Vijay: விஜய் பொடி பையன்.. பயந்து பயந்துதான் அதைச் செய்வார்.. ரகசியம் உடைத்த பிரபல நடிகை!
சென்னை: நடிகர் விஜய், தமிழ் சினிமாவின் அடையளமாக மாறி நிற்கின்றார். இன்றைக்கு தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் இந்திய சினிமாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்றால் அது விஜய்தான் என செய்திகளே வெளியாகும் அளவிற்கு உயர்ந்து நிற்கின்றார். சினிமாவில் இருந்து முற்றிலும் விலகி முழு நேர அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ள நிலையில் இவரது கடைசி படமான தளபதி 69 படத்தின் அறிவிப்பு சில தினங்களுக்கு முன் வெளியானது. தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் தென்னிந்திய சினிமாவில் அதிக ரசிகர்களைக் கொண்டுள்ளவராக விளங்கும் விஜய் குறித்து தெரிந்து கொள்வதற்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் ஆர்வம் இருந்து வருகின்றது. இந்நிலையில் பிரபல நடிகையான கவிதா, பேட்டி ஒன்றில் விஜய் குறித்து பேசியுள்ளது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அந்தப்படத்தினை அவரது தந்தையும் அன்றைய காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் டாப் இயக்குநருமாக இருந்த எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கினார். தொடர்ந்து விஜய்யின் பல படங்களை அவரது தந்தையே இயக்கினார். செந்தூரப் பாண்டி படத்தில் விஜயகாந்த்துடன் இணைந்து நடித்தார். அந்தப் படம் விஜய்யை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.

அதன்பின் தனது திரை வாழ்க்கையில் பல ஏற்ற இறக்கங்களை விஜய் சந்தித்திருந்தாலும் இன்றைக்கு அவர் படத்தினை எதிர்த்து படங்களை வெளியிட பல நடிகர்கள் பயப்படுகின்றார்கள் என்றுதான் கூறவேண்டும். காரணம், இவர் படத்திற்கு கிடைக்கும் மாஸ் ஓப்பனிங். விஜய் படத்தை எதிர்த்து படங்களை ரிலீஸ் செய்கின்றார்கள் என்றால் அது, அஜித், ரஜினி போன்ற உச்ச நட்சத்திரங்கள்தான். ஆனாலும் விஜய் தன்னை ஒரு கலெக்ஷன் கிங்காவே நிறுவி வருகின்றார்.
பிசினஸ்: இன்றைக்கு தமிழ் சினிமாவை லாபத்திற்கு ஈட்டிச் செல்லும் நடிகர்களில் விஜய்யும் ஒருவர். இவர் சினிமாவை விட்டு மொத்தமாக வெளியேறுகின்றார் என்ற அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தினாலும், திரைத்துறையினருக்கு வணிக ரீதியாக மாபெரும் பின்னடைவுதான். இன்றைக்கு விஜய் இவ்வளவு முக்கியமானவராக இருந்தாலும், தொடக்கத்தில் அவர் எதிர்கொண்ட விமர்சனங்கள் மிகவும் மோசமானவை.

பொடி பையன்: இந்நிலையில் நடிகர் விஜய் நடித்த முதல் படமான நாளைய தீர்ப்பு படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்தவர் நடிகை கவிதா. அவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் அளித்த பேட்டியில் விஜய் குறித்து கூறியுள்ளார். அது பலருக்கும் சுவராஸ்யமானதாக உள்ளது. குறிப்பாக அந்த பேட்டியில், " நடிகர் விஜய் அப்போது ரொம்பவும் சின்ன பையன். எனக்குத் தெரிந்து 11வது அல்லது 12வது முடித்துவிட்டு சினிமாவுக்கு வந்திருப்பார். மீசை கூட சரியாக வளராத வயது. நாம் எல்லாம் சொல்லுவோமே 'பொடி பையன்னு' அப்படியான வயதில் நடிக்க வந்தார்.

பயம்: படப்பிடிப்புத் தளத்தில் மிகவும் அமைதியாக இருப்பார். அவர் எப்போது தனது தந்தையும் இயக்குநருமான எஸ். ஏ. சந்திர சேகரைத்தான் பார்த்துக் கொண்டு இருப்பார். இன்னும் சொல்லப்போனால், எஸ்.ஏ. சந்திரசேகர் சாருக்குப் பின்னால், விஜய்யின் அம்மா நிற்பார். நடிகர் விஜய் அவங்க அம்மாவைத்தான் அதிகம் பார்த்துக் கொண்டு நிற்பார். விஜய் தான் எது செய்தாலும் பயந்து பயந்துதான் செய்வார். ஆனால் இன்றைக்கு விஜய்யின் நடிப்பு மொத்தமாக மாறிவிட்டது. அவருடைய நடனம் எனக்கு மிகவும் பிடிக்கும். எனது குழந்தைகள் விஜய்யின் தீவிர ரசிகர்கள்" எனக் கூறியுள்ளார். இவரது இந்த பேட்டி இணையத்தில் உலா வருகின்றது.


Click it and Unblock the Notifications











