விஜய் அண்ணாவை பார்த்ததும் கட்டிப்புடிச்சு அழுதுட்டேன்.. எமோஷனலாக கண்கலங்கிய இளம்பெண்!

சென்னை: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில், தனது முதல் மாநாட்டை பல தடைகளை தாண்டி வெற்றிகரமாக விக்கிரவாண்டியில் உள்ள வி. சாலையில் அக்டோபர் மாதம் நடத்திக் காட்டி அசத்தினார். பல ஊர்களில் தனது மாநாட்டை நடத்த விஜய் திட்டமிட்ட நிலையில், சரியாக அவருக்குத் தேவையான அளவுக்கு இடம் கிடைக்கவில்லை. இறுதியில் விக்கிரவாண்டி மக்கள் இடம் அளித்த நிலையில், அவர்களை அழைத்து இன்று படுஜோரான விருந்தை வைத்து அவர்களுக்கு நினைவு பரிசும் வழங்கியுள்ளார்.

2026ம் ஆண்டு ஆண்டு தமிழ்நாட்டில் அரசியல் மாற்றத்தை நிகழ்த்திக் காட்டுவேன் என்றும் கரப்ஷன் கபடதாரிகள் மற்றும் குடும்பமாக சுரண்டுகின்றனர் என திமுகவை டைரக்ட் அட்டாக் செய்து விஜய் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

vijay tvk thalapathy 69

சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்து வரும் விஜய் தளபதி 69 படத்தை விரைவில் முடித்துவிட்டு முழு நேர அரசியல் தலைவராக மாறவுள்ள நிலையில், தற்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் போது கூட கட்சியில் என்ன நடக்கிறது என்றும் அடிக்கடி மக்களை சந்தித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்கிற முடிவில் தீவிரமாக இருந்து வருவதாக கூறுகின்றனர்.

இடமளித்த மக்களுக்கு நன்றிக்கடன்: பனையூரில் நடிகர் விஜய் இன்று தனது அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு இடம் அளித்த மக்களின் குடும்பத்தையே அழைத்து மெகா விருந்து கொடுத்துள்ளார். விருந்து நடக்கும் இடத்துக்கு விஜய் வெள்ளை சட்டை அணிந்து அப்படியே அரசியல் தலைவராக வந்ததை பார்த்த ரசிகர்கள் தளபதி எனக் கூச்சலிட்டனர். ரசிகர்களையும் தொண்டர்களையும் பார்த்து கையசைத்தும் கைக்கூப்பியும் நன்றி தெரிவித்த விஜய் மாநாட்டுக்கு இடமளித்த குடும்பங்களை உட்கார வைத்து அவர்களுக்கு உணவும் பரிமாறியுள்ளார்.

vijay tvk thalapathy 69

அண்ணாவ பார்த்ததும் கட்டிப்புடிச்சு அழுதுட்டேன்: தவெக தலைவர் விஜய் நிச்சயம் அரசியலில் மாற்றத்தை கொண்டு வருவார் என்றும் எங்களுடைய ஓட்டு 2026ம் ஆண்டு தேர்தலில் தளபதி விஜய்க்குத்தான் என ஏகப்பட்ட மக்கள் உணர்ச்சி பொங்க பேசினர். கமலி எனும் இளம்பெண் அழுதுகொண்டே விஜய் அண்ணாவை பார்த்ததும் கட்டிப்புடிச்சு அழுதுட்டேன் என்றார். ஏன்மா அழுகுற என விஜய் கேட்க, இன்னமும் அழுதுட்டேன் என அந்த இளம்பெண் பேட்டிக் கொடுத்த காட்சிகளை விஜய் ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து இதுதான் எங்க தளபதியோட கெத்து என டிரெண்ட் செய்து வருகின்றனர்.

vijay tvk thalapathy 69

தளபதி 69 லுக்: லியோ படத்தில் சிங்கம் போல பார்த்திபன் கெட்டப்பிற்கு விஜய்யின் லுக் இருந்தது. கோட் படத்தில் இளம் விஜய்யின் ஹேர் ஸ்டைல் குறித்து ஏகப்பட்ட விமர்சனங்கள் கிளம்பின. இந்நிலையில், தளபதி 69 படத்தில் ரசிகர்கள் எதிர்பார்க்கும் செம ஸ்டைலிஷ்ஷான லுக்கில் விஜய் நடித்து வரும் நிலையில், இந்த லுக் படத்தில் வேறலெவலில் இருக்கப் போகிறது என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X