பிக்பாஸ் வீட்டின் பெண் போட்டியாளர்கள்.. விக்ரம் படத்துல நடிச்ச மகேஸ்வரியும் லிஸ்ட்ல இருக்காங்களே!

சென்னை : பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி மிகவும் பிரம்மாண்டமான அளவில் இன்று மாலை 6 மணிக்கு துவங்கவுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 10 பெண் போட்டியாளர்கள், 9 ஆண் போட்டியாளர்கள் மற்றும் திருநங்கை ஒருவர் என மொத்தம் 20 பேர் பங்கேற்கவுள்ளனர்.

இவர்கள் அனைவரும் நேற்றிரவே பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று விட்டனர். தொடர்ந்து நிகழ்ச்சியின் ப்ரமோக்களும் வெளியாகி வருகின்றன.

 பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி

விஜய் டிவியின் முக்கியமான மற்றும் முதன்மையான நிகழ்ச்சியாக காணப்படும் பிக்பாஸ் இதுவரை 5 சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. இந்த நிகழ்ச்சி இந்திய அளவில் பல மொழிகளில் ஒளிபரப்பாகி வரும் நிலையில், கடந்த 5 ஆண்டுகளாக ஏராளமான ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நிகழ்ச்சியாக உள்ளது.

சிறப்பான ப்ரமோக்கள்

சிறப்பான ப்ரமோக்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 6 நிகழ்ச்சிக்கான அறிவிப்பு தொடர்ந்து ப்ரமோக்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த நிகழ்ச்சியையும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்கவுள்ளார். இந்தியன் 2 படப்பிடிப்பில் பங்கேற்றிருந்த அவர், இந்த நிகழ்ச்சிக்காக ஒரு மாத கால இடைவெளி எடுத்துள்ளார்.

10 பெண் போட்டியாளர்கள்

10 பெண் போட்டியாளர்கள்

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் குறித்த பல்வேறு யூகங்கள் கடந்த சில வாரங்களாகவே இணையதளத்தில் ட்ரெண்டாகி வந்த சூழலில் தற்போது இந்த நிகழ்ச்சியில் 10 பெண் போட்டியாளர்கள், 9 ஆண் போட்டியாளர்கள் மற்றும் ஒரு திருநங்கை போட்டியிட உள்ளனர். இவர்கள் அனைவரும் நேற்றைய தினமே பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுவிட்டனர்.

பொதுமக்கள் பங்கேற்பு

பொதுமக்கள் பங்கேற்பு

நிகழ்ச்சியின் அடுத்தடுத்த ப்ரமோக்கள் வெளியாகி ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் இந்த முறை பொதுமக்களும் கலந்துக் கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் எப்படி, எந்த வகையில் நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சர்ச்சைக்குரிய போட்டியாளர்கள்

சர்ச்சைக்குரிய போட்டியாளர்கள்

இந்த நிகழ்ச்சியில் 10 பெண் போட்டியாளர்கள் கலந்துக் கொண்டுள்ளனர். இந்த முறை மாடல்கள் மற்றும் நடிகைகள் அதிகமாக பங்கேற்றுள்ளனர். இதன்மூலம் இந்த ஷோ மிகவும் கவர்ச்சிகரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சர்ச்சைக்குரியவர்கள் இந்த நிகழ்ச்சியில் அதிகமாக உள்ளனர்.

போட்டியாளர் விஜே மகேஸ்வரி

போட்டியாளர் விஜே மகேஸ்வரி

இந்த பெண் போட்டியாளர்களில் விஜே மகேஸ்வரியும் இடம்பெற்றுள்ளார். இவர் சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார். 3 மனைவிகளில் ஒருவராக நடித்து கவனத்தை ஈர்த்திருந்த நிலையில், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் பங்கேற்கவுள்ளார்.

விக்ரம் பட நாயகி

விக்ரம் பட நாயகி

சமுத்திரக்கனிக்கு ஜோடியாக ரைட்டர் படத்திலும் நடித்துள்ளார். முன்னதாக விஜேவாக செயல்பட்ட இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். சில சீரியல்களிலும் நடித்துள்ளார். அதன்மூலமே இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி இவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்றுத் தரும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X