேறு வேடங்களில் நடித்து அசத்தி இருக்க அந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று வசூலை குவித்ததோடு பல்வேறு ரெக்கார்டுகளையும் செய்து இன்றுவரை பலரது ஃபேவரிட் திரைப்படமாக இருந்து வருகிறது.

  மீம்ஸ்களில் டெம்பிளேட்டுகளாக

  மீம்ஸ்களில் டெம்பிளேட்டுகளாக

  இந்நிலையில் சமீபகாலமாக இவர் படங்களில் எதுவும் பெரிதாக நடிக்காமல் இருக்கின்ற போதும், அவரது திரைப்படங்களில் வரும் பெரும்பாலான காமெடி காட்சிகள் டெம்பிளேட்டுகளாக மீம்ஸ்களில் வலம் வருவதை ஒவ்வொரு நாளும் நம்மால் பார்க்க முடிகிறது.

  சர்வ சாதாரணமாக

  சர்வ சாதாரணமாக

  எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் இவரது காமெடியில் வரும் ஒரு சின்ன போட்டோவை எடுத்து கோர்த்து போட்டுவிட்டால் போதும் அதற்கு அர்த்தம் புரிந்துவிடும் அந்த அளவிற்கு மீம்ஸ்களில் மிக சர்வ சாதாரணமாக இவரின் பல்வேறு திரைப்படங்களின் காமெடி காட்சிகள் இடம்பெற்று வருகின்றன.

  இரண்டாவது ரவுண்டு

  இரண்டாவது ரவுண்டு

  எத்தனை ஆண்டுகள் ஆனாலும், எத்தனை தலைமுறைகள் வந்தாலும் வடிவேலுவின் காமெடி என்றுமே தனித்துவமாக அனைவரையும் சிரிக்க வைப்பதில் தவறியதே இல்லை. மெர்சல், சிவலிங்கா திரைப்படத்திற்கு பிறகு வடிவேலு மீண்டும் தமிழ் சினிமாவில் இரண்டாவது ரவுண்டு வருவார் என பலரும் எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் இப்பொழுது வெப் சீரியஸில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

  கொரோனா.. இறைவன் ரிலீஸ் செய்த படம்.. வைரலாகும் வடிவேலுவின் வீடியோ!
  பிறந்தநாள் வாழ்த்து

  பிறந்தநாள் வாழ்த்து

  இவ்வாறு மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் நடிகர் வடிவேலு செப்டம்பர் 12 ஆம் தேதியான இன்று தனது 60 ஆவது பிறந்தநாளை குடும்பத்தாருடன் கொண்டாடி வருவதையொட்டி திரைத்துறையைச் சார்ந்த எக்கச்சக்கமான திரை பிரபலங்களும், உலகெங்கிலுமுள்ள இவரது கோடிக்கணக்கான ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை இணையதளத்தின் மூலமாக தெரிவித்து

  தெறிக்க விட்டு வருகின்றனர்.

  English summary
  Famous Star Vadivelu Celebrates his 60th Birthday today
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X