பிரபல நடிகையிடம் அந்த ஏடாகூட கேள்வியை கேட்ட ரசிகர்.. ஓவர் கடுப்பில், ஹீரோயின் சொன்ன பதிலை பாருங்க!

By

மும்பை: தன்னிடம் அந்த கேள்வியை கேட்ட ரசிகருக்கு காட்டமாக பதிலளித்துள்ளார் பிரபல நடிகை இலியானா.

தமிழில் கேடி படம் மூலம் அறிமுகமானவர் இலியானா. தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்தார்.

பின்னர் இந்தி படங்களில் கவனம் செலுத்திய அவர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு நண்பன் படம் மூலமாக தமிழுக்கு வந்தார்.

புகைப்படக் கலைஞர்

புகைப்படக் கலைஞர்

இந்தப் படத்தை ஷங்கர் இயக்கியிருந்தார். விஜய் ஹீரோவாக நடித்திருந்தார். ஶ்ரீகாந்த், ஜீவா, சத்யராஜ் உட்பட பலர் இதில் நடித்திருந்தனர். இவரும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஆண்ட்ரு நீபோன் என்பவரும் கடந்த சில வருடங்களாகக் காதலித்து வந்தனர். இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் பிரிந்து விட்டனர்.

தத்துவப் பதிவு

தத்துவப் பதிவு

இதனால், தனது காதலருடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளப் பக்கத்தில் இருந்து திடீரென நீக்கினார் இலியானா. இருவரும் ஒருவரை ஒருவர் பின் தொடர்வதை நிறுத்திக்கொண்டனர். பின்னர் காதல் பற்றி தத்துவமாக சில பதிவுகளை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டார், இலியானா. இது பரபரப்பானது. காதலரை பிரிந்துவிட்டதைப் பற்றி வெளிப்படையாக ஏதும் தெரிவிக்காத நடிகை இலியானா, அதுபோன்ற கேள்விகளைத் தவிர்த்து வந்தார்.

ரசிகர்கள் கேள்வி

ரசிகர்கள் கேள்வி

இந்நிலையில், கொரோனா காரணமாக, சினிமா படப்பிடிப்புகள், ரிலீஸ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இனி படப்பிடிப்புகள் எப்போது தொடங்கும் என்று தெரியவில்லை. படங்களின் ரிலீஸ் நிலவரம் பற்றியும் தகவல்கள் இல்லை. இதனால் சமூக வலைதளப்பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகர், நடிகைகள், அதில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வருகின்றனர்.

சினிமா அனுபவம்

சினிமா அனுபவம்

அதே போல நடிகை இலியானா, அவர் அபிஷேக்பச்சனுடன் இணைந்து நடித்துள்ள த பிக்புல் படம் ஒடிடியில் வெளியாவதை அடுத்து ரசிகர்களின் கேள்விக்கு, கடந்த செவ்வாய்க்கிழமை பதிலளித்தார். அவரிடம் பல ரசிகர்கள், படங்கள் பற்றியும் அவரது சினிமா அனுபவம் பற்றியும் கேட்டு வந்தனர். பிக் புல் படம் பற்றியும் கேட்டனர். அதற்கு ஜாலியாக பதிலளித்து வந்தார் இலியானா.

மூக்கை நுழைக்கலாமா?

மூக்கை நுழைக்கலாமா?

இதற்கிடையே ரசிகர் ஒருவர், கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு, நீங்கள் காதலில் இருக்கிறீர்களா, சிங்கிளாக இருக்கிறீர்களா? என்று கேட்டார். இந்தக் கேள்வியை எதிர்பார்க்காத நடிகை இலியானா கடுப்பானார். பின்னர், மூக்கு மற்றும் பற்கள் தெரியும்படியான ஒரு விலங்கின் புகைப்படத்தை பதிவிட்டு 'நாம அடுத்தவங்க விஷயங்கள்ல மூக்கை நுழைக்கலாமா?' என்று காட்டமாகக் கேட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X