என்னது டிஆரை சத்யராஜ் திட்டினாரா... பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் பகிர்ந்த ரகசியம்!
சென்னை : தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என 1500 படங்களுக்கும் மேற்பட்ட படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியவர் மூத்த ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ ரத்தினம். இவர் ரஜினி, கமல், விஜய்காந்த், அஜித் விஜய் படங்களுக்கு சண்டை காட்சி அமைத்துள்ளார். தற்போது இவர் டிஆர் குறித்த ரகசியத்தை பகிர்ந்துள்ளார்.

பிரபல ஸ்டண்ட் மாஸ்டர்
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 1500க்கும் மேற்பட்ட படங்களில் சண்டை இயக்குனராக பணிபுரிந்தவர் மூத்த ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ ரத்தினம். இவர் ரஜினி, கமல், விஜயகாந்த், அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் சண்டைக்காட்சி அமைத்துள்ளார்.

டிஆர் -சத்யராஜ் சண்டை
தற்போது 92 வயதாகும் ஜீவரத்தினம் பிரபல பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தன்னுடைய நினைவலைகளை பகிர்ந்துள்ளார். டி ராஜேந்தர் படத்திற்கும் இவர் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்துள்ளார். இந்நிலையில் டி ராஜேந்தர் இயக்கத்தில் உருவான ஒரு படத்தின் படப்பிடிப்பின்போது டி ராஜேந்தர் மற்றும் சத்யராஜ் இடையே வெடித்த மோதல் குறித்த ரகசியத்தை ஜூடோ தற்போது பகிர்ந்துள்ளார்

டிஆரை திட்டிய சத்யராஜ்
டி ராஜேந்தரின் தங்கைக்கோர் கீதம், உயிருள்ளவரை உஷா இரண்டு படங்களுக்கு இவர் ஸ்டண்ட் மாஸ்டராக இருந்துள்ளார். அந்த படங்களில் சத்யராஜ் மற்றும் டி ராஜேந்தர் இடையே சண்டை காட்சி நடைபெற்ற போது டி ராஜேந்தரிடம் தான் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்று குறிப்பிட்டதாகவும் ஆனால் அவர் உணர்ச்சிவசப்பட்டு சத்யராஜ் வயிற்றில் பயங்கரமாக குத்தி விட்டதாகவும் ஜூடோ தெரிவித்துள்ளார்.

சத்யராஜை சமாதானப்படுத்திய டிஆர்
இதையடுத்து பயங்கர வலியில் சத்யராஜ் மனுஷனாடா நீ, என்ன இப்படி குத்துற என்று அவரை பயங்கரமாக திட்டியுள்ளார். தொடர்ந்து சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து சத்யராஜ் கோபத்துடன் வெளியேறியதாகவும் இதையடுத்து டிஆர் அவரை சமாதானப்படுத்தி மீண்டும் நடிக்க வைத்ததாகவும் ஜூடோ தெரிவித்துள்ளார்

சொல்பேச்சு கேட்காத டிஆர்
இதேபோல மற்றொரு சுவாரசியமான தகவலையும் ஜூடோ பகிர்ந்துள்ளார். ஜீப்பின் மீது நின்று குதிக்கும் காட்சிகளில் டி ராஜேந்தர் நான்தான் குதிப்பேன் என்று சொன்னதாகவும் ஆனால் ஜூடோ அது அவரால் முடியாது பிரச்சினை வரும் என்று சொன்னதாகவும் ஆனால் அதைக் கேட்காமல் ஜீப் மேலே இருந்து டிஆர் குதித்ததாகவும் பின்பு காலை உடைத்துக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்


Click it and Unblock the Notifications











