Don't Miss!
- News எங்களை பாதுகாத்துக்கொள்ள தெரியும்! நட்பு நாடுகளின் அட்வைஸை ஏற்காத இஸ்ரேல்! மத்திய கிழக்கில் பதற்றம்
- Sports IPL 2024 CSK : சிஎஸ்கே அணியின் அடுத்த மேட்ச் எப்போது? எந்த அணியுடன்? முழு விவரம்
- Technology அடிச்சார் பாரு அம்பானி! மாசத்துக்கு ரூ.150 தான்.. SMS, அன்லிமிடெட் Calls, டேட்டா, Jio Cinema-னு எல்லாமே உண்டு!
- Automobiles என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
- Lifestyle Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
தம்மாத்துண்டு ட்ரஸுடன் தமிழ் நடிகை போஸ்... சரியா தெரியல கிளாரிட்டியா அனுப்புங்க ரசிகர்கள் கெஞ்சல்!
சென்னை : நடிகை ராஷி கண்ணா தற்பொழுது தம்மாத்தூண்டு ட்ரஸில் படுத்துக்கிடக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இமைக்கா நொடிகள், சங்கத் தமிழன், ஆகிய படங்களை தொடர்ந்து மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்து துக்ளக் தர்பார் படத்தில் நடித்து வருகிறார்.
தமிழ் சினிமாவிற்கு சற்று தாமதமாகவே அறிமுகமாகி இருந்தாலும் இப்பொழுது கைநிறைய படங்களுடன் ஜொலித்துக் கொண்டிருக்கும் ராஷி கண்ணா தம்மாத்துண்டு டிரஸ்ஸில் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சரியா தெரியல கிளாரிட்டியா அனுப்புங்க என செல்லமாக கெஞ்சி வருகின்றனர்.
அதர்வாவுக்கு ஜோடியாக
நயன்தாரா,அதர்வா,விஜய் சேதுபதி, அனுராக் என பெரிய பட்டாளமே நடித்திருந்த இமைக்கா நொடிகள் படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியிருந்தார். ஹிந்தி, தெலுங்கு என படு பிசியாக நடித்துக் கொண்டிருந்த நடிகை ராஷிகண்ணா இமைக்காநொடிகள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் இதில் இவர் நடிகர் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்திருப்பார்.
மூன்றாவது முறையாக
தமிழில் அறிமுகமான சில வருடங்களிலேயே அடுத்தடுத்து நடித்து முன்னணி நடிகர்களின் ஆஸ்தான கதாநாயகியாக மாறிப்போன ராஷிகண்ணா தற்போது விஜய் சேதுபதியுடன் மூன்றாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ளார். சங்கத்தமிழன் படத்திற்கு பிறகு துக்ளக் தர்பார் படத்திலும் இவர் நடித்து வருகிறார்.
வெப் சீரிஸ்
அரண்மனை3, மாதவி, சைத்தான் கே பச்சா என அடுத்தடுத்து எதிர்பார்ப்பைக் கூட்டக்கூடிய படங்கள் ராஷிகண்ணாவுக்கு வெளியாக இருக்க தற்பொழுது ஹிந்தியில் மெகா பட்ஜெட்டில் உருவாகும் வெப் சீரிஸ் ஒன்றிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதில் சாகித் கபூர்,விஜய் சேதுபதி மற்றும் மாளவிகா மோகனன் ஆகியோரும் நடிக்கின்றனர்.
கிளாரிட்டியா அனுப்புங்க
இதற்கிடையில் சமூக வலைதளங்களில் சேலை, மாடர்ன் டிரஸ், பிகினி என கலக்கலாக வெளியிடும் பல புகைப்படங்கள் ரசிகர்களை குளிர்வித்து வைரலாகி வர இப்பொழுது மீண்டும் அரைகுறை ஆடையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஸ்டுடியோ ஒன்றில் சேரில் தம்மாத்துண்டு ட்ரஸ்ஸில் முன்னழகு தெரிய தலையில் கை வைத்துக்கொண்டு சேரில் ஹாயாக சாய்ந்து சில் செய்து கொண்டிருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளதைப் பார்த்த ரசிகர்கள், சரியா தெரியல கிளாரிட்டியா அனுப்புங்க என செல்லமாக அடம் பிடிக்கின்றனர்.