பாலா -சூர்யா காம்போவுடன் இணையும் பிரபல எழுத்தாளர்.... படத்திற்கு கூடும் பலம்!
சென்னை : நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் பாலா இருவரும் புதிய படத்தில் இணையவுள்ளனர்.
இதுகுறித்து நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
இந்தப் படத்தின் நடிகர், நடிகைகள் தேர்வு தற்போது மும்மூரமாக நடைபெற்று வருகிறது.

சூர்யா -பாலா கூட்டணி
நடிகர் சூர்யா மற்றும் பாலா கூட்டணியில் பிதாமகன், நந்தா ஆகிய படங்கள் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தன. இந்தக் கூட்டணி இணைந்து 20 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், தற்போது மீண்டும் இணையவுள்ளது. இந்தப் படத்தை நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

சூர்யா அறிவிப்பு
இதுகுறித்து தனது தந்தை சிவக்குமாரின் பிறந்தநாளையொட்டி நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். தற்போது சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின் பிரமோஷன் பணிகளில் சூர்யா ஈடுபட்டுள்ளார். படம் பிப்ரவரியில் ரிலீசாக உள்ளது.

மார்ச் 2022ல் சூட்டிங்
இந்த மாதத்தில் சூர்யா -பாலா படத்தின் சூட்டிங் துவங்கவிருந்த நிலையில், தற்போது அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் படப்பிடிப்பு துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே படத்தின் மற்ற பணிகளை பாலா மேற்கொண்டு வருகிறார். நடிகர், நடிகையர் தேர்வும் நடைபெற்று வருகிறது.

நாயகி இறுதியாகவில்லை
படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இதில் உண்மையில்லை என்றும் இன்னும் நாயகி தேர்வு முடிவாகவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தில் இணைந்த எஸ் ராமகிருஷ்ணன்
இந்நிலையில் இந்தப் படத்தில் தற்போது எஸ் ராமகிருஷ்ணன் இணைந்துள்ளார். அவருடன் ஸ்கிரிப்ட்டை இறுதி செய்யும் வேலைகளில் தற்போது பாலா இணைந்துள்ளார். முன்னதாக நான் கடவுள் படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
Recommended Video

இறுதியான லொகேஷன்
சமீபத்தில் தேனி, பெரியகுளம் போன்ற பகுதிகளில் லொகேஷன் பார்த்து திரும்பியுள்ளார் பாலா. பாலாவின் சமீபத்திய படங்களில் அவன் இவன், தாரை தப்பட்டை படங்கள் தோல்வியடைந்த நிலையில், நாச்சியார் ஓரளவிற்கு கைகொடுத்தது. இந்நிலையில், பிதாமகன், நான் கடவுள் போன்ற வெற்றியை அளிக்க வேண்டிய கட்டாயத்தில் பாலா உள்ளார்.


Click it and Unblock the Notifications











