விஜய்யின் ஜன நாயகன் படத்தில் இணைந்த பிரபல ஹீரோ?.. லிஸ்ட் பெருசா போகுதே பாஸ்

சென்னை: ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் கடைசி படம் ஜன நாயகன். இதில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் பாபி தியோல், மமிதா பைஜு, விருமாண்டி அபிராமி உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். படத்திலிருந்து இரண்டு போஸ்டர்கள் கடந்த மாதம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. அதனை பார்க்கையில் இந்தப் படம் அரசியல் ஜானரில் உருவாகலாம் என்ற கருத்து பலரிடம் நிலவிவருகிறது. இந்நிலையில் படம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த GOAT திரைப்படம் கடந்த வருடம் வெளியானது. முதன்முறையாக இரண்டு பேரும் இணைந்திருந்ததால் அந்தப் படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. மிகப்பெரிய பட்ஜெட்டில் ஏஜிஎஸ் நிறுவனம் படத்தை தயாரித்திருந்தது. ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யவில்லை. முக்கியமாக படத்தில் புதுமையாக எதுவுமே இல்லை; யூகிக்கக்கூடிய திரைக்கதையாகத்தான் இருந்தது என்று பலரும் ஓபனாகவே பேசினார்கள்.

Vijay Jana Nayagan H Vinoth

தமிழக வெற்றிக் கழகம்: GOAT படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே ஹெச். வினோத் இயக்கத்தில் நடிப்பதற்கு கமிட்டானார் விஜய். இதற்கிடையே தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியையும் தொடங்கினார். மக்களவைத் தேர்தலில் அந்தக் கட்சி போட்டியிடாவிட்டாலும் 2026ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அக்கட்சி களமாட இருக்கிறது. கண்டிப்பாக விஜய்யை வெல்ல வைத்து சட்டப்பேரவைக்கு அனுப்ப வேண்டும் என்று அவரது கட்சியினர் துடித்துக்கொண்டிருக்கின்றனர்.

கடைசி படம்: அரசியலில் அவர் நுழைந்திருப்பதால் இந்தப் படம்தான் அவருக்கு கடைசி படம் என்று கருதப்படுகிறது. விஜய் போன்ற மிகப்பெரிய வியாபாரம் உடைய ஹீரோ ஒருவர்; தன்னுடைய மார்க்கெட் உச்சத்தில் இருக்கும்போதே சினிமாவை தூக்கி எறிந்துவிட்டு அரசியலுக்கு வந்திருப்பதை சமுத்திரகனி உள்ளிட்டோர் பாராட்டிவருகின்றனர். அதேசமயம் தங்கள் தளபதி சினிமாவை விட்டு விலகுகிறாரே என்று அவரது ரசிகர்கள் கொஞ்சம் சோகமடைந்திருப்பதும் உண்மைதான்.

ஜன நாயகன்: விஜய் இப்போது நடித்துவரும் படத்துக்கு ஜன நாயகன் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இதில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். வில்லனாக பாபி தியோல் நடிக்கிறார். படத்தின் பெயரும், போஸ்டர்களும் கடந்த மாதம் 26ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டது. அதனைப் பார்த்த ரசிகர்கள் கண்டிப்பாக இந்தப் படம் அரசியலை மையப்படுத்திதான் இருக்கும் என்று உறுதியாக சொல்ல ஆரம்பித்திருக்கின்றனர். ஆனால் வினோத்தோ அப்படி இருக்காது என்று ஒரு விழாவில் கூறியிருந்ததும் கவனிக்கத்தக்கது.

பிரபல ஹீரோ: இந்நிலையில் ஜன நாயகன் படம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது இந்தப் படத்தில் முக்கியமான ரோலில் நடிக்க சிவராஜ்குமாரிடம் படக்குழு பேசியிருந்தது. ஆனால் அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் நடிக்க முடியவில்லை என்று சொல்லிவிட்டார். சூழல் இப்படி இருக்க பிரபல தெலுங்கு நடிகர் ஒருவர் இந்தப் படத்தில் கமிட்டாகியிருக்கிறார் என்றும்; அவர் யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X