twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாலு வாத்தியார் முதல் 'கணக்கு டீச்சரா அவங்க...' வரை - #CinemaTeachers

    By Vignesh Selvaraj
    |

    சென்னை : டாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்தநாளான இன்று ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

    பலருக்கு ரோல்மாடலாக இருக்கும் ஆசிரியர்களைக் கௌரவப்படுத்தும் விதமாக மாணவர்களால் ஒவ்வொரு பள்ளிக்கூடங்களிலும கொண்டாடப்படுகிறது.

    காலம் கடந்தும் நினைவிலிருக்கும் நம் தமிழ் சினிமாவின் பிரபலமான சில ஆசிரியர்களைப் பார்க்கலாம் வாங்க...

    'தர்மத்தின் தலைவன்' பாலு :

    'தர்மத்தின் தலைவன்' பாலு :

    காலேஜ் லெக்சரர் பாலுவாக ரஜினிகாந்த் நடித்த படம் 'தர்மத்தின் தலைவன்'. கொடூரமான ஞாபகமறதிக்காரராக வரும் ரஜினி சாப்பாட்டு கேரியரை மறப்பதில் தொடங்கி வேட்டி கட்ட மறப்பது வரை எல்லாமே அந்தலை சிந்தலை ரக அலப்பரைகள்.

    பவ்யமாக நெற்றியில் பட்டை போட்டிருக்கும் இந்த வாத்தியார் பலருக்கு ரோல்மாடல். இந்தப் படத்தில்தான் குஷ்பூ அறிமுகமானார் என்பதும் பிற்காலத்திய வரலாறு.

    'நம்மவர்' கமல் :

    'நம்மவர்' கமல் :

    போதைப் பழக்கங்கள், ரவுடியிசம் எனத் திசைமாறித் திரியும் கல்லூரியின் துணை முதல்வராகப் பொறுப்பேற்றுத் தூக்கி நிறுத்துவார் டாக்டர் செல்வமாக வரும் கமல்.

    'சொர்க்கம் என்பது நமக்கு...' பாடலில் கமல் மாணவர்களுடன் லோக்கல் டான்ஸ் ஆடும் போது இப்படி நமக்கு ஒரு ஆசிரியர் இல்லையே என்று ஏங்க வைக்கும் அளவுக்கு மிக இயல்பாய் நடித்து இருப்பார்.

    சுந்தர காண்டம் 'சண்முகமணி' :

    சுந்தர காண்டம் 'சண்முகமணி' :

    பள்ளிக்கூட வாத்தியாராக வரும் பாக்யராஜுக்கு இந்தப் படம் ஒரு மைல்கல். பள்ளிக்கூட சப்ஜெக்டில் எடுக்கப்பட்ட காமெடி படங்களில் இது இப்போதும் டாப்.

    தன்னுடன் படித்த நண்பன் இன்னமும் படிக்கும் பள்ளிக்கே ஆசிரியராக வருவார் சண்முகமணி. மாணவிக்கு ஆசிரியர் மீது உருவாகும் காதலை உறுத்தல் இல்லாமல் சொன்னவிதத்தில் சொல்லி அடித்தது படம். தனது விருப்பத்திற்குரிய ஆசிரியர் பெயரான சண்முகமணி என்பதையே கேரக்டர் பெயராக்கியிருந்தார் பாக்யராஜ்.

    சாட்டை 'தயாளன்' :

    சாட்டை 'தயாளன்' :

    ஆசியர்களின் அக்கறையின்மை, சோம்பேறித்தனம், ஒழுக்கமின்மையின் உச்சத்தால் உருப்படாமல் போகிறது மாணவர் சமூகம். புதிதாக அந்தப் பள்ளிக்கு மாற்றலாகி வருகிறார் ஆசிரியர் தயாளனான சமுத்திரக்கனி. ஒரே ஆண்டில் அந்தப் பள்ளி ஒழுக்கம், கட்டுப்பாடு, கலைகள், விளையாட்டு என அனைத்திலும் மேன்மை பெற்று மாவட்டத்திலேயே முதலாவது பள்ளியாக உருவாக்குகிறார்.

    அரசுப்பள்ளி ஆசிரியர்களின் பொறுப்பைச் சுட்டிக்காட்டி, மாணவர்களின் பக்கம் நின்ற தயாளன், மாணவர்கள் அடைவதற்கு ஏங்கும் ஆசிரியராக இருக்கிறார்.

