நடிகை தீபிகா, ரன்வீர் சிங் என்னை திட்டி தாக்கினார்கள்: குமுறும் ரசிகை

By Siva

Recommended Video

ரசிகையை திட்டி தாக்கிய பிரபல முன்னணி நடிகர், நடிகை...வீடியோ

மும்பை: நடிகை தீபிகா படுகோனேவும், நடிகர் ரன்வீர் சிங்கும் தன்னை தாக்கியதாக பெண் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.

காதலர்களான நடிகை தீபிகா படுகோனேவும், நடிகர் ரன்வீர் சிங்கும் வரும் நவம்பர் மாதம் திருமணம் செய்து கொள்ள உள்ளனர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அவர்கள் யாருக்கும் தெரியாமல் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திற்கு சுற்றுலா சென்றனர்.

அங்கு அவர்கள் டிஸ்னிலேண்டிற்கு சென்றபோது பலருக்கும் அவர்களை அடையாளம் தெரியவில்லை.

வீடியோ

வீடியோ

ஜெய்னப் கான் என்ற ரசிகை தீபிகா மற்றும் ரன்வீரை அடையாளம் கண்டுகொண்டார். அவர் அவர்களை தூரத்தில் இருந்து வீடியோ எடுத்தார். இதை பார்த்த தீபிகா சிரித்தபடியே வந்து அந்த பெண்ணின் கேமராவை பறித்து, திட்டியதுடன் தன்னை தாக்கியதாக ஜெய்னப் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

ரன்வீர்

தீபிகா படுகோனே, ரன்வீர் சிங்கை வீடியோ எடுத்த ஜெய்னப் அதை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அந்த வீடியோ வைரலானது. இந்நிலையில் ரன்வீர் மற்றும் தீபிகா தன்னை திட்டியதுடன், தாக்கியதாக ஜெய்னப் புகார் தெரிவித்துள்ளார். ஒரு போட்டோ எடுத்துக் கொள்ளலாமா என்று கேட்டதற்கு தன்னை அவர்கள் திட்டியதாக ஜெய்னப் கூறியுள்ளார்.

சமூக வலைதளம்

சமூக வலைதளம்

நான் விடுமுறையை கழிக்க அங்கு சென்றிருந்தேன். நான் ரன்வீர், தீபிகாவை பின்தொடரவில்லை. அவர்களின் தீவிர ரசிகை என்பதால் வீடியோ எடுத்தேன். தூரத்தில் இருந்து என்னை போன்று யார் வேண்டுமானாலும் வீடியோ எடுத்திருக்கலாம். நான் வீடியோ எடுத்ததை பார்த்த தீபிகா சிரித்தபடியே என்னை நோக்கி வந்தார். நான் கூட அவர் புகைப்படத்திற்கு போஸ் கொடுக்க வருகிறார் என்று நினைத்தால் கண்டபடி திட்டிவிட்டார் என்கிறார் ஜெய்னப்.

திட்டு

திட்டு

நான் ரன்வீர், தீபிகாவை வீடியோ எடுத்தது தொடர்பாக அவர்களின் ரசிகர்கள் என்னை திட்டுகிறார்கள். ரன்வீர், தீபிகா ரசிகர்களை கொண்டாடுவது போன்று நடிக்கிறார்கள். நிஜத்தில் அவர்களை ஒரு முறை பாருங்கள், நான் சொல்வது உண்மை என்பது உங்களுக்கே தெரியும் என்கிறார் ஜெய்னப்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X