நடிச்சா அவங்க கூடத்தான்.. ஹனி ரோஸுக்காக "அலையும்" டாப் தமிழ் ஹீரோ.. கால் ஷீட்டுக்கே இவ்வளவு கோடியா?
சென்னை: நடிகை ஹனி ரோஸுடன் நடிக்க வேண்டும் என்று பிரபல தமிழ் நடிகர் ஒருவர் தீவிரமாக முயன்று வருவதாக கோலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. பாலகிருஷ்ணாவுடன் இவர் நடித்த 'வீர சிம்ஹா ரெட்டி' படம் பெரிய அளவில் ஹிட் அடித்தது. படத்தில் இவரின் நடிப்பு பெரிய அளவில் பாராட்டப்பட்டது.
தெலுங்கு சினிமா உலகில் தற்போது பிரபலமாக இருக்கும் நடிகை ஹனி ரோஸ். சிங்கம் புலி, பட்டாம் பூச்சி போன்ற படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் ஹனி ரோஸ். ஹனிரோஸ் நடித்த தொடக்க கால தமிழ் படங்கள் மோசமாக பிளாப் ஆகின. இதனால் தமிழில் அவருக்கு பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
தெலுங்கு சினிமா உலகில் தற்போது பிரபலமாக இருக்கும் அவர்.. சமீபத்தில் பாலகிருஷ்ணா படத்தில் நடித்தார்.

பாலகிருஷ்ணா
பாலகிருஷ்ணாவுடன் இவர் நடித்த 'வீர சிம்ஹா ரெட்டி' படம் பெரிய அளவில் ஹிட் அடித்தது. அந்த படத்தில் கவர்ச்சியாக இவர் நடித்த விதம் பெரிய அளவில் கவனிக்கப்பட்டது. முக்கியமாக புடவையிலேயே இவர் கவர்ச்சி காட்டியது ரசிகர்கள் இடையே வரவேற்பை பெற்றது. மலையாளத்தில் மோகன்லால் படமான மான்ஸ்டர் படத்திலும் இவர் நடித்து இருந்தார். அந்த படத்திலும் இவரின் நடிப்பு கவனிக்கப்பட்டது. தமிழ் சினிமாவில்தான் இவரை சரியாக பயன்படுத்தாமல் மிஸ் செய்துவிட்டனர் என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

கோலிவுட்
இந்த நிலையில்தான் நடிகை ஹனி ரோஸுடன் நடிக்க வேண்டும் என்று பிரபல தமிழ் நடிகர் ஒருவர் தீவிரமாக முயன்று வருவதாக கோலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி சமீபத்தில்தான் அந்த ஹீரோ தனது முதல் படத்தில் நடித்தார். முதல் படத்தில் அவரின் ரோபோ போன்ற நடிப்பு கிண்டலுக்கு உள்ளானது. அவருக்கு நடிக்கவே வரவில்லை என்று பலரும் கடுமையாக கிண்டல் செய்தனர். அவரின் நடை, நடனம் என்று பலவற்றையும் கிண்டல் செய்தனர். முக்கியமாக சில காட்சிகள் அவர் டயலாக் டெலிவரி செய்த விதத்தையும் கிண்டல் செய்தனர்.

ஆசை
தற்போது அந்த நடிகர் தனது இரண்டாவது படத்தில் இந்த ஹீரோயினை நடிக்க வைக்க முடிவு செய்து இருக்கிறாராம். நடித்தால் இந்த நடிகைதான் வேண்டும் என்றும் கூறி இருக்கிறாராம். அந்த வகையில் அந்த நடிகைக்கு பல கோடிகளை சம்பளமாக கொடுத்து அழைத்து வர முடிவு செய்துள்ளாராம். அந்த நடிகர்தான் தன்னுடைய படத்திற்கும் தயாரிப்பாளர். அதனால் அவர்தான் ஹனி ரோஸுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும். அதனால் அவரே பல கோடிகளை சம்பளமாக கொடுக்க ரெடியாக இருக்கிறாராம்.

ரவுண்டு
ஹனிரோஸ் நடித்த தொடக்க கால தமிழ் படங்கள் மோசமாக பிளாப் ஆகின. அப்போது இவர் மிகவும் ஒல்லியாக இருப்பார். அதேபோல் நடிக்கவும் வராது. ஆனால் தற்போது ஹனி ரோஸின் தோற்றமே மாறிவிட்டது. நடிப்பும் மாறிவிட்டது. அவர் ஆளும் வெயிட் போட்டு அழகாக மாறிவிட்டார். அதனால் அவருடன் நடிக்க தெலுங்கு உலகில் ஹனி ரோஸுடன் நடிக்க பலரும் ஆர்வம் காட்டி வருகிறார்களாம். இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழிலும் அவருடன் நடிக்க அந்த பணக்கார நடிகர் முயன்று வருகிறாராம்.


Click it and Unblock the Notifications











