19 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தாயான பிரபல நடிகையின் அம்மா

சென்னை : சன் டிவியில் ஒளிபரப்பாகும் சித்தி 2, விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகும் பாக்யலட்சுமி உள்ளிட்ட டிவி சீரியல்களில் நடித்து வருபவர் நேஹா மேனன். குழந்தை நட்சத்திரமாக நடிப்பை துவங்கிய நேஹா, பல சீரியல்களில் நடித்துள்ளார். நாரதன், ஜாக்சன் துரை உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார்.

சில வாரங்களுக்கு முன், தனது குடும்பத்தில் நல்ல செய்தி ஒன்றை எதிர்பார்ப்பதாகவும், சரியான நேரத்தில் அதை வெளியிட போவதாகவும் நேஹா தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

Famous Tamil serial actresss mother gives birth to a baby after 19 years

இந்நிலையில் செவ்வாய்கிழமை வீடியோ ஒன்றை வெளியிட்ட நேஹா, தனது அம்மா கர்ப்பமாக இருந்ததாகவும், தற்போது 8 மாதத்தில் பெண் குழந்தையை பெற்றெடுத்திருப்பதாகவும், மருத்துவமனையில் இருவரும் நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

நேஹா, 2002 ம் ஆண்டு பிறந்தார். தற்போது 19 ஆண்டுகளுக்கு பிறகு அவரது அம்மா மீண்டும் தாயாகி உள்ளார். இது பற்றி நேஹா கூறுகையில், என் அம்மாவை விட நான் தான் தாயாக உணர்கிறேன். அவளை வளர்க்க ஆவலாக உள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த தகவல் சமூக வலைதளங்களில் டிரோல் செய்யப்படுவது பற்றிய கேள்விக்கு பதிலளித்த நேஹா, அது போன்ற அர்த்தமற்ற குப்பைகளுக்கு பதிலளிக்க நான் விரும்பவில்லை. ஒரு நல்ல மகிழ்ச்சியான தருணத்தை கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை. அதனால் உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள் என தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X