'லவ்வரை பார்க்கணும்..கொஞ்சம் உதவி பண்ணுங்களேன்.. ரசிகர் கோரிக்கை.. நச் ரிப்ளை கொடுத்த நடிகர்!
சென்னை: தனது காதலியை சந்திக்க உதவுமாறு கேட்டவருக்கு காமெடியாக பதில் அளித்துள்ளார் பிரபல நடிகர், சோனு சூட்.
Recommended Video
விஜயகாந்தின் கள்ளழகர் படம் மூலம் நடிகராக அறிமுகமானவர். தொடர்ந்து, மஜ்னு, சந்திரமுகி, ஒஸ்தி, தேவி உட்பட பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.
இவர், கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களைக் காப்பாற்ற இரவும் பகலும் பாடுபட்டு வரும் மருத்துவர்கள், நர்ஸ்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் ஓய்வெடுக்க தனது ஓட்டலை கொடுத்திருந்தார்.

சொந்த செலவில்
பின்னர் தினமும் 45 ஆயிரம் தொழிலாளர்களுக்கு உணவு கொடுத்து வந்தார். இந்நிலையில் கொரோனாவால் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் சிக்கி தவிக்கும் புலம் பெயர் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல உதவி செய்து வருகிறார். பேருந்துகளை சொந்த செலவில் ஏற்பாடு செய்து அனுப்பி வரும் அவரை, பலரும் பாராட்டி வருகின்றனர்.

சூப்பர்மேனாக
படங்களில் வில்லனாக நடிக்கும் அவரை ஹீரோ என்று சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர். அவரை சூப்பர்மேனாக சித்தரித்தும் ஏராளமான மீம்ஸ்களை வெளியிட்டு வருகின்றனர். நடிகர் சோனு சூட்டின் இந்த உதவியை அறிந்த பலரும் தங்களின் சூழ்நிலையை எடுத்துக்கூறி ட்விட்டரில் உதவி கேட்டு வருகின்றனர். அவர்களுக்கும் மறுக்காமல் உதவி வருகிறார்

தேவைப்பட்டால்
இந்நிலையில் இளைஞர் ஒருவர் சோனு சூட்டிடம் வித்தியாசமான உதவியை கடந்த சில நாட்களுக்கு முன் கேட்டார். அதாவது லாக்டவுன் நேரத்தில் தான் மதுக்கடைக்கு போக உதவி செய்யுமாறு கேட்டிருந்தார். இதைக் கண்ட சோனு சூட், சகோ, மதுக்கடையில் இருந்து வீட்டில் கொண்டு சேர்க்கதான் என்னால் உதவ முடியும். அப்படி உதவி தேவைப்பட்டால் எனக்கு தெரியப்படுத்துங்கள்' என்று டைமிங்காக பதிலளித்திருந்தார்.

வித்தியாச உதவி
இந்த பதிலை பலர் ரசித்திருந்தனர். அல்ட்டிமேட் ரிப்ளை என்றும், உங்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம் என்றும் பாராட்டினர். இதையடுத்து மேலும் சில காமெடியான, சீரியசான கோரிக்கைகள் அவருக்கு சென்றுகொண்டிருக்கின்றன. இந்நிலையில், இன்னொருவர் வித்தியாசமான உதவியை அவரிடம் கேட்டுள்ளார்.

உண்மை காதல்
அதாவது, பையா, என் காதலி பீகாரில் இருக்கிறார். அவரை சந்திக்க உதவி செய்யுங்கள் என்று இந்தியில் கேட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு காமெடியான பதில் அளித்துள்ளார் சோனு சூட். அதாவது, கொஞ்ச நாள் தூரமா இருந்து பாருங்க பிரதர். அது உண்மையான காதலுக்கான டெஸ்ட் மாதிரியும் இருக்கும்' என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











