Vijay: வேட்டி சட்டையில் விஜய்.. நின்னு பேசும் இடம் தான் ஹைலைட்டே.. ரசிகர்களின் கற்பனையோ கற்பனைதான்!

சென்னை: நடிகர் விஜய், கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். இதனால் சினிமாவில் இருந்தும் முழுவதுமாக விலகுவதாக அறிவித்தார். இது ரசிகர்களுக்கு கவலை அளித்தது. மேலும் தனது கட்சியின் தலைமையில் கூட்டணி, தான் தான் முதலமைச்சர் வேட்பாளர் என்பதை ஏற்றுக் கொண்டு வருபவர்களை கூட்டணியில் சேர்த்துக் கொள்ள தயார் என்ற திட்டத்துடன் பிரச்சாரம் செய்து வருகிறார். இப்படி இருக்கும்போது விஜய் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குள் சென்றால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்துள்ள ரசிகர் ஒருவர், ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் உருவாக்கியுள்ள படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி அரசியலில் ஈடுபட்டு வருகிறார். கட்சி தொடங்கி இரண்டு ஆண்டுகள் கூட முழுவதுமாக முடியவில்லை. அப்படி இருக்கும்போது, அவரது அரசியல் நடவடிக்கைகள் சிலருக்கு திருப்தியைக் கொடுத்துள்ளது, பலருக்கு அதிருப்தியை கொடுத்துள்ளது. பிரச்சாரத்தில் முழுக்க முழுக்க ஆளும் கட்சியை எதிர்த்து விமர்சனங்களை முன் வைக்கும் விஜய், சில அரசியல் நடவடிக்கைகளில் கப் சிப் என அமைதியாக இருப்பது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகிறது.

செயல்பாடுகள்: பொது பிரச்னைகளில் இப்படியான விமர்சனங்களை எதிர் கொள்ளும் தமிழக வெற்றிக் கழகம், அவர்களின் கட்சி பிரச்சாரத்தில் ஏற்பட்ட நெரிசலில் இறந்த 41 பேரின் குடும்பத்தினரை மாமல்லபுரத்திற்கு வரவழைத்து அவர்களுக்கு விஜய் ஆறுதல் கூறியது மிகப்பெரிய விமர்சனத்திற்கு ஆளாக்கியது. சில இடங்களில் விஜய் முன்வைக்கும் விமர்சனங்கள் அரசியல் களத்தில் கவனத்தை ஈர்த்தாலும், பல இடங்களில் அவர் பேசும் போது சொல்லும் தரவுகள் என்பது உண்மைக்கு மாறாக இருப்பதும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. சில அரசியல் ஆளுமைகள் விஜய் சொல்லும் தரவுகள் தவறு என்று, புள்ளி விபரத்துடன் விளக்கி பதிலடி கொடுப்பதை பார்க்க முடிகிறது.

அரசியல் களம்: அரசியல் களத்தில் காலடி எடுத்து வைத்து இரண்டு ஆண்டுகள் கூட முழுவதுமாக முடியவில்லை. ஆனால் அதற்குள் பல விமர்சனங்கள், பல சறுக்கல்கள் என அரசியல் புரிந்த பலருக்கும் அதிருப்தியான மற்றும் நம்பிக்கையை ஏற்படுத்தாத தலைவராக தான் பார்க்கப்படுகிறார். அதே நேரத்தில் அவரது ரசிகர்களின் பெரும்பாலானவர்கள் மத்தியில் ஒரு பெரும் நம்பிக்கையை விஜய் ஏற்படுத்தி உள்ளார் என்பதையும் மறுக்க முடியாது.

Fan Boy Who Create AI Photos For Vijay Gave Speech In Tamil Nadu Assembly Which Attracts Social
Photo Credit:

ஏ.ஐ. புகைப்படங்கள்: இப்படி இருக்கும்போது வரும் சட்டமன்ற பொதுத் தேர்தலில் விஜய் வெற்றி பெற்று, சட்டமன்றத்திற்கு சென்று உரை ஆற்றினால் எப்படி இருக்கும் என்ற கற்பனையில், ரசிகர் ஒருவர் ஏ.ஐ தொழில்நுட்பத்தின் மூலம் சில புகைப்படங்களை உருவாக்கி உள்ளார். அவை ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக விஜய் வெள்ளை வேட்டி- வெள்ளை சட்டை உடன், தமிழ்நாட்டிற்கே உரிய அரசியல் பாணியில், சட்டமன்றத்தில் பேசுவது போன்ற புகைப்படங்களை உருவாக்கி உள்ளார். இப்புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் ஃபயர் விட்டு வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X