    'பசங்க' சொக்கலிங்கம் :

    'பசங்க' சொக்கலிங்கம் :

    படிக்கிற மாணவர்களை எந்தப் பேதமும் இன்றி ஊக்குவிப்பவராகவும், மாணவர்களுக்கு நெருக்கமான ஆசிரியராகவும் வருவார் ஜெயப்பிரகாஷ்.

    மாணவர்களின் குடும்பச் சூழல், உளவியல் தாக்கங்களை அறிந்து அதற்கேற்ற தீர்வைத் தேடுகிறவராக இந்த ஆசிரியர் மாணவர்களின் சாய்சாக இருந்தார்.

    கடலோர கவிதைகள் ஜெனிஃபர் டீச்சர் :

    கடலோர கவிதைகள் ஜெனிஃபர் டீச்சர் :

    கடலோர கவிதைகள் படத்தில் ஜெனிஃபர் டீச்சராகவே வாழ்ந்திருப்பார் நடிகை ரேகா. கையில் குடையோடு டீச்சர்களுக்கான அந்த டிரேட் மார்க் கதாபாத்திரத்தை உருவாக்கிய பெருமை பாரதிராஜாவையே சேரும்.

    'முந்தானை முடிச்சு' தீபா டீச்சர் :

    'முந்தானை முடிச்சு' தீபா டீச்சர் :

    முந்தானை முடிச்சு என்றதுமே முதியோர் கல்வித்திட்டத்தில் தீபா டீச்சர் ஆவன்னா சொல்லித்தரும் காட்சி மனதில் நிழலாடும் வரை தமிழ் சினிமாவுக்கும் டீச்சர்களுக்குமான உறவைப் பிரித்துவிட முடியாது. ஆஆங்!

    காக்க காக்க 'மாயா' :

    காக்க காக்க 'மாயா' :

    அழகான இளமையான மாணவர்களுக்குப் பிடித்த டீச்சராக காக்க காக்க படத்தில் அசத்தியிருப்பார் ஜோதிகா. ஆனால், அவரது டீச்சர் கேரக்டர் படத்தில் சில இடங்களில் மட்டும் காட்டப்பட்டிருக்கும்.

    பள்ளிக்கூடம் 'கோகிலா' :

    பள்ளிக்கூடம் 'கோகிலா' :

    தான் படித்த அதே கிராமத்துப் பள்ளியில் ஏழை மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்கும் எளிமையான டீச்சராக வாழ்ந்திருப்பார் சிநேகா. அந்தப் பள்ளியைத் தரம் உயர்த்திப் புதுப்பிக்கப் பாடுபடுவார்.

    பாண்டியநாடு 'மலர்விழி' :

    பாண்டியநாடு 'மலர்விழி' :

    ப்ளஸ் 1 படிக்கும்போதே நர்சரி பள்ளியில் வகுப்பெடுக்கும் டீச்சராக பாண்டியநாடு படத்தில் அசத்தியிருப்பார் லட்சுமி மேனன். டீச்சர் கதாபாத்திரத்திலும் கலக்கிய ஸ்டூடண்ட் இவர்.

    'ப்ரேமம்' மலர் டீச்சர் :

    'ப்ரேமம்' மலர் டீச்சர் :

    காலேஜ் ப்ரொபசராக வந்து தமிழ், மலையாள ரசிகர்களின் மனங்கவர்ந்த டீச்சராகிப்போன மலர் டீச்சர் சாய் பல்லவியை மறக்க முடியுமா..? மலர் டீச்சரைப்போல ஒரு ஆசிரியர் இருந்தால் போதும் எனக் கல்லூரி மாணவர்களை ஏங்கவைத்தவராச்சே..!

    டீச்சர் ஓ டீச்சர்! :

    டீச்சர் ஓ டீச்சர்! :

    வடிவேலு சுற்றித்திரிந்த டீச்சர், 'நாட்டாமை' டீச்சர் தொடங்கி 'கணக்கு டீச்சரா அவங்க...' ஷகீலா வரை ரசிகர்களுக்குப் பாடம் எடுக்கும் டீச்சர்களும் அவ்வப்போது சினிமாவில் வந்துகொண்டே இருக்கிறார்கள்.

    ஹேப்பி டீச்சர்ஸ் டே!

    English summary
    Jenifer teacher, malar teacher, maya teacher are some examples for onscreen teachers in tamil cinema.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X