நான் யாரு… கொய்யால நான் யாரு… டெரர் வில்லனாக மிரட்டிய வேலா ராமமூர்த்தி !
சென்னை : ஒரு திரைப்படத்திற்கு ஹீரோ எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு வில்லன் முக்கியம்.
ஹீரோவுக்கு ஈக்குவளா வில்லனால் மக்கள் மனதில் இடம் பிடிக்கனும்னா அது மிகவும் சவாலானது.
ஊரே நடுங்கும் வில்லனாக நடித்த வேலா ராம மூர்த்தி இப்போது பெரும்பாலும் குணசித்திர கதாபாத்திரங்களை நடிக்கிறார். அந்த டெர் வில்லனைப்பற்றி இப்போது பார்க்கலாம்.

ஆதித வில்லத்தனம்
எம்ஜிஆர் நம்பியார் கமினேஷன் திரைப்படம் என்றால் மக்கள் மிகவும் ரசித்து பார்ப்பார்கள். காரணம்... நம்பியாரின் அதீத வில்லத்தனம். எம்ஆர்ராதா, அசோகன், செந்தாமரை,மனோகர் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்து உச்சம் தொட்டவர்கள்.

சுவாரசியம்
இவர்களைத் தொடர்ந்து, நாசர், ரகுவன், ராதாரவி, பிரகாஷ் ராஜ், மன்சூர் அலி கான், ஆனந்த் ராஜ், நெப்போலியின் என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. ஆனால், சமீபகாலமாக வெளியாகும் திரைப்படங்களில் கார்ப்ரேட் முதலாளிகளே வில்லாக வருவதால் வில்லத்தனத்தில் சுவாரசியம் குறைந்து போனது போல இருக்கிறது. கொடூரமான வில்லத்தனம் பாடி லாங்குவேஜ் மிஸ் ஆகுறமாதிரி இருக்கு.

வாத்தியார்
சமீபகாலமாக, வில்லனாகவும்,குணச்சித்திரம் மக்கள் மனதில் பதிந்து இருக்கிறார் வேலா ராமமூர்த்தி. யாரு இந்த வேலா ராமமூர்த்தி.. விஜய்சேதுபதி நடித்து மெகா ஹிட்டடித்த சேதுபதி படத்தில் வாத்தியாராக நடித்து அடேங்கப்பா என வாய் திறக்க வைத்தவர் தான் இந்த வேலா ராமமூர்த்தி.

வில்லத்தனத்தின் உச்சம்
இந்த படத்தில் ஒரு காட்சியில் அவர் மருமகனை கொளுத்திவிட்டு "என்ன சேதுபதி இனி உன் வாழ்க்கையில நடக்குற ஒன்னு ஒன்னும் நான் எடுக்குற முடிவாத்தான் இருக்கும்" ஓடு ஓடு போய் பொண்டாட்டி புள்ளைய காப்பாத்திக்கோனு சொல்லும் தோரணையில் வில்லத்தனத்தின் உச்சமிருக்கும். இந்த காட்சி முடிஞ்சதும் வரும் பாடல் "நான் யாரு ... கொய்யாலா நான் யாரு...காட்சியில் வேலா ராமமூர்த்தியின் சிரிப்புக்கு பல சபாஷ் போடலாம். இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு இவரது அசால்டான நடிப்பும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.

மாஸ் வில்லனாக
ஆயுதம் செய்வோம் திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து திரைத்துறையில் அறிமுகமானார் வேலா ராம மூர்த்தி. இதையடுத்து கொம்பன், பாயும் புலி, ரஜினிமுருகன் போன்ற படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்த வேலா ராமமூர்த்தி. சேதுபதி படத்திற்கு பிறகு அனைவருக்கும் பிடித்த வில்லனாக மாறிவிட்டார். அதே போல கிடாரி படத்திலும் வில்லத்தனத்தின் உச்சம் தொட்டு இருப்பார் வேலா ராமமூர்த்தி. ஆனால் தற்போது குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இவர் தொடர்ந்து வில்லன் ரோலில் நடித்திருந்தால் மிகவும் டெர்ரான வில்லன் நமக்கு கிடைத்து இருப்பார்.


Click it and Unblock the Notifications











