அஜித்தின் கட்அவுட் சரிந்து விழுந்ததில் ரசிகர் பலி: கொண்டாட்டம் சோகமான விபரீதம்
Recommended Video

விழுப்புரம்: திருக்கோவிலூரில் அஜித்தின் கட்அவுட் சரிந்து விழுந்ததில் ரசிகர் ஒருவர் பலியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்த விஸ்வாசம் படம் பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக நேற்று ரிலீஸானது. தியேட்டர் வாசல்களில் அஜித்துக்கு கட்அவுட் வைத்து ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்தனர்.

விழுப்புரம் அருகே உள்ள திருக்கோவிலூரில் கட்அவுட் வைத்தது விபரீதத்தில் முடிந்துவிட்டது. திருக்கோவிலூரில் உள்ள ஸ்ரீனிவாசா தியேட்டர் வாசலில் அஜித்துக்கு பிரமாண்ட கட்அவுட் வைத்தனர்.
ரசிகர்கள் சிலர் கட்அவுட் மீது ஏறி மாலை அணிவித்து பாலாபிஷேகம் செய்தனர். அப்பொழுது திடீர் என்று அந்த ராட்சத கட்அவுட் சரிந்து விழுந்தது. இதில் 3 ரசிகர்கள் காயம் அடைந்தனர்.
இந்நிலையில் கட்அவுட் விழுந்ததில் அஜித் ரசிகர் ஒருவர் உயிர் இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஸ்வாசம் படத்தை கொண்டாட சென்ற ரசிகர் பலியான சம்பவம் அஜித் ரசிகர்களை கவலை அடைய வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











