அஜித் தீண்டாமை பிரச்னை! நான் சாட்சி.. ஏ.கே.வை பேட்டி எடுத்த பிரபல வி.ஜே என்ன சொல்றாரு பாருங்க!
சென்னை: தமிழ் சினிமா வட்டாரத்திலேயே தற்போது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம் என்றால் அது, நடிகர் யோபு பாபு படப்பிடிப்பின்போது நடிகர் அஜித்தின் கைகளைத் தொட்டதாகவும், உடனே அஜித் டோன்ட் டச் மி எனக் கூறியதாகவும் வலை பேச்சு பிஸ்மி கூறியதுதான். மேலும் இந்தத் தகவலை எங்களிடம் மிகவும் வருதப்பட்டு, யோகி பாபு தான் கூறினார். நாங்கள்தான் ஊடக தர்மத்தின் அடிப்படையில், அஜித் குமாரின் பெயரை மறைத்துவிட்டு, யோகி பாபுதான் கூறினார் என்பதையும் மறைத்துவிட்டு, கூறினோம் எனக் கூறினார். இந்த விஷயம் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அஜித் உண்மையிலேயே அப்படி நடந்து கொண்டாரா என்ற கேள்வியை பலரும் எழுப்பி வருகின்றனர். இணையவாசிகளோ அஜித் தனது ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், அவர்களுக்கு கை கொடுப்பது, அவர்களை கட்டிப்பிடிப்பது போன்ற வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர். நடிகர் யோகி பாபு அஜித் உடன் வேதாளம் மற்றும் வீரம் ஆகிய படங்களில் நடித்தார்.

ஃபோட்டோ: இந்நிலையில், நடிகர் யோகி பாபு தனது எக்ஸ் பக்கத்தில் வேதாளம் படத்தின் படப்பிடிப்பின்போது மொட்டை ராஜேந்திரன் உடன் தான் அமர்ந்துள்ளதை அஜித்குமார் தனது கேமராவில் ஃபோட்டோ எடுக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். மேலும் அந்தப் புகைபடத்தில், எனக்கு மிகவும் பிடித்த புகைப்படம். மைடியர் தல, அஜித்குமார் சார் எனக் குறிப்பிட்டுள்ளார். யோகி பாபு குறித்து பிஸ்மி இவ்வாறு கூறியுள்ள நேரத்தில் யோகி பாபு தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படம் பலரது கவனத்தை ஈர்த்தது.
வீடியோ: அதேநேரத்தில் நேற்றைய தினம் அஜித் அதிவேகமாக கார் ஓட்டும் வீடியோ இணையத்தில் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது. அந்த வீடியோவில் அஜித்குமார் 234 கி.மீ வேகத்தில் காரை இயக்குவது தெரியவருகின்றது. மேலும் இந்த வீடியோவானது, விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பின்போது, எடுக்கப்பட்ட வீடியோவாக இருக்கும் என பலர் கருத்து தெரிவித்தனர்.

சாட்சி: நடிகர் அஜித் டோன்ட் டச் மீ என தன்னிடம் கூறியதாக யோகி பாபு தெரிவித்ததாக பிஸ்மி கூறியது பெரிய விவகாரமாக மாறியுள்ளது. இந்நிலையில் பிரபல வி.ஜே. விஜயசாரதி தனது எக்ஸ் பக்கத்தில் நடிகர் அஜித்தை தான் பேட்டி எடுத்தபோது நடந்த சம்பவத்தைப் பகிர்ந்துள்ளார். அதில், “ இந்த பேட்டிக்கு வந்த திரு.அஜித், அரங்கில் நுழைந்ததும்,அங்கு இருந்த கேமிராமேன்,உதவியாளர், டிராலி தள்ளுபவர்,கலை வடிவம் & உதவியாளர், ஆன்லைன் எடிட்டர்,அரங்க உதவியாளர்,பாதுகாவலர்கள், ஆபீஸ் பாய் அனைவருக்கும் கை குலுக்கி பேசியதை நான் பார்த்தவன்”எனக் குறிப்பிட்டுள்ளார்.
பேட்டி: நடிகர் அஜித்குமார் அதிகம் ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்காதவர், தனது ரசிகர் மன்றத்தைக் கலைத்த பின்னர் ஊடகங்களுக்கு பேட்டி கொடுப்பதை முற்றிலுமாக நிறுத்திக் கொண்டவர். அஜித்குமார் பேட்டி என்றாலே பிரபல தனியார் தொலைகாட்சிக்கு அவர் அளித்த பேட்டிதான் இன்றைக்கும் இணையத்தில் உலா வரும். அஜித் குமாரை பேட்டி எடுத்தவர், பிரபல வி.ஜே. விஜயசாரதி. அஜித் குமார் குறித்து பலராலும் கவனிக்கத்தக்க பிரச்னை உலா வரும் நேரத்தில் இவரது பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











