பிரபல யூட்யூபர் 27 வயதில் மரணம்.. அப்படி என்ன ஆச்சு?.. ரசிகர்கள் உச்சக்கட்ட ஷாக்

சென்னை: பிரபலமாவதற்கு இப்போது யூட்யூப் சேனல் இருந்தால் போதும் என்ற நிலை இருக்கிறது. இந்தியா முழுவதும் யூட்யூப் சேனல்களால் பிரபலமானவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் பிரபல யூட்யூபர் ஆங்கிரி ரான்ட்மேன். தனது சத்தமான குரலால் சினிமா விமர்சனம், விளையாட்டு விமர்சனம் செய்துவந்தவர் அவர். பலரிடம் ஃபேமஸாக இருந்த அவர் தற்போது உயிரிழந்திருக்கிறார். அவருக்கு வயது 27. அவரது உயிரிழப்பு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சமூக வலைதளங்களில் பெருகிவிட்ட காலம் இது. அப்போதெல்லாம் பிரபலமாக வேண்டும் என்றால் ஒவ்வொரு கம்பெனியாக ஏறி இறங்கி; சினிமாவில் அறிமுகமாகி; அதில் கடுமையாக உழைத்தால்தான் நடக்கும். ஆனால் இப்போது சமூக வலைதளங்கள் பெருகிவிட்டதால் அதன் மூலமே பிரபலமானவர்கள் தற்போது ஏகப்பட்ட பேர் இருக்கிறார்கள். அது ஒருவகையில் ஆரோக்கியமான விஷயமும்கூட.

Famous Youtuber Angry Rantman Passed Away Due to Heart Problem

செம லிஸ்ட்: சமூக வலைதளங்கள் மூலம் பிரபலமானவர்கள் ஏகப்பட்ட பேர் இருக்கின்றார்கள். இர்ஃபான், ஜிபி முத்து, காத்து கருப்பு கலை என அந்த லிஸ்ட் தமிழ்நாட்டில் நீண்டுகொண்டே செல்லும். இவர்களில் காத்து கருப்பு கலை மட்டும் டபுள் மீனிங்காக பேசி வீடியோக்கள் போட்டுக்கொண்டிருந்தார். அது கண்டனத்தை சம்பாதித்தது. அதனையடுத்து அப்படி செய்வதை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க ஆரம்பித்திருக்கிறார். ஜிபி முத்துவை பற்றி சொல்லவே வேண்டாம்; டிக் டாக்கில் பிரபலமாகி பிக்பாஸில் கலந்துகொள்ளும் அளவுக்கு சென்றார். மேலும் சில படங்களிலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

ஆங்கிரி ரான்ட்மேன்: தமிழ்நாட்டில் இப்படி என்றால் வட மாநிலங்களிலும் பிரபலமான யூட்யூபர்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் ஆங்கிரி ரான்ட்மேன். கொல்கத்தாவை பூர்வீகமாகக் கொண்ட அவர் ஆங்கிரி ரான்ட்மேன் என்ற யூட்யூப் சேனல் வைத்திருந்தவர்அப்ரதீப் சாஹா. இவரது யூட்யூப் சேனலுக்கு மொத்தம் 488K சப்ஸ்க்ரைபர்கள் இருக்கிறார்கள். அதேபோல் இன்ஸ்டாகிராம் பக்கத்துக்கும் 119k ஃபாலோயர்ஸ் இருக்கிறார்கள்.

தனித்த அடையாளம்: ஏதாவது வித்தியாசமாக செய்தால் விரைவில் மக்களிடம் ரீச் ஆகலாம் என்பதற்கு உதாரணம்தான் ஆங்கிரி ரான்ட்மேன். பலரும் நார்மலான வாய்ஸில் சினிமா விமர்சனத்தை செய்துகொண்டிருக்க இவரோ சத்தமான குரலில் அந்த விமர்சனத்தை செய்வார். அதனாலேயே அவர் குறுகிய காலத்திலேயே ஃபேமஸ் ஆனார். அவரது வீடியோவை பார்த்த ரசிகர்கள் இவருக்கு இருப்பது தொண்டையா இல்லை ஸ்பீக்கரா என்றும் கமெண்ட்ஸ் செய்வார்கள். அண்மையில்கூட ஜோதிகா நடித்திருந்த ஷைத்தான் படத்துக்கு தனது ஸ்டைலில் ரிவ்யூ கொடுத்திருந்தார் ரான்ட்மேன். சினிமா தவிர்த்து விளையாட்டு தொடர்பாகவும் அவர் வீடியோக்களை பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.

உயிரிழப்பு: இந்நிலையில் 27 வயதாகும் ஆங்கிரி ரான்ட்மேன் உயிரிழந்துவிட்டார். அதாவது அப்ரதீப்புக்கு கடந்த சில காலமாகவே இருதயம் தொடர்பான பிரச்னை இருந்துவந்திருக்கிறது. அதனை சரி செய்வதற்காக பெங்களூரில் இருக்கும் நாராயண் இதய நோய் மையத்தில் சிகிச்சை பெற்றுவந்தார். அவருக்கு ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இருந்தாலும் அவரது உடல்நிலை மோசமடைந்தது. மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்தாலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

சில நாட்களுக்கு முன்புகூட அவரது தந்தை வெளியிட்டிருந்த ஒரு பதிவில், ஆங்கிரி ரான்ட்மேன் ஐசியுவில் இருக்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக குணமடைந்துவருகிறார். அவரது உயிரை காப்பதற்கான அத்தனை வழிகளையும் மருத்துவர்கள் செய்துவருவதாக கூறியிருந்தார். ஆனால் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். அவரது மரணம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X