கவுதம் மேனன் - சிம்பு படத்திற்கு கதை எழுதும் பிரபல எழுத்தாளர்!

சென்னை: கவுதம் மேனன் - சிம்பு மூன்றாவது முறையாக இணையும் படம் நதிகளிலே நீராடும் சூரியன்.

இந்த படத்திற்கு ரஹ்மான் இசையமைக்கிறார். Vels Film International நிறுவனம் படத்தை தயாரிக்கிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் இறுதியில் தொடங்கவுள்ளது என சொல்லப்படுகிறது.

ரசிகர்கள் விரும்பும்

ரசிகர்கள் விரும்பும்

விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களை தொடர்ந்து கவுதம் மேனன் - சிம்பு -
ஏ. ஆர். ரஹ்மான் மூன்றாவது முறையாக இணையும் படம் நதிகளிலே நீராடும் சூரியன். இந்த கூட்டணி ரசிகர்கள் மிகவும் விரும்பும் கூட்டணியாக அமைந்துள்ளது.

பிஸியாக உள்ளனர்

பிஸியாக உள்ளனர்

சிம்பு தற்போது மாநாடு படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். கூடிய விரைவில் மாநாடு படத்திற்கான பணிகள் முடிவடையவுள்ளது. கவுதம் மேனனும் சில படங்களில் நடித்து வருகிறார். நவரசா படத்தை இயக்கியும், ருத்ர தாண்டவம் படத்தில் நடித்தும் முடித்துள்ளார்.

எழுத்தாளர் ஜெயமோகன்

எழுத்தாளர் ஜெயமோகன்

இந்நிலையில் இம்மாத இறுதியில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகளை சென்னையில் படக்குழு தொடங்கவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்தன. தற்போது இந்த படத்திற்கு பிரபல எழுத்தாளரான ஜெயமோகனும் கதை எழுத உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

விடுதலை நூலாசிரியர்

விடுதலை நூலாசிரியர்

ஜெயமோகன் பிரபல எழுத்தாளர் ஆவார். தமிழ் & மலையாளம் மொழிகளில் பல நாவல்கள் எழுதியுள்ளார். தமிழில் பல படங்களில் எழுத்தாளராக பணியாற்றியுள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் அடுத்து வெளிவரவுள்ள விடுதலை படத்தினுடைய கதை இவருடைய சிறுகதையை அடிப்படையாக கொண்டது தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X